பிழையான கண்கொண்டு பார்ப்பதை கண்டிக்கிறோம்

ரிஷாத் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

0 673

ஜனா­தி­ப­தியின் நல்ல வேலைத்­திட்­டங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்கத் தயா­ராக இருக்­கின்றோம். அதே­போன்று சிறு­பான்மை சமு­தாயம் மற்றும் சிறு­பான்மை கட்­சி­களை பிழை­யான கண்­கொண்டு பார்ப்­பதை வன்­மை­யாகக் கண்­டிக்­கின்­றோ­மென அகில இலங்கை மக்கள் காங்­கரஸ் கட்­சியின் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை எதிர்க்­கட்­சி­யினால் கொண்­டு­வந்த ஜனா­தி­ப­தியின் கொள்கைப் பிர­க­டன உரை மீதான சபை ஒத்­தி­வைப்­பு­வேளை பிரே­ர­ணையின் இரண்டாம் நாள் விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

ஜனா­தி­பதி தற்­போது ஆரம்­பித்­துள்ள நல்ல விட­யங்­க­ளுக்கு நானும் எனது கட்­சியும் ஆத­ர­வ­ளிக்கத் தயா­ராக இருக்­கின்றோம். என்­றாலும் சிறு­பான்மை சமு­தாயம் மற்றும் சிறு கட்­சி­களை பிழை­யான கண்­கொண்டு பார்ப்­பதை நாங்கள் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம். சிறு­கட்­சி­களை வெளி­யேற்­று­கின்ற சிந்­தனை இந்த நாட்டின் ஜன­நா­ய­கத்தை குழி­தோண்டி புதைக்­கின்ற செய­லாகும்.

அத்­துடன் ஜனா­தி­ப­தியின் உரையில் நீண்­ட­கால யுத்­தத்­துக்கு முகம்­கொ­டுத்த வட­கி­ழக்கு மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பா­கவோ நிரந்­த­மான தீர்வு சம்­பந்­த­மாகவோ பல பேச்­சு­வார்த்­தைகள் நடந்து முடிந்­தி­ருக்­கின்­ற­போதும் அது தொடர்பில் எந்த வார்த்­தையும் தெரி­விக்­கப்­ப­டா­ம­லி­ருந்­தது கவ­லை­ய­ளிக்­கின்­றது. அதே­போன்று வட­கி­ழக்கு மக்­களின் தீர்க்­கப்­ப­ட­வேண்­டிய காணிப்­பி­ரச்­சினை இருக்­கின்­றது. இது­தொ­டர்­பா­கவும் எந்த அறி­விப்­பையும் காண­வில்லை.

அத்­துடன் நாங்கள் சிறு­ப­ரா­யத்தில் தேசிய கீதத்தை தமிழில் பாடி­யி­ருக்­கின்றோம். ஆனால் இன்று தேசிய கீதத்தை தமிழில் பாடக்­கூ­டா­தென அமைச்சர் ஒருவர் தெரி­வித்­தி­ருப்­பது வேத­னை­ய­ளிக்­கின்­றது. இவ்­வா­றான சம்­ப­வங்கள் 1956ஆம் ஆண்டில் இடம்­பெற்ற சம்­ப­வங்­களை மீண்டும் எண்­ணத்­தூண்­டு­கின்­றது. அதனால் இது­தொ­டர்­பாக தெளி­வான பதி­லொன்றை தர­வேண்­டு­மென எதிர்­பார்க்­கின்றோம்.

மேலும், இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் என தெரி­விக்­கின்­றனர். இஸ்­லாத்தில் அடிப்­ப­டை­வாதம் என்­ற­தொன்று கிடை­யாது. இஸ்­லாத்தின் பெயரால் யாரோ ஒருவர் செய்த தவறை கண்­டித்­த­தோடு அத­னுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை காட்­டிக்­கொ­டுத்து அவர்­க­ளுக்கு பூரண தண்­ட­னையை பெற்­றுக்­கொ­டுக்­கின்ற விட­யத்தில் எமது சமூகம் பூரண ஒத்­து­ழைப்பை வழங்கி இருக்­கின்­றது.

அத்­துடன் புல­னாய்­வுத்­துறை பொறுப்­பா­ள­ராக முஸ்லிம் ஒரு­வரை நிய­மித்­தி­ருப்­பது தவ­றென சரத் பொன்­சேகா சபையில் தெரி­வித்­தி­ருந்தார். ஸஹ்ரான் என்ற ஒரு கயவன் செய்த அந்தக் கொடிய செய­லுக்­காக, 22இலட்சம் முஸ்லிம் மக்­க­ளையும் பிழை­யான கண்­கொண்­டு­பார்ப்­பது தவ­றான செய­லாகும். அவ்­வா­றான சிந்­த­னைகள் மாற்­றப்­ப­ட­வேண்டும்.

அதே­போன்று வைத்­தியர் ஷாபியின் விட­யத்தில் மீண்டும் அநீதி இழைக்­கப்­ப­டு­கின்­றது. அவர் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் முடி­வ­டைந்த பின்­னரும் மீண்டும், அவர் விசா­ரிக்­கப்­பட வேண்­டு­மென குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவினர் கோருவது எந்த வகையில் நியாயமானது? குற்றமிழைத்தால் தண்டிக்கப்பட வேண்டுமேதவிர, இஸ்லாமியர் என்பதற்காக அவர் தண்டிக்கப்படக் கூடாது.

அத்துடன் அண்மையில், நெலுந்தெனிய, உடுகும்புற பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு முன்னால் புத்தர் சிலையொன்றை வைத்துள்ளார்கள். அது உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றார்.-Vidivelli

  • ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்

Leave A Reply

Your email address will not be published.