ஊடக சுதந்திரத்தை பாதிக்கும் நகர்வுகள்

0 997

புதிய அர­சாங்­கத்தின் அமைச்­சர்­களும் இரா­ஜாங்க அமைச்­சர்­களும் பிரதி அமைச்­சர்­களும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். இந் நிலையில் புதிய அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டங்­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக வற் வரி உள்­ளிட்ட பல்­வேறு வரி­களைக் குறைப்­ப­தாக புதிய அர­சாங்­கத்தின் முத­லா­வது அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளமை மகிழ்ச்­சி­க­ர­மான செய்­தி­யாகும். இவ்­வா­றான மக்கள் நலன்­சார்ந்த திட்­டங்கள் தொடர்ந்தும் நடை­மு­றைக்­குட்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

நேற்று இடம்­பெற்ற இரா­ஜாங்க, பிரதி அமைச்­சர்­களின் பதவியேற்பு நிகழ்­வின்­போது ” இந்த அமைச்சுப் பத­விகள் சலு­கைகள் அல்ல. மாறாக உங்கள் மீது சும­தப்­படும் பெரும் பொறுப்­பாகும். அந்தப் பொறுப்பை உணர்ந்து சரி­வர நிறை­வேற்ற வேண்டும். மக்­களின் தேவை­களை இதன் மூலம் பூர்த்தி செய்ய வேண்டும். அரச நிறு­வ­னங்­களின் செயற்­தி­றனை மேம்­ப­டுத்த வேண்டும்” என ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ அறி­வுரை வழங்­கி­யி­ருந்­தமை இங்கு கவ­னிக்­கத்­தக்­க­தாகும். அந்த வகையில் அமைச்­சர்கள் அனை­வரும் மக்­களின் நலன்­களை முன்­னி­றுத்திச் செயற்­பட வேண்டும் என வலி­யு­றுத்த விரும்­பு­கிறோம்.

இதற்­கி­டையில் கடந்த சில நாட்­க­ளாக இடம்­பெற்ற சில சம்­ப­வங்கள் புதிய அர­சாங்­கத்தில் கருத்துச் சுதந்­திர உரிமை மறுக்­கப்­ப­டுமா என்ற சந்­தே­கத்தைத் தோற்­று­வித்­துள்­ளது. நேற்று முன்­தினம் நுகே­கொ­டையில் அமைந்­துள்ள மும்­மொழி செய்தி இணை­யத்­த­ளம் ஒன்றின் அலு­வ­ல­கத்தில் பொலிஸார் விஷேட தேடு­தல்­களை நடாத்­தி­யுள்­ளனர். மிரி­ஹான பொலிஸார் என தம்மை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொண்ட சுமார் 10 பேர் கொன்ட குழு­வி­னரே இந்த சோத­னை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். மேலும் மாற்று யூ ரியூப் தொலைக்­காட்சி அலை­வ­ரிசை ஒன்றின் செய்தி வாசிப்­பா­ள­ரான சட்­டத்­த­ரணி தனுஷ்க சஞ்­சய சி.ஐ.டி.யினரால் 8 மணி நேரத்­துக்கும் அதி­க­மாக விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். மேலும் மற்­று­மொரு யூ ரியூப் அலை­வ­ரி­சையின் தொகுப்­பா­ள­ரான பெண் ஒரு­வ­ரையும் சி.ஐ.டி. விசா­ர­ணைக்கு அழைத்­துள்­ள­தாக செய்­திகள் வெளியா­கி­யுள்­ளன. குறித்த பெண் கடந்த அர­சாங்­கத்தின் நிதி அமைச்சின் கீழ் செயற்­ப­டுத்­தப்­பட்ட ‘என்­டர்­பி­ரைஸஸ் ஸ்ரீ லங்கா’, ‘ கம்­பெ­ர­லிய ‘ ஆகிய திட்­டங்­களின் பிர­சார பொறுப்­பா­ள­ராக செயற்­பட்­டவர் என அறிய முடி­கின்­றது.

மறு­புறம் பல வரு­டங்­க­ளாக ஊட­கங்­க­ளுக்கு தக­வல்­களை வழங்கி வந்த பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­ல­கத்தின் அனைத்து நட­வ­டிக்­கை­களும் நேற்று முதல் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. பொலிஸ் பேச்­சாளர் மற்றும் அவ­ரது அலு­வ­லகம் முன்­னெ­டுத்த ஊட­கங்­க­ளுக்கு தகவல் வழங்கும் பணி­களை பாது­காப்பு ஊடக மத்­திய நிலை­யத்தின் ஊடாக முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய அர­சாங்­கத்தின் வரு­கைக்குப் பின்னர் பல ஊட­கங்கள் சுய தணிக்­கை­களை கடைப்­பி­டிக்க ஆரம்­பித்­துள்­ள­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது. குறிப்­பாக அர­சாங்க உயர்­மட்­டத்­தி­னரை விமர்­சிக்கும் வகை­யி­லான செய்­திகள், ஆக்­கங்­களைப் பிர­சு­ரிப்­பதை பல ஊட­கங்கள் தவிர்த்து வரு­கின்­றன. ஆங்­கில வார இத­ழொன்றில் கடந்த 4 வரு­டங்­க­ளுக்கு மேலாக வாராந்தம் எழுதி வந்த ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ­ரது ஆக்­கங்­களை பிர­சு­ரிக்க குறித்த பத்­தி­ரிகை கடந்த வாரம் முதல் மறுப்புத் தெரி­வித்­துள்­ளது. டுவிட்­டரில் தினமும் முக்­கிய தக­வல்­களை வெளியிட்டு வந்த சிலர் தாமா­கவே தமது கணக்­கு­களை நிறுத்துவதாக அறி­வித்­துள்­ளனர்.

இவ்­வாறு கருத்துச் சுதந்­தி­ரத்தைக் கேள்­விக்­குள்­ளாக்கும் சில நிகழ்­வுகள் நடக்க ஆரம்­பித்­துள்­ளமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும். இந்தப் போக்கு புதிய அர­சாங்­கத்தின் ஸ்திரத்­தன்­மைக்கு ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. மேற்­படி விவ­கா­ரங்கள் குறித்து சர்­வ­தேச ஊட­கங்­களும் மனித உரிமை அமைப்­புக்­களும் பேச ஆரம்­பித்­துள்­ளன. தற்­போது நாட்டில் கட­மையில் ஈடு­பட்­டுள்ள ஐரோப்­பிய ஒன்­றிய தேர்தல் கண்­கா­ணிப்­பா­ளர்­களும் ஊடக சுதந்­தி­ரத்தின் போக்கு குறித்து கவனம் செலுத்­தி­யுள்­ளனர்.

என­வேதான் ஊடக சுதந்­தி­ரத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான நடவடிக்கைகளை புதிய ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன முன்னெடுக்க வேண்டும். பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்வதையும் அச்சங்களைத் தோற்றுவிப்பதையும் தவிர்க்க விசேட வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். இன்றேல் புதிய ஆட்சியாளர்கள் மீது கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஆட்சிக்கு வந்த உடனேயே நிரூபிப்பதாக அமைந்து விடும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.