முஸ்லிம் கட்சிகளின் கூட்டிணைவு சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல்

0 711

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் கட்சிகளின் கூட்டிணைவு என்பது சமூகத்திற்கு மேலும் பாதிப்பையே ஏற்படுத்துமென்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.எதிர்­வரும் பொதுத் தேர்­தலை முன்­னிட்டு முஸ்லிம் கட்­சிகள் அனைத்தும் ஒன்­றி­ணைய வேண்­டு­மென்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் அவர் வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே இதனைக் குறிப்­பிட்­டுள்ளார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்;
“முஸ்லிம் கட்­சிகள் அனைத்தும் ஒன்­றி­ணைந்து முஸ்லிம் தேசியக் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற கோஷம் காலத்­திற்குக் காலம் முன்­வைக்­கப்­பட்டு வந்­துள்­ளது. அப்­போ­தெல்லாம் அக்­கோ­ரிக்கை நியா­ய­மான ஒன்­றா­கவே பார்க்­கப்­பட்­டது. இருந்­த­போ­திலும் அது சாத்­தி­யப்­ப­ட­வில்லை.

ஆனால் ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­த­லுக்குப் பின்­ன­ரான சூழ்­நி­லையும் அதனை மையப்­ப­டுத்­தி­ய­தாக ஏற்­பட்­டுள்ள ஆட்சி மாற்­றமும் இனத்­துவ அர­சி­யலை கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யுள்­ளது. இதனால் முஸ்லிம் கட்­சி­க­ளி­னதும் முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளி­னதும் செயற்­பா­டுகள் மாற்று சமூ­கத்­தி­னரால் சந்­தேகக் கண்­கொண்டு நோக்­கப்­ப­டு­கின்­றன.

இவ்­வா­றான சூழ்­நி­லையில் முஸ்லிம் கட்­சி­களின் ஒன்­றி­ணைவு என்­பது நாம் எதிர்­பார்க்­கின்ற இலக்­குக்கு மாற்­ற­மான பாதக விளை­வு­க­ளையே சமூ­கத்­திற்கு ஏற்­ப­டுத்தி விடலாம் என்­கிற அச்சம் புத்­தி­ஜீ­விகள் மட்­டத்தில் உரு­வா­கி­யி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இதனை நியா­ய­மா­னதோர் அச்­ச­மா­கவே அர­சியல் தலை­மைகள் நோக்க வேண்­டி­யுள்­ளது. இன்­றைய பேரி­ன­வாத அர­சியல் நடப்­பு­களை தெளி­வாகக் கண்­ட­றிந்து கொண்டும் யதார்த்­தத்­திற்கு மாறாக முஸ்லிம் கட்­சிகள் கூட்­டி­ணைவு பற்றி சிந்­திப்­பது முட்­டாள்­த­ன­மான செயற்­பா­டா­கவே அமையும் எனலாம்.

அதா­வது, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பேரி­ன­வாத வெறித்­தனம் மேலோங்­கி­யி­ருக்­கின்ற சூழ்­நி­லையில் முஸ்லிம் கட்­சி­களின் கூட்­டி­ணைவு என்­பது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்­று­வது போன்றே அமையும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

அது­மாத்­தி­ர­மன்றி தேர்­தலை முன்­னி­றுத்தி அமைக்­கப்­ப­டு­கின்ற கூட்­ட­ணி­யா­னது நிரந்­தர ஒற்­று­மைக்கும் சமூ­கத்தின் அபி­லா­ஷை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கு­மான ஓர் இயக்­க­மாக அமை­யப்­போ­வ­தில்லை. குறிப்­பாக தேர்­த­லின்­போது ஆசன ஒதுக்­கீடு, வாக்கு சேக­ரிப்பு, பத­வி­களை பகிர்ந்து கொள்­வது போன்ற கட்­டங்­களில் பிணக்­கு­க­ளுக்கு வழி­வ­குத்து, இருக்­கின்ற ஒற்­றுமை கூட சீர்­கு­லை­யு­மே­யொ­ழிய சமூகம் எதிர்­பார்க்­கின்ற இலக்கில் இக்­கூட்­டணி பய­ணிக்கும் என்று நம்ப முடி­யாது.

தமிழ் சமூ­கத்தின் நீண்­ட­கால உரிமைப் போராட்­டத்தை முன்­னி­றுத்தி பெரும் அர­சியல் சக்­தி­யாக உரு­வாக்­கப்­பட்ட தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் அர­சியல் சித்­தாந்­தமும் தற்­போது தோற்­றுப்­போன ஒன்­றாக மாறி­யி­ருப்­பது எமக்கு சிறந்த முன்­னு­தா­ர­ண­மாகும்.

சில முஸ்லிம் அமைச்­சர்­க­ளையும் ஆளு­நர்­க­ளையும் பதவி வில­கு­மாறு ரதன தேரர் தலை­மையில் அணி­தி­ரண்டு இன­வா­திகள் நெருக்­கு­வா­ரப்­ப­டுத்­திய போது சமூக நலன்­க­ருதி சம்­பந்­தப்­பட்­டோரை பாது­காப்­ப­தற்­காக எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­மையும் எம்.பி.க்களும் சேர்ந்து அமைச்சுப் பத­வி­களில் இருந்து இரா­ஜி­னாமா செய்து சமூக ஒற்­று­மையை பறை­சாற்­றி­ய­போ­திலும் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் அவர்கள், மு.கா. தலை­மைக்கு எதி­ரான நய­வஞ்­சக செயற்­பா­டு­களில் ஈடு­பட்டு வந்­ததை இத்­த­ரு­ணத்தில் சுட்­டிக்­காட்­டா­ம­லி­ருக்க முடி­யாது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஏனைய இனத்­த­வர்­க­ளினால் புரிந்­து­ணர்­வுடன் கூடிய இன­வா­த­மற்ற, மித­வாத முஸ்லிம் தலை­வ­ராக நோக்­கப்­ப­டு­கின்றார். இத்­த­கை­யதோர் தேசிய நல்­லி­ணக்க தலை­மைத்­து­வத்­தி­னா­லேயே பெருந்­த­லைவர் மர்ஹூம் அஷ்ரப் போன்று பிற சமூ­க­த்­த­வர்­களின் நட்­பையும் நம்­பிக்­கை­யையும் பேணிக்­கொண்டு முஸ்லிம் சமூக அர­சி­யலை முன்­னெ­டுக்க முடியும். இன­வாதம் மேலோங்­கி­யி­ருக்­கின்ற இன்­றைய சூழ்­நி­லையில் இத்­த­கைய அர­சியல் நகர்வே முஸ்­லிம்­களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உத்தரவாதப்படுத்தும் என்கிற யதார்த்தத்தை எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டும். அதேவேளை, இலங்கை வாழ் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசத்தினதும் அரபு நாடுகளினதும் கவனத்தை ஈர்த்து, அந்நாடுகளின் ஒத்துழைப்புக்களை பெறுவதற்கு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற தலைவரான ரவூப் ஹக்கீமினால் மாத்திரமே முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்” என்றும் ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.-Vidivelli

  • அஸ்லம் எஸ்.மௌலானா

Leave A Reply

Your email address will not be published.