கற்பாறையையும் கரைய வைத்த சோககீதம்

0 1,124

சோக­கீ­த­மா­னது எல்லோர் கண்­க­ளையும் குள­மாக்­கி­ய­வாறு மிஹிந்­தலை குன்றின் மீது பட்டு எதி­ரொ­லித்துக் கொண்­டி­ருந்­தது. அந்த இசைக்கு சிங்­களம், தமிழ், முஸ்லிம் என்ற வேறு­பா­டில்லை. அந்த சர்வ மொழிக்­குள்ளே வீற்­றி­ருப்­பதோ ஒரே சோக ராகம்தான். இற்­றைக்கு பத்­தாண்­டு­க­ளுக்கு முன் தம்மைப் பாது­காத்துக் கொள்­வ­தற்­காக தாய்­மார்கள் வருடா வருடம் அணி திரண்டு, தம் துன்ப துய­ரங்­களைப் பகிர்ந்து கொண்டு கண்ணீர் சிந்தும் சந்­தர்ப்பம் அது.

“எனது மகன் மறைந்த போது அவ­ருக்கு 22 வயது. 1999 ஆம் ஆண்டு மகன் ஊரைப் பாது­காப்­ப­தற்­காக பதுங்கு குழிக்­குள்ளே இருந்­த­போது புலிகள் சுற்றி வளைத்து தாக்­குதல் தொடுத்­தனர். சிங்­க­ள­வர்­க­ளுடன் முஸ்லிம் வாலி­பர்­களும் அதன்­போது கொல்­லப்­பட்­டனர். இவர்கள் அனை­வரும் அன்று கிரா­மங்­களைப் பாது­காப்­ப­தற்­காக ஊர் காவல் படையில் இணைந்­தி­ருந்­தனர்.

இவர்கள் ஆயுதம் ஏந்தி ஊரைப் பாது­காக்க முன்வந்­ததால் அன்று நாம் இரவில் நிம்­ம­தி­யாக உறங்­கினோம். இவர்­களை நினைவு கூரும் நிகழ்வில் கலந்து கொள்­வ­தற்­காக இம்­மு­றையும் எனக்கு அழைப்பு வந்­தது. இந்த இடத்தில் காணப்­படும் நல்­ல­பி­மானப் பண்­பு­களைக் காணும்போது ஒரு வகையில் எனக்குப் பெரு­மை­யா­க­வுள்­ளது. மகன் இப்­போது இல்­லா­விட்­டாலும் இப்­பிள்­ளைகள் செய்த தியா­கத்தால் நாட்டு மக்கள் இன்று மகிழ்ச்­சி­யுடன் இருப்­பதைப் பார்த்து நிம்­ம­தி­ய­டை­கிறேன். சிவில் பாது­காப்பு அணி மூலம் எமக்கு சமூ­கத்தில் ஏதோ­வொரு உரிமை கிடைத்­துள்ள உணர்­வொன்று ஏற்­ப­டு­கி­றது” என்று மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லுள்ள கல்­முனை, சவ­ளக்­கடை கிரா­மத்தைச் சேர்ந்த என்.எம்.கதீ­ஸா உம்மா கூறினார்.

இவ­ரது மகன் ஐ.எம்.ஹனீபா 1999 ஆம் ஆண்டு புலி­களின் தாக்­கு­தலில் பலி­யானார். அப்­போது அவர் சிவில் பாது­காப்பு அணியில் ஓர் உறுப்­பி­ன­ராக இருந்து பணி­பு­ரிந்­துள்ளார். இதனால் இவ­ரது தாய் கதீ­ஸா உம்மா மேற்­படி அணியின் உரி­மை­யா­ள­ரா­க­வுள்­ளமை குறித்து மகிழ்ச்­சி­ய­டை­கிறார்.

அதுபற்றி அவர் குறிப்­பி­டு­கையில், எனது மகன் ஹனீபா வாலிப வயதில் நாட்­டுக்­காக தனது உயிரைத் தியாகம் செய்­துள்ளார். அவ­ரது மகள் தற்­போது மண­மு­டித்து எம்மை விட்டும் தூர­மா­கி­யுள்ளார். அது கதீ­சம்­மா­வுக்கு மன­வே­த­னையைத் தரு­கின்ற போதிலும் சிவில் பாது­காப்பு அணியைச் சேர்ந்­த­வர்கள் காட்டும் உறவால் கவ­லைகள் பறந்­தோடி விடு­கின்­றன. இதே போன்றே மகன் மர­ணித்த போது சிங்­கள, தமிழ், முஸ்லிம் கிராம மக்­களும் பாது­காப்பு அணியின் உறுப்­பி­னர்­களும் வந்து இறுதிக் கிரி­யை­களில் ஈடு­பட்­டமை அப்­போது மன­துக்கு ஆறு­த­லாக இருந்­தது என்று கதீ­ஸா உம்மா கூறினார்.

இவரைப் போன்றே இதர முஸ்­லிம்கள் மற்றும் சிங்­கள, தமிழ் பெற்­றோர்கள், மனை­விமார் வரு­டந்­தோறும் மிஹிந்­த­லையில் ஒன்று கூடி மர­ணித்த தம் குடும்ப உற­வு­களை நினைவு கூரு­கின்­றனர். அனை­வரும் சுக, துக்­கங்­களைப் பகிர்ந்து கொள்­கின்­றனர். ஒன்­றாக உண்டு குடித்து கழிக்­கின்­றனர். சமய சடங்கு சம்­பி­ர­தா­யங்­க­ளிலும் ஈடு­ப­டு­கின்­றனர்.

சிவில் பாது­காப்பு அணியைச் சேர்ந்த 145 வீர, வீராங்­க­னைகள் பலி­யா­கி­யுள்­ளனர். இவர்­க­ளுக்­காக மிஹிந்­தலை நகரில் நினைவுத் தூபி­யொன்று நிறு­வப்­பட்­டுள்­ளது. குறித்த அணியைச் சேர்ந்த மர­ணித்த அனை­வ­ரது பெயர், ஊர், நிழற்­படம் உள்­ளிட்ட விப­ரங்கள் அதில் பதி­யப்­பட்­டுள்­ளன.

இவ்­வி­டத்தில் ஒன்று கூடு­வோ­ருக்கு யுத்­தமோ இன மோத­லொன்றோ தேவை­யில்லை. எல்லோர் உள்­ளங்­க­ளிலும் பச்­சா­தா­பமும் சோக­முமே குடி­கொண்­டி­ருக்கும். நாட்டில் வேறு எவரை விடவும் நாட்டில் சமா­தானம் நிலவ வேண்டும் என்ற வேண­வாவே இவர்­க­ளிடம் காணப்­ப­டு­கி­றது.

கல்­மு­னையில் வசித்து வரும் எஸ்.எல்.ரிஸ்­வானா என்ற மங்­கையும் இளம் வய­தி­லேயே தன் கண­வனை இழந்­துள்ளார். மர­ண­மான எஸ்.எம்.ஸாஹிர் முஹம்மத் என்­ப­வரே இவ­ரது கணவர். 2008 ஆம் ஆண்டு சிவில் பாது­காப்பு காவல் நிலை­யத்­திற்கு பயங்­க­ர­வா­தி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தலில் ஸாஹிர் முஹம்மத் கொல்­லப்­பட்டார். இவர் தற்­போது ஒரு மகன் மற்றும் ஒரு மக­ளுடன் தனது தாயாரின் அனு­ச­ர­ணை­யுடன் வாழ்ந்து வரு­கிறார்.

எஸ்.எல்.ரிஸ்­வானா தனது சோகக் கதையைத் தெரி­விக்­கையில், எனது கணவன் இல்­லாத நிலையில் நாம் இப்­போது எமது ஊரில் எத்­த­கைய பீதியும் இல்­லாமல் வசிக்­கிறோம். சாதா­ரண மக்­க­ளா­கிய நாம் எல்லா இன மக்­க­ளு­டனும் சமா­தா­னத்­துடன் வாழவே விரும்­பு­கிறோம். முன்பு கண்­டது போன்ற யுத்தம் ஒன்றைக் காண விரும்­பு­வ­தில்லை. யுத்தம் ஒன்று வந்தால் எனக்கு ஏற்­பட்­டது போன்று இதர தாய்­மார்­க­ளுக்கும் கணவர் இல்­லாது போகும். பிள்­ளைகள் இல்­லாது போகும். நாட்டில் சமா­தா­னத்தை நிலை நிறுத்­தப்­போ­ன­போதே நாம் கண­வனை இழந்தோம். அவர்கள் உயிரைப் பறி­கொ­டுத்து எம்மைத் தனி­மைப்­ப­டுத்தி கட்­டி­யெ­ழுப்­பிய சமா­தா­னத்தை சிதைத்து மீண்டும் எம்மைப் போன்­ற­வர்­களைத் தனி­மைப்­ப­டுத்த வேண்டாம் என்று நாட்டில் எல்­லோ­ரி­டமும் கேட்டுக் கொள்­கிறேன்” என்று அவர் கூறினார்.

பொலன்­ன­றுவை மாவட்­டத்தின் கிழக்கு எல்­லை­யி­லுள்ள சுங்­காவில் கிரா­மத்தில் வசித்து வரும் ஆர்.எம்.அபே­சிங்க என்­பவர் மூன்று ஆண் மக்­களின் தந்­தை­யாவார். இவர் 12 பேரன்­களைக் கொண்ட பாட்­ட­னா­ரு­மாவார். இவ­ரது இளைய மகன் டிக்­கிரி பண்­டார. இவர் 1997 ஆம் ஆண்டு 21 ஆவது வயதில் கொல்­லப்­பட்டார். அப்­போது அவர் ஊர் காவல்­படை வீர­ராக இருந்தார்.

“கிரா­மங்கள் மீது பயங்­க­ர­வா­திகள் தாக்­குதல் தொடுத்துக் கொண்­டி­ருந்த காலம் அது. அப்­போது பாட­சாலைக் கல்­வியை முடித்த கையோடு எனது மகன் ஊர் காவல் படையில் இணைந்தார். எங்­களைப் பாது­காப்­ப­தற்கே அவர் அவ்­வாறு இணைந்தார். அது 1997 ஆம் ஆண்டு ஒரு நாள், காலை வேளை சுங்­காவில் பாது­காப்பு அரண் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. அதில் எனது மகனும் பலி­யானார். எனது மகனின் இழப்பை எப்­ப­டியும் என்னால் தாங்கிக் கொள்ள இய­லாது. ஆனாலும் இப்­போது நாம் மூன்று இனத்­த­வர்­களும் எத்­த­கைய பேதங்­களும் பார்க்­காது ஒன்­றாக உள்ளோம்.

இத்­த­கை­ய­தொரு நாள் அன்று இருந்­தி­ருக்­கு­மானால் நாம் எமது பிள்­ளையை இழந்­தி­ருக்க மாட்டோம்” என்று அபே­சிங்க தெரி­வித்தார்.

பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களால் கொல்­லப்­பட்ட அனை­வ­ருக்­கா­கவும் இந்த ஒன்று கூட­லின்­போது மல­ரஞ்­சலி நிகழ்த்­தப்­ப­டு­கி­றது. இதற்­காக சிவில் பாது­காப்பு திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாயகம் முதல் அவ­ருக்கு கீழ் நிலை­யி­லுள்ள சகல உத்­தி­யோ­கத்­தர்கள், மர­ணித்­தோரின் உற­வி­னர்கள் அனை­வரும் கலந்து கொள்­கின்­றனர். இவர்­க­ளுடன் மத அனுஷ்­டா­னங்கள் நடத்­து­வ­தற்­காக சகல மதங்­க­ளையும் சார்ந்த மதத் தலை­வர்­களும் வருகை தரு­கின்­றனர்.
இந்­நாட்டில் சமா­தானம் சக வாழ்வைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக சிவில் பாது­காப்பு திணைக்­களம் முன்­மா­தி­ரி­யான வழி­காட்டல் ஒன்றை முன்­வைத்து வரு­கி­றது என்று மேற்­படி திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் நாயகம் சந்­ர­ரத்ன பல்­லே­கம குறிப்­பிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்,

எங்­க­ளது சகல மதங்­க­ளையும் சகல இனங்­க­ளையும் சேர்ந்­த­வர்கள் இங்­குள்­ளனர். இவர்கள் அனை­வரும் உள்­நாட்டின் விவ­சாயம், நாட்டு பிர­ஜை­க­ளது பாது­காப்பு, சுற்­றாடல் பாது­காப்பு உள்­ளிட்ட செயற்­பா­டு­க­ளுடன் பிணைக்­கப்­பட்­டுள்­ளனர்.

அநு­ரா­த­புரம் பிர­தே­சத்தின் பாது­காப்பில் சிங்­க­ள­வர்­களைப் போன்றே முஸ்லிம் வாலி­பர்­களும் சிவில் பாது­காப்பு அணி என்ற வகையில் இணைந்­துள்­ளனர். இவர்கள் அனை­வரும் மிகவும் ஆர்­வத்­துடன் விகா­ரைகள், பள்­ளிகள், கோவில்கள் போன்ற இடங்­களில் பாது­காப்பு பணி­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். பயிர்ச் செய்கை காணி­க­ளிலும் அவ்­வாறு கடமை புரி­கின்­றனர்.

வடக்கில் உள்ள எமது உறுப்­பி­னர்­களும் அம்­மா­கா­ணத்தில் பாரிய பங்­க­ளிப்புச் செய்­கின்­றனர். இவர்­களால் பயிர் வேளாண்­மையும் பண்­ணப்­பட்டு வரு­கின்­றன. சமூக நலன்­க­ளிலும் அர்ப்­ப­ணித்து வரு­கின்­றனர். பல்­வேறு உற்­பத்­தி­களும் இவர்­களால் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. எமது திணைக்­க­ளத்தின் கீழ் சிங்­கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனை­வரும் ஒரு­மு­கப்­பட்டு பாரிய உழைப்பில் ஈடு­ப­டு­கின்­றனர். நாட்­டுக்கு நல்­ல­தொரு முன்­மா­தி­ரியைக் காட்டி வரு­கின்­றனர். யுத்தம் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்த காலங்­களில் ஒன்­று­பட்டு கிரா­மங்கள், நில­பு­லன்­களைப் பாது­காத்து வந்­தனர். இன்றும் அவ்­வாறே தொடர்­கின்­றன” என்று அவர் கூறினார்.

ஆரம்ப காலத்­தி­லி­ருந்தே சிவில் பாது­காப்பு திணைக்­க­ளத்தில் சேர்த்துக் கொள்­ளப்­பட்ட வாலிபர், யுவ­திகள் பொது­மக்­க­ளது அன்­றாட வாழ்­வோடு இணைந்த பணி­களில் ஈடு­பட்டே வந்­துள்­ளனர். 1980 களி­லேயே இப்­பா­து­காப்புப் பிரிவு உரு­வாக்­கப்­பட்­டது. வட­மத்­திய, வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளி­லுள்ள கிரா­மங்கள் பயங்­க­ர­வா­தி­களால் தாக்கப்பட்டன. அதன்போது பாதுகாப்பு வழங்கும் தோரணையிலேயே இப்பிரிவு அமைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் தொண்டர் சேவை அடிப்படையிலேயே இதற்கு அங்கத்தவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். பின்னர் இவர்களுக்கு அன்றாடம் சிறு கொடுப்பனவொன்று வழங்கப்பட்டது. இச் சேவையின் முக்கியத்துவத்தை உணர்ந்த அரசு நாளடைவில் இதனை திணைக்களம் ஒன்றாக 2006.09.13 ஆம் திகதி நிறுவியது. அதனைத் தொடர்ந்து விரிவாக்கம் பெற்றது.

இம்முறை அநுராதபுரத்தையும் மிஹிந்தலையையும் இலக்காகக் கொண்டு நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றன. 2015.04.23 ஆம் திகதியாகும் போது சேவையை நிறைவு செய்த 265 உறுப்பினர்களுக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டன. மேற்படி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமான சந்ரரத்ன பல்லேகமவின் தலைமையில் மேந்படி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.-Vidvelli

  • நன்றி: ரெஸ
  • சிங்­க­ளத்தில்: சரத் மனுல விக்­ரம
    தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்

Leave A Reply

Your email address will not be published.