மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள்

0 745

புதிய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தலை­மை­யி­லான ஆட்­சியில் மக்­க­ளுக்குப் பிர­யோ­ச­ன­ம­ளிக்கும் பல்­வேறு திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற அதே­நேரம், இந்த அரா­சங்­கத்தின் மீதான நம்­பிக்­கையைக் கேள்­விக்­குட்­ப­டுத்­து­கின்ற நிகழ்­வு­களும் தொட­ராக இடம்­பெற்று வருதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

வரி­க­ளுக்கு விலை குறைத்­ததன் மூலம் அன்­றாட பாவனைப் பொருட்­களின் விலைகள் குறைக்­கப்­பட்­டுள்­ளமை வர­வேற்­புக்­கு­ரி­ய­தாகும். இருந்த போதிலும் இந்த விலை குறைப்பின் பலா­ப­லன்கள் இன்­னமும் மக்­களைச் சென்­ற­டை­ய­வில்லை என்ற குற்­றச்­சாட்­டையும் ஜனா­தி­பதி ஏற்றுக் கொண்­டுள்ளார். இதன் கார­ண­மா­கவே அவர் நேற்று முன்­தினம் நார­ஹேன்­பிட்ட பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்­திற்கு திடீர் விஜயம் மேற்­கொண்டு அரிசி விலைகள் குறித்து ஆராய்ந்­துள்ளார். அத்­துடன் நிர்­ண­யிக்­கப்­பட்ட விலை­யிலும் பார்க்க அதிக விலையில் அரிசி விற்­ப­னையில் ஈடு­படும் வர்த்­த­கர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் ஜனா­தி­பதி நேற்­றைய தினம் பணிப்­புரை விடுத்­துள்ளார். அர­சாங்க செல­வி­னங்­களைக் குறைக்கும் வகையில் அநா­வ­சிய செல­வு­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான அறி­வு­றுத்­தல்­க­ளையும் ஜனா­தி­பதி வழங்­கி­யுள்­ள­துடன் தனது செயற்­பா­டு­க­ளிலும் அவர் மிகுந்த எளி­மை­யையே கடைப்­பி­டித்தும் வரு­கிறார்.

இவ்­வா­றான நல்ல திட்­டங்கள் ஒரு­பு­ற­மி­ருக்க, சுவிட்­சர்­லாந்து தூத­ரக அதி­கா­ரியின் கடத்தல் விவ­காரம், குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உய­ர­தி­கா­ரி­களின் இட­மாற்­றங்கள், ஊட­கங்கள் மீதான சில நட­வ­டிக்­கைகள், டாக்டர் ஷாபியின் விவ­கா­ரத்தை மீளவும் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­து­கின்­றமை, முன்னாள் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­கவின் கைது போன்ற குறிப்­பி­டத்­தக்க சில செயற்­பா­டுகள் அர­சாங்­கத்தின் மீது அதி­ருப்­தியைத் தோற்­று­வித்­துள்­ளன.
டாக்டர் ஷாபி விவ­காரம் கடந்த அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்தில் முறை­யாக விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்டு அவர் நிர­ப­ராதி என நிரூ­பிக்­கப்­பட்ட விட­ய­மாகும். பொது ஜன பெர­முன சார்பு வைத்­தி­யர்­க­ளாலும் அர­சி­யல்­வா­தி­க­ளாலும் சில சிங்­கள ஊட­கங்­க­ளாலும் குறிப்­பாக அது­ர­லியே ரதன தேர­ரா­லுமே இந்த விவ­காரம் பூதா­க­ர­மாக்­கப்­பட்­டி­ருந்­தது. இருப்­பினும் சி.ஐ.டி.யினர் டாக்டர் ஷாபி­யுடன் பணி­பு­ரிந்த 69 தாதிகள், 26 வைத்­தி­யர்கள், 14 சிற்­றூ­ழி­யர்கள் ஆகி­யோ­ரி­டமும் நூற்றுக் கணக்­கான தாய்­மா­ரி­டமும் வாக்­கு­மூ­லங்­களைப் பதிவு செய்­தி­ருந்­தனர். அவற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டே குற்­றச்­சாட்­டுக்­களை நிரூ­பிக்க முடி­யாத நிலையில் அவர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்தார்.

டாக்டர் ஷாபி விவ­காரம் பொது ஜன பெர­மு­ன­வி­லுள்ள சில இன­வா­தி­களால் திட்­ட­மிட்டு புனை­யப்­பட்ட ஒன்று என்­பதை அக் கட்­சியின் முன்­னணி செயற்­பாட்­டா­ளரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான அலி சப்ரி, தேர்தல் காலத்தில் பகி­ரங்­க­மா­கவே ஒப்புக் கொண்­டி­ருந்தார். ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக புதிய அரா­சங்கம் ஆட்­சிக்கு வந்த பிற்­பாடு இந்த விவ­காரம் மீண்டும் பேசு­பொ­ரு­ளாக்­கப்­பட்டு புதி­தாக வாக்­கு­மூ­லங்­களைப் பெறவும் ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இதற்­க­மைய புதிய சி.ஐ.டி. குழு­வினர் கடந்த திங்­கட்­கி­ழமை குரு­நாகல் வைத்­தி­ய­சா­லைக்குச் சென்று விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

பொதுத் தேர்தல் அண்­மித்­துள்ள நிலையில் மீண்டும் முஸ்­லிம்­களை பயங்­க­ர­வா­தி­க­ளாக சித்­தி­ரித்து பெளத்த மக்­களின் வாக்­கு­களை சுவீ­க­ரிக்கும் திட்­டத்தை சில அர­சி­யல்­வா­திகள் வெளிப்­ப­டை­யா­கவே முன்­னெ­டுக்க ஆரம்­பித்­துள்­ளனர். பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ச கூட கடந்த வாரம் ‘நாட்டில் இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம் இருப்­ப­தாக‘ தெரி­வித்த கருத்தும் இத­ன­டிப்­ப­டை­யி­லேயே நோக்­கப்­பட வேண்­டி­ய­தாகும். அது­போன்றே ஹிஸ்­புல்­லாவின் பல்­க­லைக்­க­ழக விவ­கா­ரமும் ரதன தேரரால் தற்­போது கிள­றப்­பட்­டுள்­ளது. தேர்தல் நெருங்க நெருங்க மேலும் முஸ்­லிம்­களை எதி­ரி­க­ளாகச் சித்­தி­ரிக்­கின்ற போலிக் கதைகள் பரப்­பப்­படும் என்­பதில் எந்த சந்­தே­க­மு­மில்லை.

உண்­மையில் புதிய அர­சாங்கம் கடந்த தேர்­தலில் தம்மை எதிர்த்து வாக்களித்த பெரும்பான்மையான முஸ்லிம்களின் மனதை வெல்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமே தவிர மீண்டும் மீண்டும் இனவாதப் பூச்சாண்டி காட்டி முஸ்லிம்களை ஓரம்கட்ட முயலக் கூடாது. அது ஒருபோதும் ஐக்கியப்பட்ட இலங்கையைக் கட்டியெழுப்ப உதவாது. இது விடயத்தில் பொது ஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரமுகர்கள் தலையிட்டு முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.