கொரோனா வைரஸ் தொற்று சந்தேகம் : சீனா சென்று திரும்பிய மூன்று இலங்கையர்கள் வைத்தியசாலையில்

நாடளாவிய ரீதியில் 14 பேர் வைத்தியசாலைகளில்; தியத்தலாவையில் உள்ள 33 பேரும் நலம்

0 850

கொரோனா வைரஸ் தொற்­றுக்­குள்­ளா­ன­தாக சந்­தே­கத்தில், சீனா­வி­லி­ருந்து நாடு திரும்­பிய மூன்று இலங்­கை­யர்கள் அங்­கொடை தொற்­றுநோய் தடுப்பு வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­க­ளுக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

நேற்று முன்­தினம் அவர்கள் இவ்­வாறு அங்­கொடை தொற்­றுநோய் தடுப்பு வைத்­தி­ய­சா­லைக்கு சிகிச்­சை­க­ளுக்­காக வந்­த­தா­கவும், அவர்­க­ளுக்கு அந்த தொற்று இருப்­பது இது­வரை உறுதி செய்­யப்­ப­டா­த­போதும் தொடர்ந்து பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் குறித்த வைத்­தி­ய­சா­லையின் தொற்­றுநோய் குறித்த சிரேஷ்ட வைத்­திய நிபுணர் வைத்­தியர் ஆனந்த விஜே­விக்­ரம தெரி­வித்தார்.

அத்­துடன் இது­வரை இலங்­கையில் கொரோனா வைரஸ் தொற்­றுக்கு இலக்­கான ஒரு­வரே கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தா­கவும், அந்த சீனப் பெண்­ணுக்கும் சிகிச்­சை­ய­ளிக்­கப்­பட்டு அவர் தற்­போது குண­ம­டைந்­துள்­ள­தா­கவும் அவர் கூறினார். இந்­நி­லையில் அவரை வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து வீட்­டுக்கு செல்ல அனு­ம­திக்க முன்னர், அவர் சீனா திரும்­பு­வ­தாக இருப்பின் அவ்­வ­ளவு தூரம் பய­ணிக்க முடி­யு­மான இய­லுமை உள்­ளிட்ட அனைத்து விட­யங்­க­ளையும் ஆராய்ந்த பின்­ன­ரேயே அந்த அனு­ம­தியை வழங்க முடி­யு­மென அவர் சுட்­டிக்­காட்­டினார்.

எவ்­வா­றா­யினும், குறித்த சீனப் பெண், தொடர்பில் சில பரி­சோ­த­னை­களின் முடிவு இன்று பெரும்­பாலும் கிடைக்­க­வுள்­ள­தா­கவும், சீனப் பெண்ணை வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து வெளி­யேற அனு­ம­திப்­பது குறித்த தீர்­மா­னத்தை சிகிச்­சை­ய­ளித்த வைத்­தி­யர்­களும், தொற்­றுநோய் குறித்த விஷேட வைத்­திய நிபு­ணர்­களும் இணைந்து பேசி முடி­வெ­டுப்பர் எனவும் பதில் சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் லக் ஷ்மன் கம்லத் தெரி­வித்தார்.

கொரோனா வைரஸின் பூர்­வீ­க­மாகக் கரு­தப்­படும் சீனாவின் வூஹான் பிராந்­தி­யத்­தி­லி­ருந்து மீட்­டு­வ­ரப்­பட்ட 33 இலங்­கை­யர்கள் நேற்று நான்­கா­வது நாளா­கவும், தியத்­த­லாவை இரா­ணுவ முகாமில் அமைக்­கப்­பட்­டுள்ள விஷேட தொற்­றுநோய் கண்­கா­ணிப்பு மையத்தில் மருத்­துவக் கண்­கா­ணிப்­பி­லுள்ள நிலையில், நேற்­று­வரை அவர்­க­ளுக்கு கொரோனா தாக்கம் உள்­ளமை தொடர்பில் சந்­தே­கிக்­கும்­ப­டி­யான எந்த அறி­கு­றி­களும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்­லை­யென பதில் சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் லக் ஷ்மன் கம்லத் மேலும் தெரி­வித்தார். அதனால் பெரும்­பாலும் அடுத்­து­வரும் 10 நாட்­களில் குறித்த 33 பேரையும் அவர்­க­ளது குடும்­பத்­தா­ருடன் சேர்க்க முடி­யு­மாக இருக்­கு­மென நம்­பு­வ­தா­கவும் அவர் கூறினார்.

இத­னி­டையே சுமார் 2000 பய­ணி­க­ளுடன் விஷேட பய­ணிகள் கப்­ப­லொன்று பெரும்­பாலும் இன்று கொழும்புத் துறை­மு­கத்தை வந்­த­டை­ய­வுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. அதனால் அக்­கப்­பலில் வரும் பய­ணி­களில் கொரோனா வைரஸ் தொற்­றுள்­ள­வர்கள் இருப்பின் அத­னூ­டாக நாட்­டுக்குள் அத்­தொற்று ஏற்­ப­ட­லா­மென அச்சம் தெரி­விக்­கப்­படும் நிலையில் அது­கு­றித்தும் தீவிர அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றா­யினும், கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை ஒத்த விஷேட சுகா­தார பாது­காப்பு கொழும்பு துறை­முகம் உள்­ளிட்ட அனைத்து துறை­மு­கங்­க­ளிலும் செய்­யப்­பட்­டுள்­ள­தாக துறை­முக அதி­கார சபை தெரி­வித்­துள்­ளது. அதனால் துறை­முகம் ஊடாக குறித்த வைரஸ் பரவ வாய்ப்­பில்லை எனவும் அந்த அதி­கார சபை கூறி­யது.

எவ்­வா­றா­யினும், குறித்த பய­ணிகள் கப்­பலில் வரும் ஒவ்­வொரு பய­ணி­யையும் விஷேட சோத­னைக்­குட்­ப­டுத்த சுகா­தார அமைச்சின் உத­வி­யுடன் விஷேட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அதற்குத் தேவை­யான ஸ்கேனர் உள்­ளிட்ட உப­க­ர­ணங்கள் துறை­மு­கத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பதில் சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் லக் ஷ்மன் கம்லத் தெரி­வித்தார். இந்­நி­லையில் இலங்­கையில் கொரோனா வைரஸ் தொற்று இருக்­க­லா­மெனும் சந்­தே­கத்தில் 14 பேர் 5 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் லக் ஷ்மன் கம்லத் தெரிவித்தார்.

அங்கொடை தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலையில் நால்வர், நீர்கொழும்பு, ராகம வைத்தியசாலைகளில் தலா ஒவ்வொருவர், கண்டி வைத்தியசாலையில் 6 பேர் மற்றும் குருநாகல் வைத்தியசாலையில் இருவர் வீதம் இவ்வாறு சிகிச்சை பெறுவதாகக் கூறிய அவர், அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்றார்.-Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.