ஏப்ரல் 21 தாக்குதல் முஸ்லிம்களை ஏனைய சமூகங்களிடமிருந்து பிரித்து வைத்துள்ளது

0 75

பௌத்த – முஸ்லிம் உறவு தொடர்­பாக இடம்­பெறும் இரண்­டா­வது சர்­வ­தேச செய­ல­மர்வில் பங்­கு­பற்றக் கிடைத்­த­மையை பெரும் கௌர­வ­மாகக் கரு­து­கிறேன். தெற்­கா­சி­யா­விலும், தென் கிழக்­கா­சி­யா­விலும் சமய உட்­பி­ரி­வு­க­ளி­டை­யேயும், சம­யங்­க­ளி­டை­யேயும் கலந்­து­ரை­யா­டலை ஊக்­கு­வித்து முரண்­பா­டு­களை குறைப்­பது தொடர்­பாக இச்­செ­ய­ல­மர்வு இடம்­பெ­று­கி­றது.

தெற்­கா­சிய, தென்­கி­ழக்­கா­சிய நாடு­களில் அனைத்து சம­யங்­க­ளி­டையே சமய நல்­லி­ணக்கம் என்ற தொனிப் பொருளில் இங்கு உரை­யாற்­று­வ­தற்கு என்னை அழைத்­த­மை­யை­யிட்டு இந்­தோ­னே­சிய அர­சாங்­கத்­துக்கும் இச்­செ­ய­ல­மர்­விற்­கான ஒன்­று­கூ­டலை ஒழுங்­கு­ப­டுத்­திய ஏற்­பாட்டு குழு­வி­ன­ருக்கும் நான் நன்றி செலுத்­து­கின்றேன். விசே­ட­மாக இந்­தோ­னே­சியா, மலே­சியா, இலங்கை, தாய்­லாந்து, மியன்மார் ஆகிய நாடு­களில் கடந்த பல நூற்­றாண்­டு­க­ளாக நல்­லு­றவை அனு­ப­வித்து வரு­கிறோம். கடந்த பதி­னெட்டு ஆண்­டு­கா­ல­மாக மேற்­படி நாடு­களில் நான் ஒத்­து­ழைப்­புடன் செயற்­பட்டு வரு­கிறேன். பல்­வேறு சம­யங்­களை சார்ந்த மக்கள் எவ்­வாறு சமா­தா­னத்­து­டனும், நல்­லி­ணக்­கத்­து­டனும் கூடி­வாழ்­கி­றார்கள். சமா­தா­ன­மாக வாழும் சமூ­கங்­க­ளி­டையே அவர்­களின் ஒற்­று­மைக்கு தடைக்­கற்­க­ளாக உள்ள அம்­சங்கள் எவை என்­ப­தையும் நான் அவ­தா­னித்­துள்ளேன். எனவே இங்கு சில சிந்­த­னை­களை பகிர்ந்து கொள்ள விரும்­பு­கிறேன். குறிப்­பாக இச்­சிந்­த­னைகள் இலங்கை தொடர்­பாக அமை­ய­வுள்­ளன.

கடந்த ஏப்ரல் 21 இல் இலங்­கையில் சில சமய தீவி­ர­வா­தி­களால் அறி­யப்­ப­டாத கார­ணங்­க­ளுக்­காக ஈஸ்டர் ஞாயிறு தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டது. இலங்­கையில் இந்­நி­கழ்வு முஸ்­லிம்­களை ஏனைய சம­யங்­க­ளி­லி­ருந்து பிரித்து வைத்­துள்­ளது. ஆனால் பெரும்­பா­லான சீராக சிந்­திக்கும் முஸ்­லிம்கள் இவ்­வா­றான நிகழ்வு ஒரு­போதும் இலங்­கையில் இடம்­பெ­று­வதை விரும்­ப­வில்லை என்­பதை நான் இங்கு வலி­யு­றுத்த விரும்­பு­கிறேன். பெரும்­பாலும் மூன்­றா­வது நூற்­றாண்டு முதல் சிங்­க­ள­வர்­களும், முஸ்­லிம்­களும் இலங்­கையில் சமா­தா­ன­மாக வாழ்ந்­துள்­ளனர். சமயத் தீவி­ர­வா­தி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த பயங்­க­ர­வாதத் தாக்­குதல் பௌத்த, கிறிஸ்­தவ, முஸ்லிம், இந்து மக்­க­ளி­டையே காணப்­பட்ட சமூக நல்­லு­றவில் பார­தூ­ர­மான பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. கிறிஸ்­தவ தேவா­ல­யங்­களில் ஈஸ்டர் ஞாயி­றன்று வழி­பாட்டில் ஈடு­பட்­டி­ருந்த கிறிஸ்­த­வர்கள் மீதும், ஹோட்­டல்­களில் இருந்த உல்­லாசப் பய­ணிகள் மீதும் நடாத்­தப்­பட்ட மிகவும் மிலேச்­சத்­த­ன­மான பயங்­க­ர­வாத தாக்­கு­தலுள் ஒன்­றாக அமைந்­தமை கவ­லைக்­கு­ரி­யது.

இத்­தாக்­குதல் இடம்­பெற்­றது முதல் சிங்­கள சமூகம் முஸ்­லிம்­களை அவ­ம­திக்கத் தொடங்­கி­யது. அவர்­க­ளுடன் கூடி வாழ்­வதை அசௌ­க­ரி­ய­மா­ன­தாக உணர்ந்­தனர். முஸ்­லிம்­க­ளது நிறு­வ­னங்­களை சிங்­க­ள­வர்கள் பகிஷ்­க­ரித்­தனர். பல நூற்­றாண்­டு­க­ளாக இரு சமூ­கங்­களும் அனு­ப­வித்து வந்த நம்­பிக்கை பிள­வு­படத் தொடங்­கி­யது. இரு சம­யங்­க­ளி­டையில் ஏற்­பட்­டுள்ள இடை­வெ­ளியை நிரப்­பு­வது சமயத் தலை­வர்கள் என்ற வகையில் தற்­போது எமது பொறுப்­பாக அமைந்­துள்­ளது. இலங்கை போன்ற சிறு தீவில் அனைத்து சம­யங்­க­ளி­டையே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முய­ல­வேண்டும். இதன்­மூலம் ஒரு நாட்டில் அனைத்து சம­யங்­களும் எவ்­வாறு நல்­லி­ணக்­கத்­துடன் வாழ முடி­யு­மென உல­கிற்கு எடுத்­து­ரைக்கும் முன்­னு­தா­ர­ண­மாக இலங்­கையை உரு­வாக்­கலாம்.

சமய நல்­லி­ணக்கம் என்ற பின்­பு­லத்தில் அனைத்து சம­யங்­க­ளுக்கும் பொதுத் தள­மாக அமை­கின்ற பொது நியதி காணப்­ப­டு­கி­ற­தென நான் நினைக்­கின்றேன். நீங்கள் எவ்­வாறு நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென விரும்­பு­கி­றீர்­களோ அவ்­வாறே பிற­ரையும் நடத்­துங்கள். உங்­க­ளுடன் பிறர் எவ்­வாறு செயற்­ப­ட­வேண்­டு­மென நீங்கள் எதிர்­பார்க்­கி­றீர்­களோ அவ்­வாறே பிறர் மீதான உங்­க­ளது செயற்­பாடு அமை­யட்டும். மேற்­படி நிய­தியை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பௌத்தம் கரு­ணையை போதிக்­கி­றது. மன்னர் அவ்­ரங்­கசீப் அவர்­க­ளுக்கு சட்­ர­பதி சிவாஜி எழு­தி­ய­தாகக் கரு­தப்­படும் கடி­தத்தை உசாத்­து­ணை­யாக வைத்து அவர் கூறி­ய­தாகப் பின்­வ­ரு­மாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. தெய்­வீக உணர்வின் அழ­கிய வெளிப்­பா­டாக இந்து சம­யமும், இஸ்­லாமும் அமைந்­துள்­ளன. பள்­ளி­வா­சலில் தொழு­கைக்­கான அழைப்பு விடுக்­கப்­ப­டு­கி­றது. கோவில்­களில் தெய்­வீக மகத்­து­வத்தை பறை­சாற்றும் மணி ஒலிக்­கி­றது. மத வெறி­யையும், சமய வெறுப்­பு­ணர்­வையும் கொண்­ட­வர்கள் இறை கட்­ட­ளை­க­ளுக்கு முர­ணாக செயற்­ப­டு­கின்­றனர்.

எந்தக் கார­ணத்­திற்­கா­கவும் மனித உயிர்­களை அழிக்­கு­மாறு எந்­த­வொரு சம­யமும் போதிக்­க­வில்லை என்­பது உண்­மை­யாகும். பௌத்­தர்­களின் கைநூ­லான தம்­ம­ப­தவில், “அனை­வரும் பலத்­திற்கு அஞ்சி நடுங்­கு­கின்­றனர். அனை­வரும் மர­ணத்­திற்கு பயப்­ப­டு­கின்­றனர். ஏனை­ய­வர்­களை தம்­முடன் ஒப்­பி­டு­கின்­றனர். உயிர்­களைக் கொல்ல வேண்டாம், உயிர் பலி­யா­வ­தற்கு கார­ண­மாக இருக்­கவும் வேண்டாம்” என புத்தர் குறிப்­பிட்­டுள்ளார். புத்­த­ரதும், இயேசு கிறிஸ்­து­வி­னதும் போத­னை­களை போலவே புனித அல்­குர்­ஆனும் அனைத்து மனி­தர்­க­ளையும் கண்­ணி­யப்­ப­டுத்­து­மாறு போதிக்­கி­றது. ஒரு பிள்ளை பிறக்கும் போது தான் எந்த சம­யத்தைப் பின்­பற்ற வேண்டும் என்று அறி­யாத நிலை­யிலே பிறக்­கி­றது. அவ்­வாறே எந்த மொழியை பேச­வேண்டும் என அப்­பிள்­ளைக்கு தெரி­யாது. தனது பெற்­றோரின் சம­யத்தை பிள்ளை பின்­பற்­ற­வேண்­டி­யுள்­ளது. நாம் அனை­வரும் இவ்­வாறே பிறந்தோம் என்ற எளி­மை­யான உண்­மையை உண­ர­மு­டி­கி­றது.

அனைத்து சம­யங்­களும் நல்­லி­ணக்கம், சமா­தானம், கூட்­டு­ற­வுடன் வாழு­மாறு எமக்குப் போதிக்­கின்­றன. வெறுப்­பை­யன்றி அன்பு, சகோ­த­ரத்­துவம் ஆகிய செய்­தி­க­ளையே சம­யங்கள் பரப்­பு­கின்­றன. மீளி­ணக்கம், பொறுமை, சகிப்­புத்­தன்மை என்­ப­வற்­றையே அனைத்து சம­யங்­களும் நம்­பிக்­கை­களும் எம்மில் தோற்­று­விக்­கின்­றன. தேவைப்­ப­டும்­போது தியா­கங்­களை மேற்­கொள்ள தூண்­டு­கின்­றன. ஒரே குடும்­ப­மாக அனைத்து மனித இனத்­த­வரும் பூமியில் நல்­லி­ணக்­கத்­துடன் வாழ்­வ­தற்­கான தருணம் தற்­போது ஏற்­பட்­டுள்­ளது. நல்­லி­ணக்­கத்­துடன் வாழ்­வது என்­பது தொடர்ந்தும் ஓர் ஒழுக்­க­கோட்­பா­டாக விளங்­கப்­போ­வ­தில்லை. மாற்­ற­மாக அது ஒரு வாழ்க்­கை­மு­றை­யாக அமை­ய­வேண்­டி­யுள்­ளது.

மௌலானா வஹீ­துத்­தீன்கான் என்ற இஸ்­லா­மிய அறிஞர் பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்­டுள்ளார். “வன்­மு­றையில் ஈடு­ப­டு­வ­தற்கு அறி­வு­ஞானம் தேவை­யில்லை. எந்­த­வொரு முட்­டாளும் இதனைச் செய்­யலாம். ஆனால், சமா­தா­னத்தை கட்­டி­யெ­ழுப்பி பேணிப் பரா­ம­ரிப்­ப­தற்கு உயர்ந்­த­பட்ச அறிவும் திட்­ட­மி­டலும் தேவைப்­ப­டு­கி­றது. பிரச்­சி­னை­களை புத்­தி­சா­து­ரி­ய­மான திட்­டங்­க­ளூ­டாகக் கையாள்­வ­தற்குத் தெரிந்த ஒருவர் எப்­போதும் வன்­மு­றை­யி­லி­ருந்து தவிர்ந்து கொள்­வ­தற்­கான வழி­யையே தெரிவு செய்­து­கொள்வார்.”

பல்­வேறு சம­யங்­களும் இனங்­களும் வாழ்­கின்ற நாட்டில் நல்­லி­ணக்கம் என்­பது மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது. சமா­தா­ன­மாக ஒப்­பு­ர­வுடன் கூடி வாழ்­வ­தற்­காக மக்­களை பயிற்­று­வித்து போதிப்­ப­தற்கு நாம் கடு­மை­யாகப் பாடு­ப­ட­வேண்­டி­யுள்­ளது. சில சட்­டங்­க­ளையும், ஒழுங்கு விதி­க­ளையும் சில­போது அறி­மு­கப்­ப­டுத்­தலாம். ஆனாலும் இவை­ய­னைத்தும் நல்­லி­ணக்­கத்தை மேம்­ப­டுத்­து­வ­தாக அமை­ய­வேண்டும். சம­யங்­க­ளி­டையே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதில் ஊட­கங்­க­ளுக்கு மிகவும் பாரிய பொறுப்­புள்­ளது. சமூக ஊட­கங்கள் மீதான அள­வுக்­க­தி­க­மான சுதந்­திரம் சரா­ச­ரி­யாக சிந்­திக்­கின்ற சாதா­ரண மனி­தனும் எழு­தாத விட­யங்­களை எழு­து­வ­தற்கு மக்­க­ளுக்கு அனு­ம­தி­ய­ளித்­துள்­ளன. சமூக ஊட­கங்­களில் வெறுப்­பு­ணர்வு பர­வு­கி­றது. இவற்றை வாசிக்­கின்ற இளம் சந்­த­தி­யினர் வெறுப்­பு­ணர்வை தமது மனங்­களில் பதித்­துக்­கொள்­கின்­றனர். சமூக ஊட­கங்கள் உட்­பட அனைத்து ஊட­கங்­க­ளையும் கட்­டுப்­ப­டுத்­து­கின்ற சட்டம் அவ­சியம். சமயம், குலம், தேசியம் தொடர்­பான வெறுப்பை அனு­ம­திக்­கக்­கூ­டாது. ஒவ்­வொரு நாளும் ஒவ்­வொரு நிமி­டமும் தமது சமூக ஊட­கங்­களில் அனுப்­பப்­ப­டு­கின்ற மில்­லியன் கணக்­கான பதி­வு­களை எவ்­வாறு தம்மால் கட்­டுப்­ப­டுத்த முடியும் என சமூக ஊட­கங்­களை இயக்­கு­ப­வர்கள் கேட்­பது அவர்­க­ளுக்கு மிகவும் இல­கு­வா­னது. இன்று மிகவும் முன்­னேற்­ற­க­ர­மான உலகில் வாழ்­கிறோம். இதனைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான ஒரு வழி­முறை நிச்­ச­ய­மாக இருந்­தே­யாக வேண்டும். வெறுப்­பு­ணர்வை பரப்­பு­வ­தற்கு பதி­லாக மக்கள் மத்­தியில் நல்­லி­ணக்­கத்தை பரப்­பு­வ­தற்கு சமூக ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்த முடியும்.

இலங்­கையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து பெரு­ம­திப்­பிற்­கு­ரிய கர்­தினால் அவர்கள் குறிப்­பிட்ட கூற்றை நான் பெரிதும் பாராட்­டு­கிறேன். “இலங்­கையை நிலை­த­ளரச் செய்­வ­தற்­காக சர்­வ­தேச பயங்­க­ர­வாத அமைப்­பொன்றின் உத­வி­யுடன் ஒரு சிறு குழு­வினர் செய்­த­தாக தெரி­கின்ற ஒரு தாக்­கு­த­லுக்­காக முஸ்­லிம்கள் அனை­வரும் துன்­பத்தை அனு­ப­விக்கத் தேவை­யில்லை.” மேலும் கார்­டினல் அவர்கள் பல­முறை குறிப்பிட்டுள்ளார்கள்.

“இலங்கை ஒரு பௌத்த நாடாகும். இந்த நாட்­டி­லுள்ள அனைத்து மக்­களும் பௌத்த போத­னை­க­ளையும் பாரம்­ப­ரி­யங்­க­ளையும் மதிக்­க­வேண்டும். பல நூற்­றாண்­டு­க­ளாக மக்கள் நல்­லி­ணக்­க­மாக வாழ்­வ­தற்கு இவையே வழி­வ­குத்­தன.” 

குறிப்­பாக இலங்கை, தாய்­லாந்து, பர்மா போன்ற சம­யப்­ப­தற்றம் உக்­கிர நிலை­யி­லுள்ள நாடு­களில் மக்­க­ளுக்கும் குறிப்­பாக இளஞ்­சந்­த­தி­யி­ன­ருக்கும் சமய நல்­லி­ணக்­கத்தை போதிப்­ப­தற்­கான முன்­னெ­டுப்­புக்­களை சமயத் தலை­வர்கள் என்ற வகையில் நாம் மேற்­கொள்­ள­வேண்டும். ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக இலங்­கை­யிலும் ஏனைய நாடு­க­ளிலும் சமய நல்­லி­ணக்­கத்­துக்குப் பதி­லாக வேற்­று­மையை பரப்­பு­வதன் மூலம் அர­சி­யல்­வா­திகள் பய­ன­டைய முயற்­சிக்­கி­றார்கள். இவ்­வா­றான அர­சி­யல்­வா­தி­களின் வலையில் வீழ்ந்­து­வி­டாமல் மக்கள் அறி­வூட்­டப்­பட வேண்டும். இத்­த­கை­ய­வர்கள் தமது நலனை மட்­டுமே கருத்­திற்­கொள்­கின்­றனர். அவர்கள் நாட்டின் அபி­வி­ருத்­திக்­காக செயற்­ப­டு­வ­தில்லை. இன­வாதம் நாட்டின் அபி­வி­ருத்­திக்குத் தடை­யாக உள்­ளது. இலங்­கையில் காணப்­படும் ஒற்­று­மை­யையும், வேற்­று­மை­யையும் வெளிப்­ப­டுத்தும் இரு அம்­சங்­க­ளிலும் வர­லாற்றுப் பாரம்­ப­ரி­யத்தைக் காணலாம். சமூக நல்­லி­ணக்­கத்தை மேம்­ப­டுத்­து­வதன் ஊடாக பாரம்­ப­ரி­யத்தை பேண­வேண்­டி­யுள்­ளது.

நாட்டுப் பிர­சை­க­ளி­டையே தேசிய உணர்வை பலப்­ப­டுத்­து­வது அவ­சரத் தேவை­யா­க­வுள்­ளது. சமா­தா­னத்தைப் பேணிப் பாது­காப்­ப­தற்­காக சமூ­கத்தில் அதி­க­ரித்­து­வரும் சகிப்­புத்­தன்­மை­யற்ற நிலையை மிகவும் கவ­ன­மாக எதிர்­கொள்­ள­வேண்­டி­யுள்­ளது. அதற்­கப்பால் பல்­வேறு சம­யங்­களை பின்­பற்றும் மக்­க­ளி­டையே தாம் கூட்­டாக வாழ­வேண்டும் ஏனை­ய­வர்­க­ளுடன் ஒன்று கலக்க வேண்டும் என்று உணரச் செய்­வதும் அத்­தி­ய­வ­சி­ய­மா­க­வுள்­ளது.

ஏனெனில் கலப்பு அண்டை அய­ல­வர்கள் என்ற நிலை துரி­த­மாக மறைந்து வரு­கி­றது. பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக பல சமூ­கங்­க­ளிலும் மக்கள் தமது குழு அடை­யா­ளத்­துடன் வாழ்­வதை பெரிதும் விரும்­பு­கின்­றனர். கிராம, மாந­கர, நகர மட்­டங்­களில் சமூக நல்­லி­ணக்கக் குழுக்­களை தோற்­று­விப்­பது அவ­சி­ய­மாகும். சமூக உறுப்­பி­னர்­க­ளி­டையே இன நல்­லு­றவை விருத்­தி­செய்­வ­தற்­காக இவ்­வா­றான குழுக்­களை உரு­வாக்க வேண்­டி­யுள்­ளது. பரஸ்­பர சகிப்­புத்­தன்மை நல்­லி­ணக்கம் என்­ப­வற்றை போதிக்க வேண்­டிய தேவை­யுள்­ளது.

இதன்­மூலம் சட்­டத்தால் ஆளப்­ப­டு­கின்ற நாட்டுப் பிர­சைகள் ஒவ்­வொ­ரு­வரும் சமா­தா­ன­மா­கவும் நல்­லி­ணக்­கத்­து­டனும் வாழலாம். இதற்­கா­க­வேண்டி ஆரம்ப வகுப்­புகள் முதலே சிறு­வர்­க­ளுக்கு சமய நல்­லி­ணக்கம் மற்றும் ஒவ்­வொரு சம­யத்­தையும் மதிக்­க­வேண்டும் என்ற உணர்வும் போதிக்­கப்­ப­ட­வேண்டும். இவற்றை போதிக்­கின்ற ஆசி­ரி­யர்­களும் தாம் கற்­பிக்­கின்ற விட­யங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்டும்.

சமூகம், அர­சியல், இனம், சர்­வ­தேசம் ஆகிய மட்­டங்­களில் ஏற்­படும் பதற்றம், முரண்­பா­டுகள், இன்று மனித இனத்தின் இருப்­பிற்கு அச்­சு­றுத்­த­லாக அமைந்துள்ளன. எமது மனங்கள் என்ற மண்ணில் இவற்றின் வித்துக்கள் உள்ளன. எனவே இம்மண்ணை கிளர்ந்து பண்படுத்த வேண்டியுள்ளது. இம்மண்ணில் பரஸ்பர புரிந்துணர்வு, கண்ணியம், அன்பு போன்ற வித்துக்கள் நடப்படவேண்டியுள்ளது. இல்லாவிட்டால் மனிதாபிமானம் அழிந்துவிடும்.

பெரும்பாலும் சமயங்களிலுள்ள தீவிரவாதக் குழுக்கள் எம்முன் வருவது சிரம சாத்தியமான காரியமாக இருக்கலாம் என்றாலும் சமூகத்திற்கு சமயத் தலைவர்களின் தலையீடு தேவைப்படுகின்ற இச்சந்தர்ப்பத்தில் சமூகத்திற்கான எமது பொறுப்புகளை விட்டும் நகர்ந்து விடமுடியாது.

சமயங்கள், இனங்களிடையிலான வேறுபாடுகளை களையவேண்டியுள்ளது.
அரசியல்வாதிகள் ஒருபுறமிருக்க சமயத்தலைவர்கள் என்ற வகையில் நாம் நமது முன்னெடுப்புகளை தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டியுள்ளது.

இச்சிறப்பான கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள ஏற்பாட்டாளர்களைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றேன். ஏனெனில் இவர்கள் சமயத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகிய இருதரப்பினரையும் கூட்டாக செயற்பட அழைத்துள்ளனர். மேலும் மேற்குறிப்பிட்ட நாடுகளில் வாழும் சமூகங்களிடையே சமாதானம், நல்லிணக்கம் என்பவற்றை மேம்படுத்துவதற்கும் பரப்புவதற்குரிய செயற்றிட்டத்தை அவர்கள் மேற்கொள்ளவுள்ளனர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்களை கலந்துரையாடுவதை மையமாகக் கொண்டு இக்கூட்டம் இடம்பெறுகிறது.

இங்கு பொருத்தமான நடைமுறைப்படுத்தக்கூடிய கோட்பாடுகள் மூலம் சமூகத்தில் உள்ள விடயங்கள் தீர்க்கப்படவுள்ளன. சமயத் தலைவர்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் இக்கூட்டம் வெற்றிகரமானதாக அமைய வேண்டும் என எதிர்பார்த்து எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.-Vidivelli

2019 டிசம்பர் 17 முதல் 19 வரை இந்­தோ­னே­சிய தலை­நகர் ஜகார்த்­தாவில் இடம்­பெற்ற பௌத்த – முஸ்லிம் உறவு தொடர்­பான செய­ல­மர்வின் ஆரம்ப நாள் நிகழ்­வின்­போது உதவிப் பேரா­சி­ரியர் கலா­நிதி வல்­மோ­ருவே பிய­ரத்ன தேரர் ஆற்­றிய உரை

  • தமி­ழாக்கம்:
    அஷ்ஷெய்க் ஏ.எம்.மிஹ்ழார்
    (உதவி அதிபர், கொழும்பு ஸாஹிராக் கல்­லூரி)

Leave A Reply

Your email address will not be published.