சக்தி வலு உற்பத்தியில் இலங்கைக்கு உதவ கட்டார் அரசாங்கம் இணக்கம்

ஜனாதிபதி - கட்டார் சக்தி வலு அமைச்சருக்கிடையிலான சந்திப்பில் உறுதியளிப்பு

0 659

சக்தி வலு உற்­பத்­திக்கு நம்­ப­க­மா­ன­தொரு வலை­ய­மைப்பை நிறு­வு­வ­தற்கு இலங்­கைக்கு உதவ கட்டார் அரசு முன்­வந்­துள்­ளது. இது சக்தி வலுத்­து­றையில் உயர்­மட்ட நிறு­வ­னங்­களின் கூட்­ட­மைப்பை இந்­நோக்­கத்­திற்­காக கொண்டு வரும்.

கட்டார் நாட்டின் சக்தி வலு விவ­கா­ரத்­துறை அமைச்சர் சாத் ஷெரிதா அல் காபி நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை காலை ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்தில் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவை சந்­தித்­த­போது இந்த உறு­தி­மொ­ழியை அளித்­துள்ளார்.

சந்­திப்பு தொடர்பில் ஜனா­தி­பதி ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­துள்­ள­தா­வது:
தேர்­தலில் வெற்றி பெற்றுக் கொண்­ட­மைக்கு ஜனா­தி­ப­திக்கு வாழ்த்து தெரி­வித்த கட்டார் அமைச்சர், தனது நாட்டின் முன்­மொ­ழிவை அமுல்­ப­டுத்­து­வது தொடர்­பான விட­யங்­களைப் பற்றி கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கான இலங்கை பிர­தி­நி­தியை பரிந்­து­ரைக்­கு­மாறு கேட்­டுக்­கொண்டார்.

அதற்கு பதி­ல­ளித்த ஜனா­தி­பதி, சக்தி வலு உற்­பத்­தியில் கட்­டாரின் ஒத்­து­ழைப்பைப் பெறு­வதில் மிகுந்த ஆர்வம் காட்­டு­வ­தாகத் தெரி­வித்தார். எதிர்­கா­லத்தில் புதுப்­பிக்­கத்­தக்க சக்தி வலு மூலங்­க­ளி­லி­ருந்து நாட்டின் 80 சத­வீத சக்தி வலு தேவை­களை பூர்த்தி செய்­வதே தனது திட்­ட­மாகும் என்றும் அவர் மேலும் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி, தனது செய­லாளர் கலா­நிதி பீ.பி.ஜய­சுந்­த­ரவை தனது பிர­தி­நி­தி­யாக நிய­மித்தார். மேல­திக கலந்­து­ரை­யா­டல்­க­ளுக்­காக ஜனா­தி­ப­தியின் செய­லாளர் டோஹா­வுக்கு அழைக்­கப்­ப­ட­வுள்ளார். இலங்­கையின் சக்தி வலு திட்டம் குறித்து இவ்­வி­ஜ­யத்­தின்­போது விளக்­கப்­படும்.

பாகிஸ்தான், போலந்து உள்­ளிட்ட பல நாடு­களில் இது­போன்ற முயற்­சி­களை தனது நாடு வெற்­றி­க­ர­மாக நிறு­வி­யுள்­ளது என்று கட்டார் அமைச்சர் குறிப்­பிட்டார்.

‘சக்தி வலு உற்­பத்­திக்கு அப்பால் கட்டார் அர­சுடன் இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்த நாம் விரும்­பு­கிறோம். எமது நாட்டின் தேயிலை, மரக்­கறி மற்றும் பழங்­க­ளுக்­கான சந்­தை­வாய்ப்­பையும் எதிர்­பார்க்­கின்றோம். இது­போன்ற உற்­பத்­திப்­பொ­ருட்­களை ஏனைய நாடு­க­ளுக்கும் வழங்­கு­வ­தற்­கான விரிவான ஆற்றல் எங்களிடம் உள்ளது’ என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த கட்டார் அமைச்சர், இலங்கைக்கான தனது இந்த விஜயம் இத்தகைய மேம்பட்ட ஒத்துழைப்பின் முதற் படியாக இருக்குமென்று குறிப்பிட்டார்.-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.