விஜயதாசவின் பிரேரணை குறித்து அரசாங்கம் தீர்மானமெடுக்கவில்லை

உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன

0 173

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­தாச ராஜபக் ஷவினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்­புக்­கான 21 ஆவது திருத்தம் அவ­ரது தனிப்­பட்ட பிரே­ர­ணை­யாகும். அர­சாங்கம் இது தொடர்பில் அவ­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்டும். இவ்­வி­வ­கா­ரத்தில் அரசு இது­வரை தீர்­மானம் எதுவும் மேற்­கொள்­ள­வில்லை. அமைச்­ச­ர­வையில் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வு­மில்லை என தகவல் தொடர்­பாடல் மற்றும் உயர்­கல்வி அமைச்சர் பந்­து­ல­கு­ண­வர்­தன தெரி­வித்­துள்ளார்.

சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சி­களின் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தைக் குறைக்கும் வகையில் 5 வீத­மாக உள்ள வெட்டுப் புள்­ளியை 12.5 வீத­மாக உயர்த்தும் வகை­யி­லான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­தாச ராஜபக் ஷவின் தனி­நபர் பிரே­ரணை தொடர்பில் கருத்து வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,
சிறிய கட்­சிகள், வெட்­டுப்­புள்ளி உயர்த்­தப்­ப­டு­வதன் மூலம் தங்­க­ளது பிர­தி­நி­தித்­துவம் பாதிக்­கப்­படும் எனத் தெரி­வித்து வரு­கின்­றன. மக்கள் விடு­தலை முன்­னணி தாங்­களே தீர்­மா­னிக்கும் சக்தி என தேர்­தலில் கள­மிறங்கி வந்­துள்­ளது.ஆனால் அவர்­க­ளுக்கு கட்­டுப்­ப­ணமும் இல்­லா­மற்­போ­னது. முற்­போக்கு கட்­சியின் தலை­வ­ருக்கு ஜனா­தி­பதித் தேர்­தலில் 8 ஆயிரம் வாக்­கு­க­ளையே பெற்­றுக்­கொள்ள முடிந்­தது. இவ்­வா­றான சிறிய குழுக்கள் தாங்கள் பலம் வாய்ந்­த­வர்கள் என கற்­பனை பண்ணிக் கொண்­டி­ருந்­தாலும் தேர்­தலில் போட்­டி­யி­டும்­போது அவர்­க­ளுக்கு ஆத­ரவு குறை­வா­கவே கிடைக்­கி­றது.

இந்த தனி­நபர் பிரே­ர­ணைக்கு அர­சாங்­கத்­துடன் இணைந்­துள்ள ஈ.பி.டி.பி. கட்­சியும் எதிர்ப்பு என்­றாலும் இது தொடர்பில் அர­சாங்­கத்­திலோ அல்­லது அமைச்­ச­ர­வை­யிலோ எந்­த­வித பேச்சு வார்த்­தையும் இடம்­பெ­ற­வில்லை. கலந்­து­ரை­யா­டல்­களின் பின்பே அர­சாங்­கத்தின் நிலைப்பாட்­டினைத் தெரி­விக்­க­மு­டியும்.

நிலைமை இவ்­வா­றி­ருக்­கையில், விஜ­ய­தா­சவின் தனி­நபர் பிரே­ரணை குறித்து பல்­வேறு விமர்­ச­னங்கள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவ்­வா­றான விமர்­ச­னங்கள் வெளி­யி­டப்­ப­டு­வது ஜன­நா­யக முறை­மை­யாகும். விஜ­ய­தாச ராஜபக் ஷவின் தனி­நபர் பிரே­ர­ணைக்கு எதி­ராக குரல் கொடுப்­ப­தற்கு அவர்­க­ளுக்கு உரி­மை­யுண்டு என்றார்.

1978 ஆம் ஆண்டின் அர­சியல் யாப்பில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த 12.5 வீத வெட்டுப் புள்­ளியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் 1988 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஆர். பிரேமதாசவுடன் பேரம் பேசி 5 வீதமாகக் குறைத்தார். இதனால் சிறுபான்மை கட்சிகளும், சிறுகட்சிகளும் பாராளுமன்றத்தில் கணிசமான அளவு பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.