முஸ்லிம் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கின்ற நிலையில் புலனாய்வு அதிகாரியாக முஸ்லிம் ஒருவரை நியமித்தது ஏன்?

சபையில் ஐ.தே.க. எம்.பி. சரத் பொன்சேகா கேள்வி

0 636

இலங்­கைக்கும், உல­கத்­திற்கும் முஸ்லிம் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் இருக்­கின்ற நிலையில் தேசிய புல­னாய்வு அதி­கா­ரி­யாக ஒரு முஸ்லிம் நபரை ஏன் நிய­மித்­தார்கள். தமிழ் பயங்­க­ர­வாத சூழல் ஒன்று இருந்த நேரத்தில் தமிழ் புல­னாய்வு அதி­கா­ரியை நிய­மித்­தி­ருந்தால் யுத்­தத்தை முடித்­தி­ருக்க முடி­யுமா என சபையில் கேள்வி எழுப்­பிய ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் பொன்­சேகா, ஜனா­தி­ப­தியின் நெருக்­கத்தின் கார­ண­மா­கவே இந்த பத­விகள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன எனவும் குற்றம் சுமத்­தினார்.

ஜனா­தி­ப­தியின் கொள்கை பிர­க­டன உரை மீதான விவாதம் நேற்று சபையில் இடம்­பெற்­றது. இதில் உரை­யாற்றும் போதே அவர் இந்த கார­ணி­களை கூறினார். அவர் மேலும் கூறு­கையில்,

இன்று நாட்டில் பாது­காப்பு அமைச்சர் ஒருவர் இல்­லாது இரா­ஜாங்க அமைச்சர் ஒரு­வ­ருடன் மட்­டுமே அர­சாங்கம் பய­ணிக்­கின்­றது. அமைச்­ச­ரவை நிய­மிக்­கப்­பட்­டுள்ள போதிலும் பாது­காப்பு அமைச்சர் இல்லை. இது பாரிய பிரச்­சினை.

இவை­யெல்லாம் அர­சாங்­கத்தின் குறை­பா­டாகும். சிறு­பிள்­ளைகள் தீர்­மானம் எடுப்­பதை போல் அர­சி­யலில் தீர்­மானம் எடுக்க முடி­யாது. அத்­துடன் இன்று வீரர்கள் போன்றும் பௌத்­தர்கள் போன்றும் பேசும் நபர்கள் அன்று பிர­பா­கரன் இருந்த காலத்தில் வெளியில் வர­வில்லை.

தேசிய பாது­காப்பை பலப்­ப­டுத்­து­வ­தாக கூறும் ஜனா­தி­பதி பயங்­க­ர­வா­தத்தை தடுக்க நட­வ­டிக்கை எடுக்க முயற்­சிப்­ப­தாக கூறினார். அதற்கு முதலில் பாது­காப்பு அமைச்­சரை நிய­மிக்க வேண்டும். அதேபோல் தகு­தி­யான நபர்­களை பத­விக்கு நிய­மிப்­ப­தாக கூறி இரு­வரை நிய­மித்தார். ஒருவர் தேசிய புல­னாய்வு அதி­காரி, இன்­னொ­ருவர் அரச புல­னாய்வு அதி­காரி. இந்த இரு­வரும் பொறுப்­புக்கு தகுதி இல்­லாத நபர்கள். இன்று முழு உல­கத்­திலும், இலங்­கை­யிலும் முஸ்லிம் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் இருக்­கின்ற நிலையில் அரச புல­னாய்வு அதி­கா­ரி­யாக முஸ்லிம் அதி­காரி ஒரு­வரை நிய­மித்து எவ்­வாறு சேவை­யினை முன்­னெ­டுக்க முடியும். ஆனால் இவர்கள் இரு­வரும் ஜனா­தி­ப­திக்கு நெருக்­க­மான நபர்கள் என்ற கார­ணத்­தினால் அவர்­களை இந்த பத­வி­க­ளுக்கு நிய­மித்­துள்ளார்.

தமிழ் பயங்­க­ர­வாத சூழல் ஒன்று இருந்த நேரத்தில் தமிழ் புல­னாய்வு அதி­கா­ரியை நிய­மித்­தி­ருந்தால் யுத்­தத்தை முடித்­தி­ருக்க முடி­யுமா, அது அவர்­களின் பொறுப்­புக்­களை சரி­யாக கையாள முடி­யாத நிலை­மைக்கு கொண்டு செல்லும். அதேபோல் இப்­போது முஸ்லிம் அதி­காரி ஒரு­வரை நிய­மித்­துள்ள நிலையில் அவரால் முஸ்லிம் பயங்­க­ர­வாத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட முடியாது. அவரது குடும்பம், வதிவிடம் என அனைத்துமே தடையாக இருக்கும். எனவே பொறுப்பான அதிகாரிகளை சரியான இடத்தில் நியமிக்க இந்த அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றார்.-Vidivelli

  • ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் 

Leave A Reply

Your email address will not be published.