அரசாங்க சேவையை வினைத்திறனாக்குவேன்

சிறு பிரிவினரின் தவறு முழு அரச சேவையையும் பாதிக்கிறது: பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்து

0 613

சிறு பிரி­வி­னரால் ஏற்­படும் தவ­று­களின் கார­ண­மாக முழு அரச சேவையின் மீதும் குற்றம் சுமத்­தப்­படும் நிலை உரு­வா­கி­யுள்­ளது. அன்­றாடம் இடம்­பெறும் தவ­றுகள் முழு அரச சேவைக்கும் இழுக்கை ஏற்­ப­டுத்­து­வ­தாக சுட்­டிக்­காட்­டிய ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­பக் ஷ, மக்கள் வியர்வை சிந்தி சம்­பா­திக்கும் பணத்தின் மூலமே அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பளம் வழங்­கப்­ப­டு­கின்­றது.

ஆகவே வினைத்­தி­ற­னா­னதும் முறை­யா­ன­து­மான அரச சேவையின் மூலம் தமக்கு ஊதியம் வழங்கும் மக்­க­ளுக்கு நியா­ய­மா­ன­தொரு சேவையை பெற்­றுக்­கொ­டுப்­பது அரச ஊழி­யர்­களின் பொறுப்­பா­கு­மென்றும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.

நாட­ளா­விய ரீதியில் தொழிலை எதிர்­பார்த்­துள்ள பட்­ட­தா­ரி­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி வருகை தந்­தி­ருந்த பட்­ட­தா­ரி­க­ளுடன் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை முற்­பகல் ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற சந்­திப்­பின்­போதே ஜனா­தி­பதி கோத்தாா­பய ராஜ­பக் ஷ இதனை தெரி­வித்தார்.
இதன்­போது அவர் மேலும் தெரி­விக்­கையில்,

அரச, பகு­தி­ய­ளவு அரச மற்றும் திணைக்­க­ளங்­களில் நிலவும் வெற்­றி­டங்கள் பற்­றிய தக­வல்கள் திரட்­டப்­பட்­டுள்­ளன. வெற்­றி­டங்­க­ளுக்குப் பட்­ட­தா­ரி­களை ஆட்­சேர்க்கும் நட­வ­டிக்­கைகள் விரை­வாக மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. தொழில்­வாய்ப்­பு­களை பெறு­வோ­ருக்கு தலை­மைத்­துவம் மற்றும் அர­ச­சேவை பற்­றிய முறை­யான பயிற்­சியும் விளக்­கமும் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. மக்­க­ளுக்குப் பொறுப்­புக்­கூறும் அரச சேவை­யொன்­றையும் அரச ஊழி­யர்­க­ளையும் உரு­வாக்­கு­வதே தனது நோக்­க­மாகும்.

பயிற்­றப்­ப­டாத ஊழி­யர்கள் நாட்­டிற்கு அந்­நியச் செலா­வ­ணியை ஈட்­டித்­தரும் முக்­கிய பிரி­வி­ன­ராக உள்­ளனர். ஏனைய நாடு­க­ளுடன் ஒப்­பி­டும்­போது ஒரு பல­மான அடிப்­ப­டை­யுடன் கைத்­தொ­ழில்­துறை நாட்டில் கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வில்லை. நாட்டின் எதிர்­காலப் பய­ணத்­திற்­குள்ள பெரும் பலம் மனி­த­வ­ள­மாகும். எனவே, நாட்டில் கற்ற இளைஞர், யுவ­தி­களை உரிய முறையில் முகா­மைத்­துவம் செய்து, அவர்­களை பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கு பங்­கா­ளர்­க­ளாக ஆக்­கு­வது முக்­கிய தேவை­யாகும்.

ஒரு­சிறு பிரி­வி­னரால் ஏற்­படும் தவ­று­களின் கார­ண­மாக முழு அரச சேவையின் மீதும் குற்றம் சுமத்­தப்­படும் நிலை உரு­வா­கி­யுள்­ளது. அன்­றாடம் இடம்­பெறும் தவ­றுகள் முழு அரச சேவைக்கும் இழுக்கை ஏற்­ப­டுத்­து­கி­றது. மக்கள் வியர்வை சிந்தி சம்­பா­திக்கும் பணத்தின் மூலமே அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பளம் வழங்­கப்­ப­டு­கின்­றது. வினைத்­தி­ற­னா­னதும் முறை­யா­ன­து­மான அரச சேவையின் மூலம் தமக்கு ஊதியம் வழங்கும் மக்­க­ளுக்கு நியா­ய­மா­ன­தொரு சேவையை பெற்­றுக்­கொ­டுப்­பது அரச ஊழி­யர்­களின் பொறுப்­பாகும்.

அரச ஊழி­யர்­களின் சம்­பள அதி­க­ரிப்பு உள்­ளிட்ட வச­தி­களை விரி­வு­ப­டுத்­து­வ­தற்கு நாட்டின் பொரு­ளா­தாரம் முன்­னேற்­ற­ம­டைய வேண்டும். இதற்­காக அரச ஊழி­யர்கள் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட வேண்டும்.

எதிர்­கா­லத்தில் அனைத்து பிள்­ளை­க­ளையும் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தின் பங்­கா­ளர்­க­ளாக மாற்றும் கல்வி முறை­மை­யொன்று திட்­ட­மி­டப்­பட்டு வரு­கின்­றது. உலகின் ஏனைய நாடு­களின் தொழில்­வாய்ப்­பு­க­ளுக்கு பொருத்­த­மான வகையில் கல்வி முறை­மையை ஏற்­ப­டுத்த வேண்டிய தேவையுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு தொழிற் சந்தைகளுக்குப் பொருத்தமான வகையில் புதிய தொழிநுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட மூலோபாயத்தின் ஊடாகவே அதனைச் செய்ய வேண்டும். இளைஞர், யுவதிகள் தொழில் தேடிச் செல்வதற்கு பதிலாக தொழில் வாய்ப்புகள் இளைஞர், யுவதிகளை தேடிவரும் கல்வி முறைமையொன்றை விரைவாக ஏற்படுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.