வெட்டுப்புள்ளி அதிகரிப்பு முஸ்லிம்களுக்கு எந்தவகையில் பாதிப்பு?

0 707

முஸ்லிம் கட்­சிகள் வட கிழக்­கிற்கு வெளியே பெரும்­பாலும் தேசி­யக்­கட்­சி­க­ளுடன் இணைந்­துதான் போட்­டி­யி­டு­கின்­றன. எனவே வெட்­டுப்­புள்ளி அதி­க­ரிப்­பினால் முஸ்லிம் கட்­சி­க­ளுக்குப் பாதிப்­பில்லை. வட கிழக்கில் எந்­த­வ­கையில் போட்­டி­யிட்­டாலும் பாதிப்­பில்லை என்ற ஒரு கருத்து இன்று சிலரால் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.

இந்த பாரா­ளு­மன்றில் இந்த வெட்­டுப்­புள்ளி சட்­ட­மூலம் நிறை­வேற்­று­வ­தற்­கான வாய்ப்பு மிகவும் குறைவு. பொதுத்­தேர்­த­லுக்­குப்பின் 70–-30 தேர்தல் முறையை அறி­மு­கப்­ப­டுத்த அரசு எதிர்­பார்க்­கி­றது.

அடுத்த தேர்­தலில் ஆளுங்­கட்சி அறு­திப்­பெ­ரும்­பான்மை பெற்றால் தேர்­த­லின்பின் 2/3 ஐப் பெற்­றுக்­கொள்­வார்கள். அப்­பொ­ழுது அதைச் சாத்­தி­யப்­ப­டுத்­தலாம். சில­வேளை ஆளும் கட்­சியில் இருக்­கின்ற நம்­ம­வர்­களே கண்ணை மூடிக்­கொண்டு கையு­யர்த்­தலாம். வெட்­டுப்­புள்­ளி­வீத அதி­க­ரிப்பை நியா­யப்­ப­டுத்தும் நம்­ம­வர்கள் அத­னையும் ஆத­ரிக்க மாட்­டார்கள் என்­ப­தற்­கில்லை.

தேர்­தல்­முறை அவ்­வாறு மாற்­றப்­பட்டால் அதன்பின் கிழக்கில் அம்­பா­றையில் 3 ஆசனம், திரு­கோ­ண­ம­லையில் 1 ஆசனம். மட்­டக்­க­ளப்பில் சில­வேளை 1 ஆசனம். எப்­போதும் கிடைக்கும் என்­ப­தற்கு உத்­த­ர­வாதம் இல்லை. எனவே மொத்தம் 4 அல்­லது 5. வடக்கில் ஒன்­று­மில்லை.

தெற்கில் கொழும்பில் 2. (கொழும்பு மத்­திய தொகுதி) கண்­டியில் 1- ஹரிஸ்­பத்­துவ. பெரும்­பாலும் புத்­த­ளத்தில் 1. (அதுவும் எல்லை நிர்­ண­யத்தைப் பொறுத்­தது). பேரு­வளை பெரும்­பாலும் நிச்­ச­ய­மில்லை. எனவே, அதி­கூ­டிய ஆசனம் -4, மொத்தம் 8 அல்­லது 9. அதி­கூ­டி­ய­தாக 10 இருக்­கலாம்.

பேரம்­பேசும் சக்தி பூச்­சியம். காரணம் இத்­தேர்தல் திருத்­தத்தின் அடிப்­ப­டையே 50% இற்கு குறை­வான வாக்­கு­க­ளைப்­பெற்று 50% மேல் ஆச­னங்­களைப் பெறு­வ­தாகும். எனவே, சிறு­பான்மைக் கட்­சிகள் ஆட்­சி­ய­மைக்க தேவை­யே­யில்லை. இவ்­வாறு புதிய ஒரு தேர்­தல்­முறை கொண்­டு­வ­ரு­வது சாத்­தி­ய­மில்­லாமல் போனால் இந்த வெட்­டுப்­புள்ளி அதி­க­ரிப்­பை­யா­வது கொண்­டு­வந்து நிறை­வேற்ற முனை­வார்கள்.

எனவே, சிறு­பான்­மைகள் அர­சியல் பல­மற்ற அர­சி­யலில் அர்த்­த­மற்ற சமூ­கங்­க­ளாக மாற்­றப்­ப­டப்­போ­கின்­றார்கள்.

மறு­புறம், முஸ்லிம் தனியார் சட்­டத்தை இல்­லா­தொ­ழிக்க தனி­நபர் சட்­ட­மூலம் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. அது இந்த ஆட்­சியில் நிறை­வேற்­றப்­ப­டுமா? என்­பது தெரி­ய­வில்லை. ஆனால் தேர்­த­லுக்­குமுன் தற்­போ­தைய பிர­தம மந்­திரி உட்­பட மொட்டு அணியின் பலர் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கருத்தை முன்­வைத்­தி­ருக்­கி­றார்கள்.

எனவே, குறித்த மசோதா அரசின் நிலைப்­பாட்டை அடி­யொற்­றி­யது. இப்­பா­ரா­ளு­மன்றில் நிறை­வேற்றத் தவ­றினால் அடுத்த பாரா­ளு­மன்றில் அரசே சில­வேளை நேர­டி­யாக அதனைக் கொண்­டு­வ­ரலாம். எதிர்­காலம் சிறு­பான்­மையைப் பொறுத்­த­வரை பொது­வா­கவும் முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வரை குறிப்­பா­கவும் மிகவும் இக்­கட்­டா­ன­தாக இருக்­கப்­போ­கின்­றது.

இந்­நி­லையில் முஸ்­லிம்­க­ளுக்கு இருக்­கின்ற சிறி­ய­தொரு சந்­தர்ப்பம் பொதுத்­தேர்­தலில் புத்­தி­சா­லித்­த­ன­மாக நடந்­து­கொள்­வது. ஆனாலும் முஸ்­லிம்கள் எவ்­வ­ளவு புத்­தி­சா­லித்­த­ன­மாக நடந்­து­கொள்­வார்கள்? என்­பது பெரும் கேள்­விக்­கு­றி­யா­கவே இருக்­கி­றது.

மலையில் சிலை வைத்­ததை பிழை கண்­ட­வர்­களால் பள்ளி எல்­லைக்குள் சிலை வைத்­ததை பிழை­காண முடி­ய­வில்லை. அரசின் பக்கம் இருக்கும் உறுப்­பி­னர்கள் கொண்­டு­வந்த அரசின் நிலைப்­பாட்டைப் பிர­தி­ப­லிக்­கின்ற மேற்­கு­றிப்­பிட்ட மசோ­தாக்கள் பிழை­யாகத் தெரி­ய­வில்லை.

முஸ்லிம் பெண்கள் ஒரு குழந்தை பெற்­ற­வுடன் கருத்­தடை செய்­ய­வேண்­டு­மென்ற விமல் போன்­ற­வர்­களின் இன­வா­தக்­க­ருத்­துக்கள் பிழை­யாகத் தெரி­வ­தில்லை. சரத்­பொன்­சேகா பேசிய கருத்­து­மட்டும் இன­வா­த­மாகத் தெரி­கி­றது.

சரத்­பொசேகா பேசி­யது இன­வா­தக்­க­ருத்தே. அதனை எதிர்க்­கட்­சி­யி­லுள்ள முஸ்லிம் பிர­தி­நி­தி­களே கண்­டித்­தி­ருக்­கி­றார்கள். ஆனால் மேற்­படி இன­வாதச் செயல்கள், இன­வா­தக்­க­ருத்­துக்கள் இன­வா­த­மாக தெரி­யா­த­வர்­க­ளுக்கு சரத்­பொன்­சே­காவின் கருத்­துக்கள் மட்டும் இன­வா­த­மாகத் தெரி­வது எவ்­வாறு? என்­பது புரி­ய­வில்லை. இரு­பக்க கறுப்புப் புள்­ளி­களில் ஒரு பக்­கப்­புள்ளி கறுப்­பா­கவும் அடுத்­த­பக்க கறுப்பு புள்­ளிகள் வெள்­ளை­யா­கவும் தெரி­வ­தெவ்­வாறு?
இவர்கள் அர­சியல் கருத்­துக்­களை சமூ­கத்­திற்­காக இத­ய­சுத்­தி­யுடன் தெரி­விக்­கின்­றார்­களா? அல்­லது தான் சார்ந்த தரப்பை எந்­த­வ­கை­யிலும் நியா­யப்­ப­டுத்­த­வேண்டும்; எதி­ர­ணியின் கருத்­துக்­களில் பிழை கண்டு அர­சியல் செய்­ய­வேண்டும்; என்­பது இவர்­க­ளது நிலைப்­பா­டானால் அது மாமூல் அர­சி­ய­லாக இருக்­கலாம். இது எவ்­வாறு சமூ­கத்­திற்­கான கருத்­தாக இருக்­க­மு­டியும்?

இவ்­வா­றான சூழ்­நி­லையில் சமூகம் எதிர்­கொள்­ளப்­போகும் சவால்­களை எவ்­வாறு கையா­ளப்­போ­கின்றோம். அர­சி­யலில் பல அணி­க­ளாக நிற்­பது இயல்­பா­ன­தாக இருக்­கலாம். அதற்­காக நமது கருத்­துக்கள் மனச்­சாட்­சிக்கு அப்பால் இருக்­க­லாமா? சமூ­கத்­திற்கு பாத­க­மான விட­யங்கள் தாம் சார்ந்த அணி செய்­யும்­போது அதனை சரி­காண்­பதும் எதி­ரணி செய்­யும்­போது பிழை­காண்­பதும் நியா­யமா?

எந்­த­ளவு என்றால் மேற்­படி தனி­நபர் பிரே­ரணை கொண்­டு­வந்த உறுப்­பி­னர்கள் கடந்த தேர்­த­லிலும் தற்­போதும் ஆளுந்­த­ரப்பில் இருந்தும் அவர்கள் அடிப்­ப­டையில் தெரி­வு­செய்­யப்­பட்­டது/ நிய­மிக்­கப்­பட்­டது ( ஹெல உரு­மய சார்பில்) ஐ தே கட்சி என்­பதால் அவர்கள் ஐ தே கட்­சிக்­கா­ரர்கள் என்று தட்டை மாற்றி தான் சார்ந்த அணிக்கு வக்­கா­லத்து வாங்கும் நிலைக்கு நம்­ம­வர்கள் செல்­கின்­றார்கள்; என்றால் இந்த சமூ­கத்­திற்கு எப்­போது விடிவு கிடைக்­கப்­போ­கின்­றது. உண்­மையில் கவ­லை­யாக இருக்­கின்­றது.

இந்­நி­லை­யில்தான் இந்த வெட்­டிப்­புள்ளி அதி­க­ரிப்பை இவர்கள் ஆத­ரிப்­ப­தையும் பார்க்­க­வேண்டி இருக்­கி­றது.

வெட்­டுப்­புள்ளி

இந்த வெட்­டுப்­புள்ளி குறைப்­புக்கு கார­ண­மா­யி­ருந்­தது மறைந்த தலைவர் என்­பது நமக்குத் தெரியும். தனக்­கெ­தி­ராக ரணில் தலை­மை­யி­லான ஐ. தே. க நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்­டு­வந்து அவ­மா­னப்­ப­டுத்­திய சூழ்­நி­லையில் மனம்­புண்­பட்­ட­வ­ராக உணர்ச்­சி­வ­சப்­பட்ட ஒரு சூழ்­நி­லையில் மறைந்த தலைவர்

‘ ரணில் சார­தி­யாக இருக்­கும்­வரை ஐ. தே. க. என்ற வாக­னத்தில் ஏற­மாட்டேன்’ என்று கூறி­ய­வார்த்­தை­களை வேத­வாக்­காக கொள்­ப­வர்கள் ( எல்­லோரும் தலை­வரின் மறை­விற்­குப்பின் ஒரு கட்­டத்தில் அந்த வாக­னத்தில் பய­ணித்­த­வர்­கள்தான்) மறைந்த தலைவர் குறைப்­ப­தற்கு கார­ண­மா­யி­ருந்த வெட்­டுப்­புள்ளி அதி­க­ரிப்பை இன்று ஆத­ரிப்­பது அல்­லது அவ்­வ­தி­க­ரிப்பால் பாதிப்­பில்லை; என்­பது ஆச்­ச­ரி­ய­மா­னது.

தமக்கு வச­தி­யான இடத்தில் தலை­வரின் வார்த்­தைகள் வேத­வாக்கு ஏனைய இடங்­களில் அது அர்த்­த­மற்­றது என்­பது இவர்­களின் நிலைப்­பாடு.

மறைந்த தலைவர் ( மு.கா )வட, கிழக்­கிற்கு வெளியே தனித்தும் போட்­டி­யிட்­டி­ருக்­கிறார்; இணைந்தும் போட்­டி­யிட்­டி­ருக்­கிறார். கண்­டியில் போட்­டி­யிட்டு 5.29% வாக்­கு­க­ளைப்­பெற்று ஆச­னமும் பெற்றோம். 12.5% ஆக அதி­க­ரித்தால் அது சாத்­தி­யமா?

2012 இன் குடி­சன மதிப்­பீட்டின் படி கொழும்பில் முஸ்­லிம்கள் 10.5%, களுத்­துறை 9.2% கண்டி 14%, மாத்­தளை 9.1%, குரு­நா­கல 7.1%, புத்­தளம் 19.3%, அநு­ரா­த­புர 8.2%, பொலன்­ன­றுவை 7.2%, கேகாலை 6.9% ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­களும் ஒன்­று­பட்டு வாக்­க­ளித்­தாலும் வட கிழக்­கிற்கு வெளியே கண்டி, புத்­தளம் தவிர்த்து வேறு எங்கும் ஒரு ஆச­னமும் பெற­மு­டி­யாது வெட்­டுப்­புள்ளி அதி­க­ரித்தால்.

மாறாக, வெட்­டுப்­புள்ளி 5% ஆக இருக்­கும்­போது ஒன்­று­பட்டு வாக்­க­ளித்தால் ஒரு முஸ்­லிம்­கட்­சி­மூலம் மேற்­கு­றிப்­பிட்ட அனைத்து மாகா­ணங்­க­ளிலும் பெரும்­பாலும் ஆகக்­கு­றைந்­தது ஒரு ஆச­னமும் சில இடங்­க­ளில் இரண்டு அல்­லது சில­வேளை மூன்றும் பெறலாம்.

முஸ்­லிம்கள் இது­வரை அவ்­வாறு ஒற்­று­மைப்­ப­ட­வில்லை என்­பது வேறு­வி­டயம். ஒற்­று­மைப்­பட்டால் அவ்­வாறு ஆசனம் பெறக்­கூ­டிய ஒரு பலத்தை

உடைக்­க­முற்­ப­டு­வது சரியா?

சரி அவர்கள் இது­வரை ஒற்­று­மைப்­ப­ட­வில்லை. அதனால் முஸ்­லிம்­கட்­சி­களும் தேசி­யக்­கட்­சி­க­ளி­லேயே போட்­டி­யி­டு­கின்­றன. எனவே, வெட்­டுப்­புள்ளி அதி­க­ரிப்­பதால் என்ன பாதிப்பு என்­கி­றார்கள்.

இதன்­மூலம் முஸ்­லிம்கள் ஒரு­போதும் ஒற்­று­மைப்­ப­டவே மாட்­டார்கள்; என்ற முடி­வுக்கு வரு­கி­றார்கள். சமூ­கத்­தின்­மீது அவ்­வ­ளவு நம்­பிக்கை அவர்­க­ளுக்கு.
சரி, ஒற்­று­மைப்­ப­டவே மாட்­டார்கள்; என வைத்­துக்­கொள்வோம். முஸ்­லிம்கள் தேசி­யக்­கட்­சி­களில் போட்­டி­யிடும் நிலையில் வெட்­டுப்­புள்ளி பாதிப்பா? ஆம் பாதிப்­புத்தான். எவ்­வாறு?

வட, கிழக்­கிற்கு வெளியே இன்னும் பெரும்­பான்­மை­யான முஸ்­லிம்கள் தேசி­யக்­கட்­சி­க­ளையே, குறிப்­பாக ஐ.தே.க யே ஆத­ரிக்­கி­றார்கள். ஒரு 25% அல்­லது 30% முஸ்­லிம்­கட்­சி­களை ஆத­ரிக்­கலாம். அந்த வாக்­கு­க­ளைக்­கொண்டு தனித்­துப்­போட்­டி­யி­டும்­போது பெரும்­பாலும் ஆசனம் பெறு­வது சிர­ம­மா­னது. ஒரு சில சம­யங்­களில் விதி­வி­லக்­கி­ருக்­கலாம். எனவே, தேசி­யக்­கட்­சி­க­ளுடன் போட்­டி­யி­டு­கி­றார்கள்.

தேசி­யக்­கட்­சி­க­ளுக்கு  இவர்கள் ஏன் தேவை?

அதுதான் விகி­தா­சாரப் பிர­தி­நி­தித்­து­வமும் போனஸ் முறை­யு­மாகும். இந்­த­மு­றை­யின்கீழ் சில­நேரம் ஒரு வாக்கு மேல­தி­க­மாக ஒரு ஆச­னத்­தையோ சில­வேளை இரு ஆச­னங்­க­ளையோ தீர்­மா­னிக்­கலாம்; என்­பது நமக்குத் தெரியும். இவர்கள் தனித்­துப்­போட்­டி­யிட்டால் இவர்­க­ளது சிறிய வாக்கு பிரி­வ­தால் தேசி­யக்­கட்சி சில மாவட்­டங்­களில் ஒன்றோ அல்­லது இரண்டோ ஆச­னங்கள் விகிதம் இழக்­கலாம்.

இங்கு சிறு­பான்­மைக்­கட்­சி­யொன்று தனித்­துப்­போட்­டி­யி­டும்­போது விதி­வி­லக்­காக கண்­டியில் 2000ஆம் ஆண்டு பெற்­ற­துபோல் ஒரு ஆசனம் பெறலாம்; பெறா­ம­லும்­போ­கலாம். பெறா­விட்டால் சிறு­பான்­மைக்­கட்­சிக்கும் நட்டம்; தேசி­யக்­கட்­சிக்கும் நட்டம்.

அத­னால்தான் அவ்­வாறு கூட்­டி­ணை­கி­றார்கள். அந்­த­வாக்­கு­க­ளுக்­கா­கத்தான் அவர்­க­ளுக்கு தேசி­யப்­பட்­டி­யல்கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. ஒவ்­வொரு தேர்­த­லிலும் முஸ்­லிம்­களின் கணி­ச­மான ஆச­னங்கள் தேசி­யப்­பட்­டி­ய­லாக அமை­கின்­றன. இது இரு தரப்பிற்கும் இலாபமாகும்.

வெட்டுப்புள்ளி உயர்த்தப்படுவது இதனை எவ்வாறு பாதிக்கிறது?

வெட்டுப்புள்ளி உயர்த்தப்படும்போது (கண்டி?), புத்தளம் கணிசமாக ஒற்றுமைப்பட்டு விதிவிலக்காக ஆசனம் பெற்றாலேயொழிய வடகிழக்குக்கு வெளியே தனிக்கட்சி ஆசனம்பெறமுடியாது எனவே, முஸ்லிம்கள் தற்போது அளிக்கின்ற சிறிய வீதமான வாக்குகளைக்கூட அளித்து வீணாக்க மாட்டார்கள்.விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள்

தேசியக்கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும். ஆனாலும் பெரும்பாலும் கொழும்பு, கண்டி தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் ஆசனம் பெறுவது கடினம். காரணம், மற்ற சமூகத்தவரின் விருப்பு வாக்குகளை இவர்கள் தாண்டமுடியாது.

அதேநேரம் இவர்கள் அளிக்கும் வாக்குகளுக்கு கைமாறாக தேசியப்பட்டியலும் பெரும்பாலும் கிடைக்கப்போவதில்லை.

கிடைத்தாலும் சிறிய கட்சிகள் பேரம்பேசி பெறுவது போல் பெருமளவு கிடைக்காது.

சுருங்கக்கூறின் வெட்டுப்புள்ளி அதிகரிக்கப்பட்டால் வட,கிழக்குக்கு வெளியே பெரும்பாலான மாவட்டங்களில் முஸ்லிம்களின் வாக்குகள்

பெறுமதியற்றதாக மாறப்போகின்றன. இது எங்களுக்கு பாதிப்பில்லையா? தேசியக்கட்சியில் போட்டியிட்டாலும் பாதிப்புத்தான். இதையும் நியாயப்படுத்துகிறார்களே

சிந்தியுங்கள்.-Vidivelli

  • வை. எல். எஸ். ஹமீட்

Leave A Reply

Your email address will not be published.