டாக்டர் ஷாபியை மீண்டும் சேவையில் இணைப்பது பற்றி தீர்மானிக்கவில்லை

தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக அரசாங்க சேவை ஆணைக்குழு தெரிவிப்பு

0 813

வைத்­தியர் ஷாபியை மீண்டும் வைத்­தி­ய­சே­வைக்கு இணைத்துக் கொள்­வது தொடர்பில் ஜனா­தி­ப­தியோ, ஜனா­தி­பதி அலு­வ­லக அதி­கா­ரி­களோ எவ்­வித வின­வ­லையும் அர­சாங்க சேவை ஆணைக்­கு­ழு­விடம் கோர­வில்லை. இவ்­வி­டயம் தொடர்பில் சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யான செய்­திகள் பொய்­யா­னவை என்­ப­துடன், அவை முற்­றிலும் நிரா­க­ரிக்­கத்­தக்­க­வை­யாகும் என்று அர­சாங்­க­சேவை ஆணைக்­கு­ழுவின் செய­லாளர் எம்.ஏ.பீ.தயா செனரத் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இது­கு­றித்து விளக்­க­ம­ளித்து அவரால் நேற்று வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­ப­தா­வது:

நீதி­மன்­றத்­தினால் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள, கட்­டாய லீவில் அனுப்­பப்­பட்­டுள்ள மருத்­துவர் எஸ்.எஸ்.எம்.ஷாபி, தன்னை மீண்டும் சேவையில் அமர்த்­து­மா­று­கோரி அர­சாங்­க­சேவை ஆணைக்­கு­ழுவின் சுகா­தா­ர­சேவைக் குழு­விற்கு சுகா­தார அமைச்சின் செய­லாளர் ஊடாக செய்த வேண்­டுகோள் தொடர்பில் இது­வ­ரையில் இறுதித் தீர்­மா­ன­மொன்று மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

அந்த மருத்­துவ உத்­தி­யோ­கத்­த­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஆரம்ப விசா­ர­ணை­யொன்றை நடத்தி, அதன் அறிக்­கையை அர­சாங்­க­சேவை ஆணைக்­கு­ழுவின் சுகா­தா­ர­சேவைக் குழு­விடம் சமர்ப்­பிக்­கு­மாறு சுகா­தார அமைச்சின் செய­லா­ள­ருக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தோடு, அந்த அறிக்கை இது­வ­ரையில் கிடைக்­கப்­பெ­ற­வில்லை. அவ்­வ­றிக்கை மற்றும் மருத்­துவர் எஸ்.எஸ்.எம்.ஷாபியின் வேண்­டுகோள் தொடர்பில் சுகா­தார அமைச்சின் செய­லாளர் தனது பரிந்­து­ரையை சமர்ப்­பிக்கும் வரையில் அர­சாங்­க­சேவை ஆணைக்­கு­ழுவின் சுகா­தா­ர­சேவைக் குழு­வினால் இது­தொ­டர்பில் இறுதித் தீர்­மா­ன­மொன்று எடுக்­கப்­ப­ட­மாட்­டாது என்­பதைக் குறிப்­பி­டு­கின்றேன்.

இவ்­வி­டயம் தொடர்பில் இதற்கு மாற்­றாகப் பல்­வே­று­பட்ட ஊடக வலை­ய­மைப்­புக்கள் மூலம் வெளி­யி­டப்­பட்­டுள்ள சக­ல­வி­த­மாக அறிக்­கை­களும் பொய்­யா­னவை என்றும், அத்­த­கைய அறிக்­கைகள் அனைத்தும் நிரா­க­ரிக்­கப்­பட வேண்­டி­யவை என்­ப­தையும் அறி­யத்­த­ரு­கிறேன். அத்தோடு இதுதொடர்பில் ஜனாதிபதியோ அல்லது ஜனாதிபதி அலுவலகத்தின் வேறு எந்தவொரு அதிகாரியோ இந்த ஆணைக்குழுவிடம் இருந்தோ அல்லது அதன் கீழுள்ள சுகாதார சேவைக்குழுவிடமிருந்தோ எத்தகைய கோரிக்கையையும் விடுக்கவில்லை என்பதையும் கூறிக்கொள்கிறேன்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.