ஹஜ் ஏற்பாடுகளை வழமைபோல் தொடர்க

திணைக்களத்திற்கு பிரதமர் பணிப்பு

0 308

அடுத்த வருட ஹஜ் ஏற்­பா­டு­களை வழ­மைபோல் தொட­ரும்­படி பிர­த­மரும் கலா­சார அலு­வல்கள் அமைச்­ச­ரு­மான மஹிந்த ராஜபக் ஷ முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.மலிக்கை வேண்­டி­யுள்ளார்.பணிப்­பாளர் மலிக் பிர­த­மரும், கலா­சார அமைச்­ச­ரு­மான மஹிந்த ராஜபக் ஷவைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய போதே அவர் இந்த வேண்­டு­கோளை விடுத்­துள்ளார். கலந்­து­ரை­யா­டலின் போது பிர­தமர் தற்­போது அமுல்­ப­டுத்­தப்­பட்டு வரும் ஹஜ் ஏற்­பா­டுகள் குறித்­தான விப­ரங்­களை பணிப்­பாளர் மலிக்­கிடம் கேட்டு அறிந்து கொண்டார்.

இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் எம்.ஆர்.எம்.மலிக் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில், முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பான அமைச்­ச­ரா­கவும் பிர­தமர் செயற்­ப­டு­வதால் எதிர்­கால ஹஜ் ஏற்­பா­டுகள் அவ­ரது ஆலோ­ச­னையின் கீழேயே முன்­னெ­டுக்­கப்­படும். அமைச்­சரால் இது­வரை ஹஜ் குழு­வொன்று புதி­தாக நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. நிய­மிக்­கப்­ப­டு­மென்று எதிர்­பார்க்­கிறேன்.

அத்­தோடு சவூதி ஹஜ் அமைச்சு ஹஜ் உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­தி­டு­வ­தற்­காக இலங்­கையின் தூதுக் குழு­வுக்கு அழைப்பு விடுத்­துள்­ளது. எதிர்­வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி சவூதி அரே­பி­யாவில் குறித்த ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளது.

தூதுக்குழுவில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர், ஹஜ் முகவர் ஒருவர் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சி­லி­ருந்து அதி­கா­ரி­யொ­ருவர் இடம்­பெ­ற­வுள்­ளனர். தூதுக்­குழு இலங்­கை­யி­லி­ருந்து எதிர்­வரும் 18 ஆம் திகதி சவூதி அரே­பி­யா­வுக்குப் பய­ணிக்­க­வுள்­ளது.

சவூதி ஹஜ் அமைச்சின் அதி­கா­ரி­க­ளுடன் இடம்­பெ­ற­வுள்ள இக்­க­லந்­து­ரை­யா­டலில் 2020 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் கோட்டா விவகாரமும் கலந்துரையாடப்படும். 2020 ஆம் ஆண்டுக்கென 2019 ஆம் ஆண்டினை விடவும் மேலதிகமான கோட்டாக்களை பெற்றுக் கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.