சர்ச்சைக்கும் சந்தேகங்களுக்கும் வித்திட்டுள்ள இடமாற்றம்

0 966

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாது­காத்து அனைத்து மக்­களும் இன, மத, பேத­மற்று வாழக்­கூ­டிய சூழலை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக முப்­ப­டை­யி­னரை கட­மை­களில் ஈடு­ப­டுத்­து­வ­தற்­கான விசேட வர்த்­த­மானி அறி­வித்­தலை கடந்­த­வாரம் வெளி­யிட்டார். இந்த வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­வந்­ததும் பல்­வேறு தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்து விமர்­ச­னங்கள் வெளி­யி­டப்­பட்­டன.

இந்­நி­லையில் நாட்டில் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் இரா­ணுவ ஆட்சி ஏற்­ப­டுத்­தப்­பட்டு ஜன­நா­யகம் கேள்­விக்­குட்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டாது என பாது­காப்புச் செய­லாளர் கமல் குண­ரத்ன உறு­தி­ய­ளித்­துள்ளார். இது தொடர்பில் மக்கள் பீதி­ய­டையத் தேவை­யில்லை எனவும் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை, ஜனா­தி­ப­தியின் மற்­று­மொரு அதி­ரடி நட­வ­டிக்கை, மக்கள் மத்­தியில் பல்­வேறு சந்­தே­கங்­களை உரு­வாக்­கி­யுள்­ளது. ஜனா­தி­பதி பொலிஸ் கட்­ட­மைப்பில் மேற்­கொண்ட இட­மாற்­றங்கள் சர்ச்­சையைக் கிளப்­பி­யுள்­ளன.

குற்றப் புல­னாவுப் பிரிவு பணிப்­பா­ள­ராகக் கட­மை­யாற்­றிய ஷானி அபே­சே­கர கடந்த வாரம் அப்­ப­த­வி­யி­லி­ருந்தும் நீக்­கப்­பட்டு தெற்குப் பிராந்­திய பிரதி பொலிஸ் மா அதி­பரின் தனிப்­பட்ட உத­வி­யா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இவ்­வாறு அவர் இடம் மாற்­றப்­பட்­ட­மைக்­காக கார­ணத்தை ஜனா­தி­பதி நாட்டு மக்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்த வேண்­டு­மென ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அஜித் பி பெரேரா வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

‘மனித உரிமை மீறல்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட பல்­வேறு முன்­னணிக் குற்­றங்கள் தொடர்­பான விசா­ர­ணை­க­ளுக்குத் தலைமை தாங்­கிய சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­க­ரவின் இட­மாற்­றத்தின் பின்­னணி அர­சி­யலே’ என்று தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளுன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் கருத்து வெளி­யிட்­டுள்ளார்.

‘சுய­ாதீன பொலிஸ் ஆணைக்­கு­ழு­வுக்கு என்ன நேர்ந்­தது-? பொலிஸ் மா அதிபர் எதற்­காக இத்­த­கைய அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்­கிறார்?’ என அவர் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

நீண்­ட­கா­ல­மாக குற்றப் புல­னாய்­வா­ள­ராகக் கட­மை­யாற்­றிய ஷானி அபே­சே­கர பல்­வேறு பத­வி­யு­யர்­வு­களைப் பெற்று 2017 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் அப்­பி­ரிவின் பணிப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார். நாட்டை உலுக்­கிய பல்­வேறு படு­கொ­லைகள் மற்றும் காணா­ம­லாக்­கப்­பட்­டவர் தொடர்­பான சம்­ப­வங்­களின் குற்ற விசா­ர­ணை­களை வழி நடத்­தி­யவர் இவர். ஆட்சி மாற்­றத்­துடன் இவர் ஏன் இட­மாற்றம் செய்­யப்­ப­ட­வேண்டும்? அவர் தலைமை தாங்­கிய விசா­ர­ணை­க­ளுக்கு என்ன நடக்கப் போகி­றது? என்­பதே இப்போதும் கேள்வியாகும்.
சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­கர ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படு­கொலை, ஊட­க­வி­ய­லாளர் லசந்த விக்­ர­ம­துங்க படு­கொலை, வெள்ளை வேனில் 5 மாண­வர்கள் உட்­பட 11 பேர் கடத்திக் காணா­ம­லாக்­கப்­பட்­டமை, ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­ன­லி­கொட காணா­ம­லாக்­கப்­பட்­டமை, ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளான உபாலி தென்­னகோன், கீத் நொயார், நாமல் பெரேரா என்போர் மீதான தாக்­கு­தல்கள், மத்­திய வங்கி பிணை­முறி மோசடி, 4/21 தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்கள், டாக்டர் ஷாபி மீதான குற்­றச்­சாட்­டுக்கள், ஜனா­தி­பதி கோத்­தா­ப­யவின் குடி­யு­ரிமை விவ­காரம் உள்­ளிட்ட பல்­வேறு சம்­ப­வங்­களின் விசா­ர­ணை­களை இவரே தலைமை தாங்கி வழி­ந­டத்­தினார்.

இந்த விசா­ர­ணை­க­ளுக்கு இனிமேல் என்ன நடக்­கப்­போ­கி­றது?

‘ஷானி அபே­சே­கர நாட்டின் மிகச் சிறந்த அனு­ப­வ­முள்ள குற்றப் புல­னாய்வு அதி­கா­ரி­யாவார். ஆட்­சி­ய­தி­காரம் யாரு­டைய கையில் இருந்­தாலும் அவர் எப்­போதும் சுயா­தீ­ன­மா­கவே பணி­யாற்­றி­யி­ருக்­கின்றார். நாட்டின் மேல்­மட்ட அர­சி­யல்­வா­திகள் குறித்தும் அவர் நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கிறார் என அஜித் பி பெரேரா தெரி­வித்­தி­ருக்­கின்­றமை அவரின் சுயா­தீனத் தன்­மையை வலி­யு­றுத்­து­கி­றது.

இதே­வேளை, ஷானி அபே­சே­க­ரவைக் கைது­செய்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த வேண்­டு­மெ­னவும் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. தாய் நாட்­டுக்­கான தேசிய வீரர்கள் அமைப்பின் ஒருங்­கி­ணைப்­பாளர் சட்­டத்­த­ரணி மேஜர் அஜித் பிர­சன்ன இந்தக் கோரிக்­கையை விடுத்­துள்ளார்.

மாவ­னெல்லை புத்தர் சிலை உடைப்­புடன் ஆரம்­ப­மான இஸ்­லா­மிய தீவி­ர­வாத செயற்­பா­டுகள் தொடர்ந்தும் முன்­னெ­டுத்­துச்­செல்ல இட­ம­ளிக்­கப்­பட்­டன. உரிய வகையில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இத­னா­லேயே 4 /21 தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன. விசா­ர­ணை­களை ஒழுங்­காக மேற்­கொள்­ளாத குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பா­ள­ராக இருந்த ஷானி அபே­சே­க­ரவே இதற்குப் பொறுப்­புக்­கூற வேண்­டு­மென அவர் தெரி­வித்­துள்ளார்.
லசந்த, எக்னெலிகொட கொலை வழக்கு, கீத் நொயார் தாக்கப்பட்டமை, உபாலி தென்னகோன் தாக்கப்பட்டமை மற்றும் கடற்படையுடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகள் அனைத்திலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவை குற்றவாளியாக சித்திரிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எது எவ்வாறாக இருந்தாலும் பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டு நீதிக்காக பல வருடங்கள் ஏங்கி நிற்கும் மக்களுக்கு ஜனாதிபதி விரைவில் நீதிபெற்றுக்கொடுக்க வேண்டும். அவரது விரைவான நடவடிக்கைகளே அவர் மீதான நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.