மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதிக்கு சிறை

0 1,135

முன்னாள் மாலை­தீவு ஜனா­தி­பதி அப்துல் கையூம் யாமீ­னுக்கு 5 வருட சிறைத் தண்­டனை விதித்து அந்­நாட்டு நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.நிதி­மோ­சடி குற்­றச்­சாட்டில் குற்­ற­வா­ளி­யாக இனங்­கா­ணப்­பட்­ட­தை­ய­டுத்தே ஐந்து நீதி­ப­தி­களைக் கொண்ட குற்­ற­வியல் நீதி­மன்றம் இத் தண்­ட­னையை விதித்து நேற்று தீர்ப்­ப­ளித்­தது.

சிறைத் தண்­ட­னைக்கு மேல­தி­க­மாக 5 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை அப­ரா­த­மாகச் செலுத்­து­மாறும் அப்துல் கையூம் யாமீ­னுக்கு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

தனது தனிப்­பட்ட நோக்­கங்­க­ளுக்­காக 1 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் அரச நிதியை மோசடி செய்­த­தாக அவர் மீது குற்­றம்­சாட்­டப்­பட்­டி­ருந்­தது.

யாமீன் 2013 முதல் 2018 வரை மாலை­தீவின் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்தார். அவ­ரது ஆட்சிக் காலத்தில் ஊழல், ஊடக அடக்­கு­முறை மற்றும் அர­சியல் எதி­ரி­களை தண்­ட­னைக்­குட்­ப­டுத்­துதல் போன்ற குற்­றச்­சாட்­டுக்­களை அவர் எதிர்­கொண்­டி­ருந்தார்.

கடந்த வரும் இடம்­பெற்ற தேர்தலில் அவர் தற்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் முஹம்மத் சாலிஹிடம் தோல்வியுற்றமை குறிப்பிடத்தக்கது.-vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.