4 மாதங்களில் 2.21 மில்லியன் உம்ரா வீசாக்கள்

0 626

உம்ரா பய­ணத்­துக்­காக கடந்த 4 மாத­கால எல்­லைக்குள் 2.21 மில்­லியன் உம்ரா வீசாக்கள் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக சவூதி அரே­பியா ஹஜ், உம்ரா அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இந்த வீசாக்­களில் உம்ரா மேற்­கொள்­வ­தற்­காக இது­வரை 1,782,554 பேர் சவூதி அரே­பி­யா­வுக்கு வருகை தந்­துள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளது. இவர்­களில் 1,373,963 பேர் தங்கள் உம்ரா யாத்­தி­ரையைப் பூர்த்தி செய்­ததன் பின்பு தங்­க­ளது சொந்த நாடு­க­ளுக்குத் திரும்­பி­யுள்­ள­தா­கவும் சவூதி அரே­பி­யாவின் ஹஜ், உம்ரா அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

பாகிஸ்­தா­னி­லி­ருந்து 450011 பேரும், இந்­தோ­னே­சி­யா­வி­லி­ருந்து 399103 பேரும், இந்­தி­யா­வி­லி­ருந்து 238981 பேரும், மலே­சி­யா­வி­லி­ருந்து 110739 பேரும் மற்றும் எகிப்­தி­லி­ருந்து 85808 பேரும் உம்ரா யாத்­தி­ரையை மேற்கொண்டு 4 மாத காலத்தினுள் சவூதி அரேபியாவுக்குப் பயணமாகி யுள்ளனர்.-Vidivelli]

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.