அடிப்படைவாதத்துக்கு யாரும் இடமளிக்காதீர்

உயிர்த்த ஞாயிறு போன்ற செயற்பாடுகளை நிறுத்தி விடுங்கள்: கிறிஸ்மஸ் ஆராதனையில் பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை

0 616

சக மனி­த­னுக்கு கவ­லையும் கஷ்­டத்­தையும் கொடுக்­கு­மாறு எந்­த­வொரு சமயத்­திலும் கூறப்­ப­ட­வில்லை. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­பு­லத்தில் உள்­ள­வர்­க­ளிடம் இவ்­வா­றான செயற்­பா­டு­களை நிறுத்­தி­வி­டு­மாறும் அடிப்­ப­டை­வா­தத்­துக்கு இனி வாழ்­நாளில் இடம்­கொ­டுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்­வ­தாக பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை தெரி­வித்தார்.

நீர்­கொ­ழும்பு – கட்­டு­வாப்­பிட்டி புனித செபஸ்­தியார் தேவா­ல­யத்தில் நேற்று நள்­ளி­ரவு பேராயர் தலை­மையில் இடம்­பெற்ற கிறிஸ்மஸ் விஷேட ஆரா­த­னை­களின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

மேலும் உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று தற்­கொலை குண்டு தாக்­கு­த­லுக்கு உள்­ளான கொழும்பு – கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் திருத்­தலம் மற்றும் மட்டக்களப்பு சியோன் தேவா­லயம் உள்­ளிட்ட நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள தேவா­ல­யங்­க­ளிலும் விஷேட ஆரா­த­னைகள் பாது­காப்­பு­க­ளுக்கு மத்­தியில் இடம்­பெற்­றன. ஆரா­த­னையின் போது தொடர்ந்தும் உரை­யாற்­றிய பேராயர் கூறி­ய­தா­வது, உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று மேற்­கொள்­ளப்­பட்ட குண்டு தாக்­கு­தல்­களைப் போன்ற சம்­ப­வங்கள் வாழ்க்­கையை புதி­தாக சிந்­திக்க வைத்­து­விட்­டது. எனினும் நாம் ஒரு­போதும் இவ்­வா­றான தாக்­கு­தலை ஏற்­ப­டுத்­தி­ய­வர்கள் மீது கோபம் கொள்­ள­வில்லை. இறை­வனை நேசிப்­ப­வர்­க­ளுக்கு மனி­தர்­களை கொல்ல முடி­யாது.

நான் உங்கள் அனை­வ­ரையும் நேசிக்­கின்றேன். நீங்கள் என்­னு­டைய பிள்­ளைகள். நான் எந்த சந்­தர்ப்­பத்­திலும் உங்­க­ளுடன் இருப்பேன். இன்­னொரு மனி­த­னுக்கு கவ­லை­யையும் கஷ்­டத்­தையும் கொடுக்­கு­மாறு எந்­த­வொரு கட­வுளும் கூற­வில்லை. எந்த சமயத்தில் அவ்­வாறு கூறப்­பட்­டி­ருக்­கி­றது? ஏதே­னு­மொன்றில் அவ்­வாறு கூறப்­பட்­டி­ருக்­கு­மாயின் அது சமயம் அல்ல. அர­சி­ய­லாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தில் உள்ளவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்திவிடுங்கள். அடிப்படை வாதத்துக்கு உங்கள் வாழ்நாளிலில் இடம் கொடுக்காதீர்கள் என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.