கோத்தாவின் ஆட்சியில் இன வன்முறைகளுக்கு இடமில்லை

முஸ்லிம்கள் பாதுகாப்பாக வாழலாம்: துருக்கி தூதுவரிடம் பாதுகாப்பு செயலாளர் உறுதி

0 709

கடந்த அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்தில் கண்­டி–­தி­க­னயில் இடம்­பெற்­றது போன்ற இரு சமூ­கங்­க­ளுக்கு இடை­யி­லான வன்­மு­றைகள் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெ­ற­மாட்­டாது. அதற்கு ஒரு போதும் இட­ம­ளிக்­கப்­பட மாட்­டாது. வன்­முறைச் சம்­ப­வங்­களில் ஈடு­பட்­ட­வர்கள் சட்­டத்தின் முன்­நி­றுத்­தப்­ப­டு­வார்கள் என பாது­காப்புச் செய­லாளர் இளைப்­பா­றிய மேஜர் ஜெனரல் கமல் குண­ரத்ன தெரி­வித்தார். இலங்­கையில் துருக்­கியின் தூத­ராகக் கட­மை­யாற்­றிய துன்கா ஒஸ்­துஹாதர் தனது பத­வியை நிறை­வு­செய்து நாடு திரும்­ப­வுள்ள நிலையில் பாது­காப்பு செய­லாளர் கமல் குண­ரத்ன ஏற்­பாடு செய்­தி­ருந்த பிரி­யா­விடை நிகழ்வில் கலந்­து­கொண்டார்.

பாது­காப்பு அமைச்சில் இடம்­பெற்ற இந்­நி­கழ்வில் துருக்கி தூத­ரிடம் கருத்து தெரி­விக்­கை­யிலே பாது­காப்பு செய­லாளர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், ‘இலங்­கையின் அனைத்து இன­மக்­க­ளுக்கும் உரிய பாது­காப்பு வழங்­கப்­படும் என்றும் கூறினார்.

தனது பத­வியை நிறை­வு ­செய்து நாடு திரும்பும் துருக்கி நாட்டின் தூதுவர் கருத்து தெரி­விக்­கையில், ‘இலங்­கையில் ஆல­யங்கள் மற்றும் ஹோட்­டல்­களில் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­களில் முஸ்­லிம்கள் சம்­பந்­தப்­ப­ட­வில்லை. இலங்கை முஸ்லிம் சமூகம் எப்­போதும் அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வா­கவே இருந்­து­வ­ரு­கி­றது’ என்றார்.

பாது­காப்பு செய­லாளர் மற்றும் துருக்கி தூத­ருக்கு இடையில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் பாது­காப்பு செய­லாளர் கமல் குண­ரத்ன இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உற­வுகள், பாது­காப்பு ஏற்­பா­டுகள் தொடர்பில் கருத்­துக்­களை முன்­வைத்தார்.

இரு நாடு­களின் பாது­காப்புப் பிரி­வி­ன­ருக்கு பயிற்­சிகள் வழங்­கு­வது மற்றும் உளவு, புல­னாய்வு தொடர்­பு­களை பரி­மா­றிக்­கொள்­வது என்­பது தொடர்பிலும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

பாது­காப்பு செய­லாளர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘நாட்டு மக்கள் அனை­வரும் சம­மாகக் கரு­தப்­ப­டு­வார்கள். அவர்­க­ளது இனம், மதம், எது­வாக இருந்­தாலும் அவர்கள் இலங்­கை­யர்கள் என்­பது கருத்திற் கொள்­ளப்­படும்.

‘இஸ்லாம் சமா­தா­ன­மான ஒரு மத­மாகும். இஸ்லாம் இனங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மை­யையே போதிக்­கி­றது. தவ­றாக வழி­ந­டத்­தப்­பட்ட ஒருசில இளை­ஞர்­களால் இந்த உய­ரிய மதம் பாதிப்­புக்­குள்­ளாகக் கூடாது’ எனவும் பாது­காப்பு செய­லாளர் தெரி­வித்தார்.

அத்­தோடு இலங்­கையில் துருக்கி தூதுவர் ஆற்றிய சிறந்த சேவைக்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், அவரது எதிர்காலத்துக்கு வாழ்த்துக்களை யும் தெரிவித்தார்.

நிகழ்வில் இலங்கையின் துருக்கி தூதுவராலயத்தின் மூன்றாம் நிலைச் செயலாளர் நஸான் டெனிஸும் கலந்து கொண்டிருந்தார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.