நாட்டுக்காக உயிரையே அர்ப்பணிக்கத் துணிந்த என்னை யாசகம் கேட்கும் நிலைக்குத் தள்ளாதீர்கள்

0 292

‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின் உத­வி­யினால் உயிர் தப்­பிய நான் கடந்த 10 மாதங்­க­ளாக எழும்பி நடக்க முடி­யாமல் படுத்த படுக்­கை­யி­லி­ருந்தே சிகிச்சை பெற்று வரு­கின்றேன்‘‘ என மாவ­னல்லை, தனா­கமை பிர­தே­சத்­தினைச் சேர்ந்த 38 வய­தான ராஸீக் முஹம்­மது தஸ்லீம் விடி­வெள்­ளி­யிடம் கூறினார்.
மாவ­னல்லை பிர­தே­சத்தில் சில அடிப்­ப­டை­வா­தி­க­ளினால் புத்தர்  சிலை உடைக்­கப்­பட்­ட­போது அப்­பி­ர­தே­சத்தில் சிங்­கள – முஸ்லிம் கல­வ­ர­மொன்று ஏற்­படக் கூடிய சாத்­தியம் காணப்­பட்­டது. இதனைத் தவிர்க்கும் முக­மா­கவும், நாட்டின் நல்­லி­ணக்­கத்­திற்­கா­கவும் சிலை­யினை உடைத்­த­வர்­களை கண்­டு­பி­டித்து சட்­டத்தின் முன்­நி­றுத்தும் நட­வ­டிக்­கையில் முன்­னின்று செயற்­பட்­ட­தா­லேயே தனக்கு இந்த நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக அவர் கூறினார்.
இந்த உழைப்­பிற்­கான பரி­சா­கவே நான் சுடப்­பட்டேன்.  இதனால் கடந்த 10 மாதங்­க­ளாக சிறையில் அடைக்­கப்­பட்­ட­வனைப் போன்று நான்கு சுவர்­க­ளுக்கு மத்­தியில் சிக்­குண்டு சிகிச்சை பெற்று வரு­கிறேன் என்றும் அவர் தனது நிலை­மையை விளக்­கினார். இந்த சம்­ப­வத்தின் பின்னர் மூன்று குழந்­தை­களைக் கொண்ட தனது குடும்பம் இன்று பாரிய பொரு­ளா­தார நெருக்­க­டியை எதிர்­நோக்­கி­யுள்­ள­தா­கவும் முஸ்லிம் சமூ­கத்­திற்­கா­கவும் நாட்­டிற்­கா­கவும் செய்த சேவைக்­காக யாசகம் கேட்­டுக்கும் நிலைக்கு என்னைத் தள்­ளி­விட வேண்டாம் என்றும் தான் பகி­ரங்­க­மாக வேண்­டுகோள் விடுப்­ப­தாக தஸ்லீம் கூறு­கிறார்.
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தினத்­தன்று பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு மற்றும் நீர்­கொ­ழும்பு ஆகிய பிர­தே­சங்­க­ளி­லுள்ள கிறிஸ்­தவ தேவ­ால­யங்கள் மற்றும் கொழும்­பி­லுள்ள மூன்று, ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்கள் ஆகி­ய­வற்றில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைத் தாக்­கு­த­லினால் 45 வெளி­நாட்­ட­வர்கள் உட்­பட  259 பேர் கொல்­லப்­பட்­ட­துடன் சுமார் 500க்கு மேற்­பட்டோர் காய­ம­டைந்­தனர்.
இந்த சம்­ப­வத்­தினால் நாடளா­விய ரீதியில் பல்­வேறு தரப்­பினர் நேர­டி­யா­கவும், மறை­மு­க­மா­கவும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் குறித்த பாதிப்­பி­லி­ருந்து இன்று வரை மீள­மு­டி­யாத நிலையே காணப்­ப­டு­கின்­றனர்.  
இந்த தற்­கொலை தாக்­கு­த­லுக்கு முன்னர் சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் வெள்­ளோட்ட நட­வ­டிக்­கை­யாக மேற்­கொள்­ளப்­பட்ட சம்­ப­வமே மாவ­னெல்லை நகரை அண்­டிய பிர­தே­சங்­களில் காணப்­பட்ட புத்தர் சிலைகள் தாக்­கப்­பட்­ட­மை­யாகும். கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி இடம்­பெற்ற இந்த தாக்­கு­த­லினை சாதீக் இப்­ராஹிம் மற்றும் சாஹீத் இப்­ராஹிம் சகோ­த­ரர்கள் தலை­மை­யேற்று வழி­ந­டத்­தினர். குறித்த சம்­ப­வத்தின் பின்­ன­ணி­யி­லி­ருந்­த­வர்­களை பொலிஸார் கைது செய்­வ­தற்கு உத­வி­யாக செயற்­பட்­ட­வரே இந்த தஸ்லீம்.
இதற்கு பழி­வாங்கும் நோக்­கி­லேயே கடந்த 2019 மார்ச் 9 ஆம் திகதி அதி­காலை பயங்­க­ர­வா­தி­க­ளினால் தஸ்லீம் சுடப்­பட்டார். இவர் உறக்­கத்தில் இருந்த போது, அத்­து­மீறி வீடு புகுந்த பயங்­க­ரவா­தி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிச் சூட்டில் படு­கா­ய­ம­டைந்த அவர், பல மாதங்­களாக நினை­வி­ழந்து காணப்­பட்டார்.
வைத்­தி­யர்­களின் தீவிர முயற்சி கார­ண­மாக தற்­போது தேறி வரு­கின்ற போதிலும் தலையில் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கி சூடு கார­ண­மாக அவ­ரது உடலின் இடது பக்க பகுதி செய­லி­ழந்­துள்­ள­துடன் எழும்பி நிற்க முடி­யாத படி படுக்­கை­யி­லேயே தனது நாட்­களைக் கடத்தி வரு­கிறார்.  இவர் எப்­போது பழைய நிலைக்கு மீள்வார் என்­பதை உறு­திப்­ப­டுத்த முடி­யா­துள்­ள­தாக வைத்­தி­யர்கள் கூறு­கின்­றனர்.
இந்த நிலையில் தஸ்லீம் தன்னைக் கொல்ல முயற்­சித்­ததன் பின்­னணி, அதனால் தனக்கு ஏற்­பட்ட பாதிப்­புகள் மற்றும் தனது குடும்­பத்தின் தற்­போதைய பொரு­ளா­தார நிலை­மைகள் குறித்து விடி­வெள்­ளி­யுடன் மனந்­தி­றந்து பேசினார். அதன் விபரம் வரு­மாறு :

Q உங்கள் மீது துப்­பாக்கி சூடு மேற்­கொள்­ளப்­பட்­டதன் பின்­னணி என்ன?

கடந்த வருட இறு­தியில் மாவ­னல்­லையை அண்­டிய பிர­தே­சங்­களில் சில புத்தர் சிலைகள் உடைக்­கப்­பட்­டன. இதனால் அப்­பி­ர­தே­சத்தில் சிங்­கள – முஸ்லிம் கல­வ­ர­மொன்று ஏற்­படக் கூடிய வாய்ப்­பொன்று காணப்­பட்­டது.  அக்­காலப் பகு­தியில் அமைச்­ச­ராக செயற்­பட்ட கபீர் ஹாசீமின் இணைப்புச் செய­லா­ள­ராக நான் செயற்­பட்டேன். அவரின் அறி­வு­றுத்­த­லுக்­க­மைய பொலி­ஸா­ருக்கு உத­வி­யாக சந்­தேக நபர்­களை கைது செய்­வ­தற்கு நான் உதவி புரிந்தேன்.

இந்த விவ­கா­ரத்­துடன் கைது செய்­யப்­பட்­ட­வர்­களின் தொலை­பேசி உரை­யா­டல்­களை பரிசீ­லித்த போது பல்­வேறு தக­வல்கள் வெளி­யா­கின. சந்­தேக நபர்­க­ளுடன் தொடர்­பு­டைய குழு­வொன்று புத்­த­ளத்­தி­லுள்ள விட­யமும் தெரிய வந்­தது.

இத­னை­ய­டுத்து குறித்த குழு­வி­னரை தேடி பொலி­ஸா­ருடன் நான் புத்­தளம் சென்றேன். இதன்­போது குறித்த குழு­வி­ன­ருடன் பொலிஸார் தொலை­பேசி உரை­யா­டலை மேற்­கொண்­டனர். எனினும் பொலி­ஸா­ருக்கு தமிழ் தெரி­யாது. அதே­போன்று அங்­குள்­ள­வர்­க­ளுக்கு சிங்­களம் தெரி­யாது. இதனால் தொடர்­பாடல் பிரச்­சினை ஏற்­பட்­டது.

இதனால் குறித்த குழு­வி­ன­ருடன்  நான் உரை­யா­டினேன். அப்­போது அவர்கள் அக்­கு­ற­ணையில் இருப்­ப­தாக குறிப்­பிட்­டனர். எனினும் பொலி­ஸாரின் தொலை­பேசி தொடர்­பாடல் கண்­கா­ணிப்பின் மூலம் புத்­தளம், வணாத்­த­வில்லு பிர­தே­சத்­தி­லேயே அவர்கள் இருக்­கின்ற விடயம் தெரிய வந்­தது. இத­னை­ய­டுத்து பொலி­ஸாரின் வாக­னத்­தினை புத்­தளம் பொலிஸில் நிறுத்­தி­விட்டு புத்­த­ளத்­தி­லுள்ள எனது நண்­பரின் முச்­சக்­கர வண்­டியில் குறித்த இடத்­திற்கு சென்றோம்.

அங்கு சென்ற போதுதான் நூற்­றுக்­க­ணக்­கான எடை­கொண்ட பாரிய வெடி­பொ­ருட்கள் மற்றும் நாச­கார திர­வி­யங்கள் கைப்­பற்­றப்­பட்­டன. இது­போன்ற பாரிய வெடி­பொ­ருட்கள் இங்கு கைப்­பற்­றப்­படும் என்று நாங்கள் ஒரு­போதும் எதிர்­பார்க்­க­வில்லை.

சந்­தே­க­ந­பர்­களை கைது செய்யச் சென்ற போதே எதிர்­பா­ரா­த­வி­த­மாக இவை கைப்­பற்­றப்­பட்­ட­துடன் அச் சம­யத்தில் அங்கு தங்­கி­யி­ருந்த நான்கு பேர் கைது செய்­யப்­பட்­டனர்.

இந்த சந்­தர்ப்­பத்தில் பொலிசார் மற்றும் இரா­ணு­வத்தின் அருகே நானும் நிற்­கின்ற புகைப்­ப­ட­மொன்று ஊட­கங்­களில் வெளி­யா­கின.

இத­னை­ய­டுத்தே பயங்­க­ர­வா­தி­களின் திசை என் மீது திரும்­பி­யது. இது தொடர்பில் அந்­நாட்­களில் பொலிஸ் முக்­கி­யஸ்தர் ஒருவர் என்னை தொடர்­பு­கொண்டு அவ­தா­ன­மாக இருக்­கு­மாறு அறி­வு­றுத்­தினார்.

Q வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் பாரிய வெடி­பொ­ருட்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட போது உங்­களின் மன­நிலை எவ்­வாறு காணப்­பட்­டது?

இந்த வெடி­பொ­ருட்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட போது சாதிக் மற்றும் சாஹித் சகோ­த­ரர்கள் கைது செய்­யப்­ப­ட­வில்லை. இதன் உரி­மை­யா­ளர்கள் அவர்கள் என அந்த தோட்­டத்­தி­லி­ருந்து கைது செய்­யப்­பட்ட இளை­ஞர்கள் தெரி­வித்­தனர். இதன் கார­ண­மாக குறித்த சகோ­த­ரர்­க­ளினால் ஏதா­வ­தொரு அசம்­பா­விதம் எதிர்­கா­லத்தில் மேற்­கொள்­ளப்­ப­டலாம் என நான் அஞ்­சினேன். இது தொடர்பில் பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கும் நான் தெரி­வித்தேன்.

Q உங்கள் மீது துப்­பாக்கிப் பிரே­யோகம் மேற்­கொள்­ளப்­பட்ட சம்­பவம் நினை­வி­ருக்­கி­றதா?

மார்ச் ஒன்­பதாம் திகதி அதி­கா­லை­யி­லேயே குறித்த சம்­பவம் இடம்­பெற்­ற­தாக மனைவி எனக்குத் தெரி­வித்தார். அதற்கு முதல் நாள் இரவு மாவ­னெல்லை நகரில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்­டு­விட்டு அங்­கி­ருந்து இரவு 10.30 மணி­ய­ளவில் வீடு திரும்­பிய போது மனை­வியும், கடைசி மகனும் கட்­டிலில் உறங்­கினர். நானும் அவர்­க­ளுடன் இணைந்து உறங்­கினேன். அவ்­வ­ளவும் தான் எனக்குத் தெரியும். அதன் பின்னர் நடந்த விட­யங்கள் எதுவும் எனக்குத் தெரி­யாது. சம்­பவம் நடந்து சில மாதங்­களின் பின்­னரே எனக்கு நினைவு மீண்­டது. அப்­போது நான் வைத்­தி­ய­சாலை கட்­டிலில் இருந்தேன்.
இந்த சம்­பவம் தொடர்பில் தஸ்­லீமின் மனை­வி­யான பாத்­திமா ஜன்னத் எம்­முடன் தனது நினை­வு­களை பகிர்ந்து கொண்டார்.

‘‘ துப்­பாக்கிச் சூட்டுச் சம்­பவம் இடம்­பெற்ற போது கணவர் தஸ்­லீ­முடன் நானும் எனது சிறிய மகனும் கட்­டிலில் உறங்­கி­யி­ருந்தோம். மார்ச் 9ஆம் திகதி அதி­காலை 4.30 மணி­ய­ளவில் இந்த துப்­பாக்கிச் சூடு நிகழ்ந்­தது.

பயங்­க­ர­வா­திகள் சமை­ய­லறை கத­வினை உடைத்­துக்­கொண்டு வீட்­டினுள் நுழைந்து, நாங்கள் உறங்­கி­யி­ருந்த கட்­டிலின் அருகே காணப்­பட்ட ஜன்னல் கதவை திறந்­து­விட்டு வெளியே சென்­றுள்­ளனர். வெளியே நின்­ற­வாறு சத்தம் வெளி­வ­ராத வகையில் சைலன்­சரை பயன்­ப­டுத்­தியே இந்த துப்­பாக்கிச் சூட்­டினை மேற்­கொண்­டுள்­ளனர். இதனால் பாரிய சத்தம் எதுவும் எழ­வில்லை.

சிறிய சத்­த­மொன்­றுதான் எனது காதுக்கு கேட்­டது. கைத்­தொ­லை­பே­சியின் சார்ஜர் வெடித்­தி­ருக்­கலாம் என நினைத்தேன். எனினும் அவ்­வாறு எதுவும் நடக்­க­வில்லை. பின்னர் மின்­சாரக் கோளாறு ஏற்­பட்­டி­ருக்­கலாம் என்று பரி­சோ­தித்தேன். அப்­ப­டி­யு­மில்லை. இந் நிலை­யில்தான் அறை­யினுள் தூர்­நாற்­ற­மொன்று வீசி­யது. இது தொடர்பில் கண­வ­ரிடம் வின­வினேன். அவ­ரி­ட­மி­ருந்து பதி­லெ­து­வு­மில்லை. அப்­போ­துதான் அவர் மயக்­க­முற்று கட்­டி­லி­லி­ருந்து கீழே விழப்­போ­வதை உணர்ந்தேன். அவர் இறந்­து­விட்­ட­தா­கவே நினைத்து, கட்­டிலில் அவரைப் பாது­காப்­பாக  கிடத்­தி­விட்டு அய­ல­வர்­களை அழைப்­ப­தற்­காக அறை­யி­லி­ருந்து வெளி­யே­றினேன்.

அப்­போ­துதான், சமை­ய­லறை கதவின் ஒரு பாதி திறக்­கப்­பட்­டி­ருப்­பதைக் கண்டேன். வெளியே சென்று அய­ல­வர்­களை அழைத்த போது, வீட்டின் பின் பக்­க­மா­க­வி­ருந்து இருவர் ஓடு­வதை இரு­ளுக்குள் மத்­தியில் கண்டேன். இதனால் துப்­பாக்­கி­தா­ரி­கள்தான் வீட்­டுக்கு வந்­தி­ருப்­பதை உணர்ந்து கொண்டேன். பின்னர் கண­வரை வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் சென்றோம். இந்த சம்­ப­வத்தின் போது வீட்­டி­லி­ருந்த ஒன்­பது வய­தான எனது மகன் அதிர்ச்­சி­ய­டைந்து கடு­மை­யாக   பாதிக்­கப்­பட்டார். இன்று வரை அவர் அந்த அதிர்ச்­சி­யி­லி­ருந்து மீள­வில்லை.

மீண்டும் நாம் தஸ்­லீ­முடன் பேசினோம். அவர் மேலும் பல தக­வல்­களை பகிர்ந்து கொண்டார்.

Q உங்கள் மீது துப்­பாக்கிச் சூடு நடத்­தி­ய­வர்­களை எவ்­வாறு இனங்­காண முடிந்­தது?

கடந்த செப்­டம்பர் 12 ஆம் திகதி மான­வல்லை நீதி­மன்றில் இடம்­பெற்ற விசா­ர­ணை­களின் போது என்னைச் சுட்ட இரு­வரை அடை­யாளம் காட்­டினேன்.

அவர்கள் இரு­வரும் இந்த சம்­ப­வத்­திற்கு இரு வாரங்­க­ளுக்கு முன்னர் என்­னுடன் தொலை­பேசில் தொடர்­பு­கொண்டு என்னை நேரில் சந்­திக்க வேண்­டு­மெனக் கூறினர். அவர்­களின் கோரிக்­கைக்­கி­ணங்க மாவ­னெல்லை சம்பத் வங்­கிக்கு அருகில் நான் அவர்­களைச் சந்­தித்தேன்.

அதன்­போது, ஆடுகள் தொடர்­பிலும் என்­னு­டைய வீட்­டி­லுள்ள ஆட்டுத் தொழுவம் தொடர்­பிலும் கேள்வி எழுப்­பினர். இதனால் அவர்கள் எனது வீட்­டுக்கு முன்­கூட்­டியே வத்து சென்­றுள்­ளதை நான் அறிந்­து­கொண்டேன்.

எனினும் இவர்கள் என்னைக் கொல்­வ­தற்­கா­கவே சதி செய்­கின்­றனர் என்­பதை நான் உண­ர­வில்லை. குறித்த அந்த நபர்கள் இரு­வ­ரையும் அடை­யாள அணி­வ­குப்­பின்­போது நீதி­மன்ற வளா­கத்தில் கண்ட போதே, இவர்கள் என்னை கொல்­வ­தற்­கா­கவே தேடி வந்து சந்­தித்­தனர் என்­பதை முதன் முறை­யாக உணர்ந்தேன்.

Q உங்கள் மீது துப்­பாக்கி பிர­யோகம் மேற்­கொண்­ட­வர்கள் யார் என்று தெரி­யுமா?

குறித்த சம்­பவம் இடம்­பெற்ற போது இவர்கள் யார் என்று தெரி­யாது. எனினும் பயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவின் ஆயுதப் பிரிவு பிர­தா­னி­யாக கரு­தப்­படும் மொஹம்மட் மில்ஹான் மற்றும்  சஹ்­ரானின் சார­தி­யான கபூர் மாமா ஆகி­யோரை என்னைச் சூடுவதற்கு வந்­த­வர்கள் என்­பதை பின்னர் அறிந்­து­கொண்டேன்.

அது மாத்­தி­ர­மல்­லாமல் மட்­டக்­க­ளப்பு – வவு­ண­தீவு பகு­தியில் அமைக்­கப்­பட்­டி­ருந்த பொலிஸ் காவ­ல­ரணில் கட­மை­யாற்­றிய பொலிஸ் கான்ஸ்­ட­பிள்கள் இரு­வரை கொலை செய்­து­விட்டு அவர்­க­ளி­ட­மி­ருந்து அப­க­ரித்த ரிவோல்வர் ரக துப்­பாக்­கிகள் ஊடா­கவே என் மீது தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தையும் பின்னர் நான் அறிந்­து­கொண்டேன்.

Q தற்­போது உங்­களின் உடல் நிலை எவ்­வா­றுள்­ளது?

இறை­வனின் உத­வி­யி­னாலும் வைத்­தி­யர்­களின் தீவிர முயற்­சி­யி­னாலும் இன்று நான் உயிர் தப்­பி­யுள்ளேன். எனினும் என்னால் எழும்பி நடக்க முடி­யாமல் கட்­டிலில் இருந்­த­வாறே கடந்த 10 மாதங்­க­ளாக சிகிச்சை பெற்று வரு­கின்றேன்.

நாட்டில் அடிப்­ப­டை­வா­திகள் , தீவி­ர­வா­திகள் உரு­வாக இட­ம­ளிக்க கூடாது என்­ப­தற்­கா­கவே நான் எனது பாது­காப்­பையும் பொருட்­ப­டுத்­தாது வணாத்­த­வில்லு வரை சென்று சந்­தேக நபர்­களை தேட பொலி­சா­ருக்கு உத­வினேன். அன்று நான் என்­னையே அர்ப்­ப­ணித்­தது ஏப்ரல் 21 போன்­ற­தொரு அசம்­பா­விதம் நடந்­து­விடக் கூடாது என்ற நோக்­கத்­தி­லேயே ஆகும்.

இந்த உழைப்­பிற்­கான பரி­சா­கவே நான் சுடப்­பட்டேன்.  இதனால், மூன்று குழந்­தை­களைக் கொண்ட எனது குடும்பம் இன்று பாரிய பொரு­ளா­தார நெருக்­க­டியை எதிர்­நோக்­கி­யுள்­ளது.

முஸ்லிம் சமூ­கத்­திற்­கா­கவும் நாட்­டிற்­கா­கவும் நான் செய்த சேவைக்­காக யாசகம் கேட்கும் நிலைக்கு என்னை மாற்றி விட வேண்டாம். நான் எழுந்து நடப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காகவும்,  குடும்பத்தின் பொருளாதார கஷ்டத்திற்காகவும் முடியுமானவர்கள் உதவி செய்யுமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.-Vidivelli

  • நேர்கண்டவர் – றிப்தி அலி

Leave A Reply

Your email address will not be published.