22 ஆவது திருத்த பிரேரணை அரசாங்கத்தின் பிரேரணையல்ல

தேர்தல் வெட்டுப்புள்ளி குறித்த விஜயதசவின் கருத்து உண்மை இல்லை என்கிறார் டியூ குணசேகர

0 688

பன்­னி­ரெண்­ட­ரை­யாக இருந்த தேர்தல் வெட்­டுப்­புள்ளியை முஸ்லிம் காங்­கி­ரஸின் அன்­றைய தலை­வரின் அழுத்­தத்­தி­னாலே ஜனா­தி­பதி பிரே­ம­தாச 5வீத­மாக குறைத்­த­தாக விஜயதாச ராஜபக் ஷ தெரி­விக்கும் கருத்தில் எந்த உண்­மையும் இல்லை. அத்­துடன் விஜயதாச ராஜபக் ஷவின் 22ஆவது திருத்த பிரே­ரணை அர­சாங்­கத்தின் பிரே­ர­ணை­யல்ல.

தேர்­த­லுக்கு முன்னர் இது­தொ­டர்­பாகத் தீர்­மா­னங்­களை மேற்­கொண்டால் கட்­சி­க­ளுக்குள் பாரிய பிரச்­சினை ஏற்­படும் என்­பதை ஜனா­தி­பதி கருத்­திற்­கொள்ள வேண்­டு­மென இலங்கை கம்­யூனிஸ்ட் கட்­சியின் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான டியூ குண­சே­கர தெரி­வித்தார்.

சோச­லிஷ மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

கடந்த அர­சாங்கம் அர­சி­ய­ல­மைப்பில் திருத்தம் மேற்­கொள்­வ­தாகத் தெரி­வித்து 19ஆம் திருத்­தத்­துடன் 20ஆம் திருத்­தத்­தையும் கொண்­டு­வ­ரு­வ­தாக தெரி­வித்­தது. ஆனால் இறு­தியில் இரு­ப­தா­வது திருத்தம் கொண்­டு­வ­ர­வில்லை. அதனால் அரச தலை­வ­ருக்கும் அர­சாங்­கத்தின் தலை­வ­ருக்கும் முரண்­பா­டுகள் ஏற்­பட ஆரம்­பித்­தன. நல்­லாட்சி அர­சாங்­கத்தில் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கும் முரண்­பா­டுகள் ஏற்­படப் பிர­தான கார­ண­மாக இருந்­தது, நிறை­வேற்று அதி­காரத்தை முழு­மை­யாக இல்­லா­ம­லாக்கி பாரா­ளு­மன்­றத்­துக்கு கொண்­டு­வ­ரா­த­மை­யாகும். அதனால் 19ஆம் திருத்­தத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் என்­பதை நாங்கள் ஏற்­றுக்­கொள்­கின்றோம்.

ஆனால், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜயதாச ராஜபக் ஷ தனி­நபர் பிரே­ர­ணை­யாக கொண்­டு­வந்­தி­ருக்கும் 22 ஆவது திருத்­த­மா­னது தேர்தல் வெட்­டுப்­புள்­ளியை மாற்­று­வ­தாகும். அதா­வது தற்­போது அமுலில் இருக்கும் பன்­னி­ரெண்­டரை வீதம் என்ற வெட்­டுப்­புள்­ளி­யா­னது 1986–87 காலப்­ப­கு­தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் முன்னாள் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அன்­றைய ஜனா­தி­பதி பிரே­ம­தா­ச­வுக்கு கொடுத்­து­வந்த அழுத்தம் கார­ண­மாக வெட்­டுப்­புள்­ளியை 5வீதமாக் குறைத்தார். அதன் விளை­வா­கவே சிறு­பான்மை கட்­சி­களின் உத­வி­யுடன் அர­சாங்கம் அமைக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது என்றும் விஜயதாச ராஜபக் ஷ தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

விஜயதாச ராஜபக் ஷ தெரி­விக்கும் கூற்றில் எந்த உண்­மையும் இல்லை.

முஸ்லிம் காங்­கிரஸ் விடுத்த அழுத்­தத்­தினால் வெட்­டுப்­புள்ளி குறைக்­கப்­ப­ட­வில்லை. சிறு­பான்மை கட்சி உறுப்­பி­னர்­களும் பாரா­ளு­மன்­றத்­துக்குத் தெரி­வா­க­வேண்டும். அதன் மூலமே உறு­தி­யான ஜன­நா­ய­கத்தை ஏற்­ப­டுத்­த­லா­மெனத் தெரி­வித்தேன், சிங்­கள, தமிழ் முஸ்லிம் அனைத்து சிறிய கட்­சி­களும் இணைந்து அன்று அழுத்தம் கொடுத்­த­தாலே வெட்­டுப்­புள்­ளியில் மாற்றம் ஏற்­பட்­டது. அத்­துடன் நாட்டில் தற்­போ­துள்ள அர­சியல் நிலையில் எந்தக் கட்­சிக்கும் தனித்து ஆட்சி செய்ய முடி­யா­த­நி­லையே இருக்­கின்­றது. பல கட்­சிகள் இணைந்தே ஆட்சி செய்­ய­வேண்­டிய நிலை இருக்­கின்­றது. இவ்­வா­றுதான் உலகில் பெரும்­பான்­மை­யான நாடு­களில் இடம்­பெ­று­கின்­றன.

அத்­துடன் அடிப்­ப­டை­வாதப் பிரச்­சி­னைகள் தலை­தூக்­கு­வதை இல்­லா­ம­லாக்க அர­சி­ய­ல­மைபில் திருத்தம் மேற்­கொள்­ள­வேண்­டு­மென விஜயதாச ராஜபக் ஷ தெரி­வித்­தி­ருக்­கின்றார். அர­சி­ய­ல­மைப்பில் திருத்தம் மேற்­கொள்­வதன் மூலம் அடிப்படைவாதப் பிரச்சினைகளை கட்டுப்படுத்த முடியாது. சமூக மாற்றத்தின் மூலமே இதனை மேற்கொள்ள முடியும். அதனால் அவரது தனிநபர் பிரேரணை அரசாங்கத்தின் பிரேரணையாக முடியாது.

ஜனாதிபதியும் இதுதொடர்பாக கவனம் செலுத்தி, தேர்தலுக்கு முன்னர் இதனை கொண்டுவந்து கட்சிகளுக்குள் பிரச்சினையை ஏற்படுத்திவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றார்.-Vidivelli

  • எம்.ஆர்.எம்.வஸீம்

Leave A Reply

Your email address will not be published.