ராகம வைத்தியசாலை தொழுகை அறை, கிராண்ட்பாஸ் பள்ளியை மீள திறக்க நடவடிக்கை எடுக்குக

கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் கோரிக்கை

0 2,447

ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து மூடப்­பட்ட ராகம வைத்­தி­ய­சா­லையில் இயங்­கி­வந்த தொழுகை அறையை மீளத்­தி­றப்­ப­தற்கும், பல வரு­டங்­க­ளாக மூடப்­பட்­டுள்ள கிராண்ட்பாஸ் மோல­வத்த பள்­ளி­வா­சலை மீளத்­தி­றப்­ப­தற்கும் உட­ன­டி­யாக ஏற்­பா­டு­களைச் செய்­யு­மாறு கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ளனம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பைசர் முஸ்­த­பா­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

இது தொடர்பில் கொழும்பு மாவட்ட மஸ்­ஜித்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் கருத்து தெரி­விக்­கையில், பல வரு­டங்­க­ளாக கிராண்ட்பாஸ் மோல­வத்த பள்­ளி­வாசல் மூடப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக அர­சி­யல்­வா­தி­க­ளிடம் கோரிக்­கைகள் விடுத்­த­போது விரைவில் ஏற்­பாடு செய்­வ­தாக உறு­தி­மொ­ழிகள் வழங்­கப்­பட்­டன.

ஆனால் தீர்வு வழங்­கப்­ப­ட­வில்லை. எனவே இப்­ப­குதி மக்­களின் நலன்­க­ருதி உட­ன­டி­யாக பள்­ளி­வாசல் திறக்­கப்­ப­ட­வேண்டும்.

அத்­தோடு கடந்த உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­த­லை­ய­டுத்து ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் இன்று வரை ராகமை வைத்­தி­ய­சா­லையின் தொழுகை அறை மூடப்­பட்­டுள்­ளது.

தற்­போது நாட்டில் தீவி­ர­வாதம் ஒழிக்­கப்­பட்டு சுமு­க­நிலை உரு­வா­கி­யுள்­ளது. இந்­நி­லையில் விரைவில் தொழுகை அறை திறக்­கப்­ப­ட­வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா உறுதியளித்துள்ளார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.