மரண தண்டனை: யார் இந்த பர்வேஸ் முஷாரப்

0 554

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மற்றும் முன்னாள் இரா­ணுவத் தள­பதி ஜெனரல் பர்வேஸ் முஷா­ர­புக்கு ராஜ­து­ரோக வழக்கு ஒன்றில் மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது இஸ்­லா­மா­பாத்தில் உள்ள சிறப்பு நீதி­மன்றம்.

2001 –- 2008 கால­கட்­டத்தில் நாட்டின் அதி­ப­ராக இருந்த பர்வேஸ் முஷாரப், 2007 ஆம் ஆண்டு அவ­சர நிலையை பிர­க­ட­னப்­ப­டுத்தி அர­ச­மைப்பை மீறி ராஜ­து­ரோகம் செய்­த­தாகக் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

முன்னாள் இரா­ணுவ ஜெனரல் முஷாரப் 2016ஆம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வரு­கிறார். இந்த மாத தொடக்­கத்தில் மருத்­து­வ­ம­னையில் அவர் அனு­ம­திக்­கப்­பட்டார். கடந்த இரு தசாப்­தங்­க­ளாக முஷா­ரபின் வாழ்­வா­னது நிச்­ச­ய­மற்ற ஒன்­றாகவே இருக்­கி­றது.

1999 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்­பின்­மூலம் ஆட்­சியைப் பிடித்த முஷா­ரபை படு­கொலை செய்ய பல­முறை முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது. அவற்­றி­லி­ருந்து தப்பிப் பிழைத்­தவர் முஷாரப். ஆனால், கொலை முயற்­சி­களில் தப்­பிய இரா­ணுவ சர்­வா­தி­காரி முஷா­ர­புக்கு அர­சியல் களம் அவ்­வ­ளவு இல­கு­வா­ன­தாக இல்லை. 2008 ஆம் ஆண்டு நடந்த தேர்­தலில் அவர் தோற்றார்.

யார் இந்த பர்வேஸ் முஷாரப்?

]1943 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி டெல்­லியில் உள்ள உருது மொழி பேசும் தம்­ப­திக்கு மக­னாகப் பிறந்தார் பர்வேஸ் முஷாரப்.
1947ஆம் ஆண்டு இந்­தியா – பாகிஸ்தான் பிரி­வி­னை­யின்­போது பாகிஸ்­தா­னுக்கு குடி­பெ­யர்ந்­தது அவ­ரது குடும்பம்.

இரா­ணு­வத்தில் பல ஆண்­டுகள் பணி­யாற்­றிய அவர், 1998ஆம் ஆண்டு நவாஸ் ஷெரீஃப் ஆட்­சி­யின்­போது இரா­ணுவத் தள­ப­தி­யானார். பொறுப்­பேற்ற சிறிது காலத்­தி­லேயே நவாஸ் ஆட்­சியைக் கவிழ்த்து, நாட்டின் தலைமைப் பொறுப்பை கைப்­பற்­றினார். அந்த சம­யத்தில் நவாஸின் புகழ் சரிவின் விளிம்­பி­லி­ருந்­தது. பொரு­ளா­தார சரிவு, காஷ்மீர் குழப்பம் என பல்­வேறு தளங்­களில் நவாஸ் தோல்­வியைச் சந்­தித்­தி­ருந்தார். காஷ்மீர் பகு­தியில் ஊடு­ருவி அதனை தன­தாக்கிக் கொள்ள பாகிஸ்தான் எடுத்த முயற்­சியும் தோல்­வியைச் சந்­தித்­தி­ருந்­தது. இந்த தோல்­விக்குப் பொறுப்­பேற்­றுக்­கொள்ள இரா­ணுவம் விரும்­ப­வில்லை.

முஷா­ரபை இரா­ணுவத் தள­பதி பத­வி­யி­லி­ருந்து நீக்கி வேறொ­ரு­வரை நிய­மிக்க நவாஸ் காய்­களை நகர்த்­தினார், அதற்கு முன்பு இரா­ணு­வத்தின் ஆத­ர­வுடன் நவாஸ் ஆட்­சியைக் கவிழ்த்தார் முஷாரப்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷுடன்…

‘பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான போர்’

செப்­டம்பர் 11 இரட்டை கோபுர தாக்­கு­த­லுக்குப் பின் காட்­சிகள் மாற­தொ­டங்­கின. இரட்டை கோபுரத் தாக்­கு­த­லுக்­குப்பின் ஜோர்ஜ் புஷ், ‘பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான போர்’ ஒன்றை அறி­வித்தார். இதற்கு ஆத­ரவு தெரி­வித்தார் முஷாரப்.

பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான போர் என்று அறி­வித்­தது தலிபான் மற்றும் அல்–­கை­தா­வுக்கு எதி­ரான போரை. ஆனால், பாகிஸ்தான் இரா­ணு­வத்­திற்கும் இந்த அமைப்­பு­க­ளுக்கும் நெருங்­கிய தொடர்­பி­ருந்­த­தாக தொடர்ந்து குற்­றஞ்­சாட்­டப்­பட்டு வந்­தது.

தலிபான் மற்றும் அல்­கைதா ஆத­ர­வா­ளர்­களை முஷாரப் அரசு ஒடுக்கத் தவ­றி­விட்­ட­தாக நேட்டோ மற்றும் ஆப்கான் அரசு தொடர்ந்து குற்­றஞ்­சாட்­டி­யது.
2011 ஆம் ஆண்டு அல்­கைதா தலைவர் ஒசாமா பின் லேடன், மிலிட்­டரி அகா­டெமி அருகே சுட்டுக் கொல்­லப்­பட்­ட­போது, மீண்டும் முஷா­ரபை நோக்கி கேள்­விகள் எழுந்­தன. ஆனால், தீர்க்­க­மாக தன் மீதான குற்­றச்­சாட்­டு­களை மறுத்தார் அவர். பின் லேடன் இங்­கி­ருந்­தது தமக்குத் தெரி­யாது என்றார்.

இராணுவ தளபதியாக இருந்தபோது..

வீழ்ச்­சியின் தொடக்கம்

முஷாரப் அதி­கா­ரத்­தி­லி­ருந்­த­போது, நீதித்­து­றை­யுடன் பல்­வேறு முறை முரண்­பட்­டி­ருக்­கிறார். குறிப்­பாக, பாகிஸ்தான் தலை­வ­ராக இருந்­த­போது, இரா­ணு­வத்­துக்கும் தள­ப­தி­யாக இருக்க விரும்­பினார். அப்­போது நீதித்­துறை இவ­ருடன் முரண்­பட்­டது.

2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் தலைமை நீதி­பதி இப்­திகார் முகம்­மது செளத்­தி­ரியை பத­வி­யி­லி­ருந்து நீக்­கினார். இது நாடெங்கும் போராட்டம் வெடிக்கக் கார­ண­மாக அமைந்­தது.

இஸ்­லா­மாபாத் லால் மஸ்ஜித் மீது முஷாரப் தாக்­குதல் நடத்த உத்­த­ர­விட்­டதில் குறைந்­தது 100 பேர் பலி­யா­னார்கள். அந்த பள்­ளி­வா­சலின் மத­கு­ருக்கள் ஷரீஆ சட்­டத்தை பாகிஸ்தான் தலை­ந­கரில் அமுல் செய்ய முயன்­றனர் என்­ப­துதான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு.

இந்த தாக்­குதல் ‘பாகிஸ்தான் தலிபான்’ உரு­வாகக் கார­ண­மா­னது. இதன்­பின்பு ஏரா­ள­மான குண்­டு­வெ­டிப்பு தாக்­கு­தல்கள் பாகிஸ்­தானில் நடந்­தன. பாகிஸ்தான் வர­லாற்றில் இரத்தம் தோய்ந்த நாட்கள் அவை.

நாடு­க­டத்­தப்­பட்ட நவாஸ் 2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் திரும்­பினார், முஷா­ரபின் வீழ்ச்­சி­யா­னது இந்தப் புள்­ளி­யில்தான் தொடங்­கி­யது.

தனது பத­விக்­கா­லத்தை நீடித்­துக்­கொள்ள அவ­சர நிலையை பிர­க­ட­னப்­ப­டுத்த முஷாரப் முயற்­சித்தார். ஆனால், பெப்­ர­வரி 2008 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அவ­ரது கட்சி தோல்­வி­யுற்­றது. ஆறு மாதங்­க­ளுக்குப் பிறகு தனது பத­வியை இரா­ஜி­நாமா செய்­து­விட்டு நாட்­டை­விட்டு வெளி­யே­றினார்.

 

மீண்டும் பாகிஸ்தான்

லண்டன், துபாய் ஆகிய நாடு­களில் வசித்த அவர், 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் திரும்­பினார். ஆனால், அவ­மா­னங்­களைச் சந்­தித்தார். கைது செய்­யப்­பட்டார். அவர் தேர்­தலில் போட்­டி­யிடத் தடை விதிக்­கப்­பட்­டது. அவ­ரது கட்­சி­யான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கும் தேர்­தலில் மோச­மான தோல்­வி­யையே சந்­தித்­தது.

அதன்­பி­றகு நீதி­மன்­றத்தில் அவர் மீது அடுக்­க­டுக்­கான வழக்­குகள் வந்­தன. பெனாசிர் பூட்டோ 2007 ஆம் ஆண்டு பாகிஸ்­தானில் தலி­பான்­களால் படு­கொலை செய்­யப்­பட்டார். பெனா­சி­ருக்கு போது­மான பாது­காப்பு வழங்­க­வில்லை என்றும் முஷாரப் மீது வழக்குத் தொடுக்­கப்­பட்­டது. அவர் மீது ராஜ­து­ரோக வழக்கும் போடப்­பட்­டது.

மரண தண்­டனை

இந்­நி­லையில் இஸ்­லா­மா­பாத்­தி­லுள்ள சிறப்பு நீதி­மன்றம் ஒன்று, முஷா­ர­பிற்கு ராஜ­து­ரோக வழக்கில் மரண தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

முஷாரப் 2007ஆம் ஆண்டு அவ­சர நிலையை பிர­க­ட­னப்­ப­டுத்தி அர­ச­மைப்பை மீறி ராஜ­து­ரோகம் செய்­த­தாகக் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 2013ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்­த­போது முஷாரப் மீது இந்த வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை ஆறு வருட காலமாக நடைபெற்றது. அவர் பாகிஸ்தான் அரசியலமைப்பை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பாகிஸ்தான் வரலாற்றிலேயே அந்நாட்டின் அரசியலமைப்பை மீறி செயற்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபர் பர்வேஸ் முஷாரபாவார்.

நீதிபதி வாகர் சேத் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில் இரண்டு நீதிபதிகள் மரண தண்டனை வழங்க வேண்டுமென்று தீர்ப்பளித்தனர். ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.