அமெரிக்க – ஈரான் மோதலால் இலங்கையின் பாதுகாப்பிற்கு சிக்கல்

அரசு ரஞ்சன் விவகாரத்துக்கே முக்கியத்துவம் அளிக்கிறது என்கிறார் சஜித்

0 581

அரசு ரஞ்சன் விவகாரத்துக்கே முக்கியத்துவம் அளிக்கிறது என்கிறார் சஜித் பிரச்­சி­னை­யாகி விட்­ட­தென்று எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார்.

ஹோமா­கம பிர­தே­சத்தில் சனிக்­கி­ழமை நடை­பெற்ற மக்கள் சந்­திப்பில் கலந்­து­கொண்டு இதனைத் தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது :

ஈரானும் அமெ­ரிக்­காவும் பார­தூ­ர­மான மோத­லொன்­றுக்கு ஆயத்­த­மாகிக் கொண்­டி­ருக்­கின்­றன. இவ்­விரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் மோதல்கள் ஏற்­பட்டால் இலங்­கைக்கு ஏற்­ப­டக்­கூ­டிய சவால்கள் குறித்து யாரும் கவனம் செலுத்­த­வில்லை. இதை­விட முக்­கி­ய­மாக ரஞ்சன் ராம­நா­யக்­கவின் தொலை­பேசி உரை­யாடல் குரல் பதி­வு­களைப் பற்றி பேசிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

அமெ­ரிக்கா – ஈரா­னுக்­கி­டையில் ஏற்­பட்­டுள்ள மோதல்­களால் தோன்­றி­யுள்ள சர்­வ­தேச ஸ்திர­மற்ற தன்­மையால் யுத்தம் ஏற்­ப­டு­மாக இருந்தால், இலங்­கையின் தேசிய பாது­காப்­புக்கு பார­தூ­ர­மான நெருக்­க­டிகள் ஏற்­ப­டக்­கூடும்.
இந்த இரண்டு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான மோத­லினால் சர்­வ­தே­சத்தில் எரி­பொருள் விலை அதி­க­ரித்த போக்­கினை காண்­பிக்­கி­றது. இவ்­வா­றான நிலையில் இலங்­கையில் தற்­போது காணப்­ப­டு­கின்ற விலைக்கே தொடர்ந்தும் எரி­பொ­ருட்­களை விநி­யோ­கிக்க முடி­யு­மானால் அது வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும்.

மாறாக, எரி­பொருள் விலை அதி­க­ரிக்­கப்­பட்டால் பாதிக்­கப்­படப் போவது சாதா­ரண பொது­மக்­க­ளே­யாவர். மேற்­கு­லக நாடு­களில் பணி­பு­ரி­ப­வர்கள் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் முக்­கிய பங்கைப் பெறும் அந்­நிய செலா­வணி மூலம் வரு­மா­னத்தை ஈட்­டித்­த­ரு­கின்­றனர். அவர்­க­ளு­டைய தொழி­லுக்கு பாது­காப்­பற்ற தன்மை ஏற்­பட்டால் இலட்­சக்­க­ணக்­கானோர் பாதிக்­கப்­ப­டுவர். 

அவ்­வாறு ஏதேனும் நடை­பெற்றால் அதனை ஈடு­செய்­வ­தற்கு எம்மால் எடுக்­கப்­ப­டக்­கூ­டிய பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் என்ன? அதற்­கான மாற்று வழி­முறை என்ன? இவை­பற்றி இது­வ­ரையில் அர­சாங்கத் தரப்பில் எந்தப் பேச்­சு­வார்த்­தை­களும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. ஏன் பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை? ரஞ்சன் ராம­நா­யக்­கவின் குரல் பதிவுகளே அதற்கான பிரதான காரணம்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு, எரிபொருள் பிரச்சினை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்றவற்றைவிட இன்று ரஞ்சனின் தொலைபேசி அழைப்புக்களே அரசாங்கத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் காணப்படுகிறது என்றார். -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.