அனைவரும் இலங்கையர்.

0 1,546

அழ­கான இலங்கை தேசத்­துக்குள் வாழும் அனை­வரும் இலங்­கையர் என்ற மகு­டத்­திற்கு முன்­னு­ரிமை வழங்க வேண்­டு­மென்­பதை நடந்து முடிந்த 8ஆவது ஜனா­தி­பதித் தேர்தல் பெறு­பே­றுகள் உணர்த்தி நிற்­கி­றது. 

ஏறக்­கு­றைய 2 கோடி 30 இலட்சம் மக்கள் வாழும் இந்­நாட்டில் சிங்­க­ளவர், தமிழர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர், மலாயர் என இனத்­துவ அடை­யா­ளத்­தோடு வாழ்ந்­தாலும் பிற­நா­டு­களில் இலங்­கையில் வாழும் அனைத்து இனத்­தி­னரும் ‘ஸ்ரீலங்கன்’ என்றே அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர் அல்­லது அழைக்­கப்­ப­டு­கின்­றனர்.

அப்­ப­டி­யானால், இலங்­கைக்குள் இலங்­கையர் என்று அழைக்­கப்­ப­டாமல் ஏன் சிங்­க­ளவர் என்றும், இலங்கைத் தமிழர் என்றும், இந்­திய வம்­சா­வ­ளிகள் என்றும் இலங்கை சோனகர் அல்­லது முஸ்­லிம்கள் என்றும் இனப்­பா­கு­பாட்­டுடன் அடை­யா­ளப்­ப­டுத்த வேண்டும் என்ற கேள்­விக்கு விடை­காண வேண்­டிய தருணம் இப்­போது உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

நடந்து முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­க­ளிக்கத் தகைமை பெற்ற 15,992,96 வாக்­கா­ளர்­களில் 13,387,951 வாக்­கா­ளர்கள் தங்­க­ளது ஜன­நா­யக உரி­மையைப் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள். இவர்­களில் 6,924,255 வாக்­கா­ளர்கள் தங்­க­ளது வாக்­கு­களை பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் புதிய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு அளித்து இந்­நாட்டின் 7ஆவது நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள ஜனா­தி­ப­தி­யாக அவரை வெற்றி பெறச் செய்­தி­ருக்­கி­றார்கள்.

1982ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தல்­களில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்ற அனைத்து ஜனா­தி­ப­தி­களின் வெற்­றி­யிலும் இந்­நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் வாக்­கா­ளர்­களின் வாக்­குகள் அதி­க­ளவில் செல்­வாக்கு செலுத்­தி­யி­ருந்­த­போ­திலும் நடந்­து­மு­டிந்த இத்­தேர்­தலில்

தமிழ், முஸ்லிம் வாக்­கா­ளர்­களின் வாக்­குகள் ஜனா­தி­பதி கோத்­தா­ப­யவின் வெற்­றியில் செல்­வாக்கு செலுத்­த­வில்லை அல்­லது மிகக்­கு­றைந்­த­ளவு செல்­வாக்கே செலுத்­தி­யி­ருக்­கி­றது. நாடு­பூ­ரா­க­வு­மி­ருந்து நான்கு, ஐந்து இலட்­சத்­துக்­குட்­பட்ட வாக்­கு­களே தமிழ், முஸ்லிம் வாக்­கா­ளர்­களின் பக்­க­மி­ருந்து அளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஆதலால், இந்­நாட்டில் 70 வீதத்­திற்கு மேற்­பட்டு வாழும் பௌத்த சிங்­கள மக்­களே ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெற்­றியின் சொந்­தக்­கா­ரர்கள். அத­னால்தான் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ சிங்­கள மக்­களின் வாக்­கு­களே என்னை ஜனா­தி­ப­தி­யாக்­கி­யது எனக் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

இருப்­பினும், இந்­நாட்டில் ஏறக்­கு­றைய 30 வீத­மாக வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் தொகையின் வாக்­கா­ளர்கள் தரப்­பி­லி­ருந்து ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிட்ட ஹிஸ்­புல்­லா­வுக்கு 38,214 வாக்­கு­களும், சிவா­ஜி­லிங்­கத்­துக்கு 12,256 வாக்­கு­களும் அளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. ஏனைய வாக்­கா­ளர்­களின் வாக்­கு­களில் பெரும்­பான்­மை­யிரின் வாக்­குகள் ஜனா­தி­பதி கோத்­தா­ப­ய­விலும் பார்க்க புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பா­ள­ருக்கு அளிக்­கப்­பட்­டுள்­ளன. இந்த வாக்­க­ளிப்பு வீத­மா­னது இலங்கை மக்­களை இரு துரு­வ­மாகப் புடம்­போட்டுக் காட்­டி­யி­ருக்­கி­றது.

இந்­நி­லையில், இந்­நாட்டில் வாழும் 9.7 சத­வீத முஸ்­லிம்­களின் சனத்­தொ­கையில் மூன்றில் ஒரு வீதத்­தி­னரே வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் உள்­ளனர். ஏனைய இரண்டு வீதத்­தி­னரும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியே வாழ்­கின்­றனர். வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் வாழும் முஸ்­லிம்கள் அப்­பி­ர­தே­சங்­களில் வாழ்­கின்ற ஏனைய சமு­தா­யங்­க­ளுடன் எவ்­வாறு இன ஒற்­று­மை­யோடு வாழ­வேண்­டு­மென சிந்­திக்­கி­றார்­களோ அவ்­வாறே வடக்கு, கிழக்­குக்கு வெளியே வாழ்­கின்ற முஸ்­லிம்கள் அப்­பி­ர­தே­சங்­களில் வாழ்­கின்ற பிற சமூ­கங்­க­ளுடன் சமூகப் பிணைப்­போடு வாழ­வேண்­டு­மென எண்­ணு­கின்­றனர்.

வடக்கு, கிழக்­கிற்­குள்­ளேயும் வெளி­யேயும் வாழும் இம்­மக்­களின் சமூக ஒற்­று­மையை பல்­வேறு கார­ணிகள் பிரி­கோ­டு­க­ளாக இருந்து பிரித்­தா­ளு­கின்­றன. இந்த இனப்­பா­கு­பாட்டை நடந்து முடிந்த ஜனா­தி­பதித் தேர்தல் பெறு­பேறு புடம்­போட்­டி­ருக்­கி­றது. இந்­நி­லை­யில்தான், அனை­வரும் இலங்­கையர் என்ற அடிப்­ப­டையில் ஒன்­றி­ணைந்து சுபீட்­ச­மான தேசத்தைக் கட்­யெ­ழுப்ப செயற்­பட வேண்­டு­மென்ற அழைப்பை புதிய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ விடுத்­தி­ருக்­கிறார்.

தேர்­தல்­களில் நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் ஜன­நா­யக உரிமை வழங்­கப்­பட்­டாலும் அதித நம்­பிக்கை ஒரு தரு­ணத்தில் நம்­பிக்­கைக்கு வெற்­றி­யா­கவும் மற்­று­மொரு தரு­ணத்தில் தோல்­வி­யா­கவும் அமை­யக்­கூடும். நடந்து முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் புதிய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவையும், சஜித் பிரே­ம­தா­ச­வையும் ஆத­ரித்து முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும், சிவில் அமைப்­புக்­களும் பிர­சாரம் செய்த போதிலும் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு அளிக்­கப்­பட்ட வாக்­கு­க­ளிலும் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு அளிக்­கப்­பட்ட வாக்­குகள் குறை­வா­னது என்­பதை தேர்தல் பெறு­பே­றுகள் கோடிட்டுக் காட்­டு­கின்­றன.

இருப்­பினும், கோத்­தா­பய ராஜபக் ஷ பெரும்­பான்மை பௌத்த சிங்­கள மக்­களின் அதி­கப்­ப­டி­யான வாக்­கு­க­ளினால் வெற்றி பெற்­றி­ருக்­கிறார். வடக்கு, கிழக்­கிலும், தென்­னி­லங்­கையின் நுவ­ரெ­லிய மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்­டங்கள் அனைத்­திலும் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ வெற்­றி­யீட்­டி­யி­ருப்­பது 1982 முதல் 2015ஆம் ஆண்டு வரை நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்தல் பெறு­பே­று­களின் வர­லாற்றைப் புரட்டிப் போட்­டி­ருக்­கி­றது.

தேர்தல் பெறு­பே­று­களின் வர­லாற்று ரீதி­யான ஆய்வு, புள்­ளி­வி­ப­ரங்கள் ஊடான தமிழ், முஸ்லிம் வாக்­கா­ளர்­களின் வெற்றிப் பங்­க­ளிப்புக் கணிப்­பீ­டு­களை பொய்­யாக்­கி­யி­ருக்­கி­றது. இந்­நாட்டின் ஜனா­தி­ப­தியை இந்­நாட்டில் வாழும் பெரும்­பான்மை மக்­க­ளினால் தெரி­வு­செய்ய முடி­யு­மென்ற செய்­தியை உல­க­றியச் செய்­தி­ருக்­கி­றது.

அத­னால்தான்., ஜனா­தி­பதித் தேர்­தலில் சிங்­கள மக்­களின் ஆத­ர­வி­னா­லேயே நான் வெற்றி பெற்­றுள்ளேன். ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டும்­போது சிங்­கள மக்­களின் ஆத­ர­வுடன் வெற்­றி­பெற முடியும் என்­பதை முன்­கூட்­டியே அறிந்தேன். இருப்­பினும், எமது வெற்­றியில் தமிழ், முஸ்லிம் மக்­களும் பங்­கா­ளர்­க­ளாக வேண்­டு­மென்று நான் அழைப்பு விடுத்தேன். ஆனால், எதிர்­பார்த்­த­ள­விற்கு அவர்­களின் ஆத­ரவு கிடைக்­க­வில்லை. ஆனாலும், இலங்­கையர் என்ற அடிப்­ப­டையில் என்­னுடன் ஒன்­றி­ணைந்து பணி­யாற்ற வரு­மாறு உங்கள் அனை­வ­ருக்கும் அழைப்பு விடுக்­கின்றேன் என்று தனது பத­விப்­பி­ர­மா­ணத்தின் பின்னர் நாட்டு மக்­க­ளுக்கு ஆற்­றிய உரையில் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ அழைப்பு விடுத்­தி­ருந்தார்.

தேர்­தலில் தங்­க­ளது ஜன­நா­யக உரி­மையை விரும்பும் வேட்­பா­ள­ருக்கு அளித்­தாலும், வெற்­றி­பெற்று ஆட்­சிக்கு வரும் ஆட்­சி­யா­ள­ருடன் இணைந்து நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப ஒத்­து­ழைப்பு வழங்­கு­வது இலங்­கையர் என்ற அடிப்­ப­டையில் ஒவ்­வொரு பிர­ஜை­யி­னதும் தார்­மீகப் பொறுப்­பாகும். அந்த தார்­மீகப் பொறுப்பு தென்­னி­லங்­கையில் மாத்­தி­ர­மின்றி வடக்கு, கிழக்கில் வாழும் அனைத்து முஸ்­லிம்கள் மீதும் பொறுப்­பா­க­வுள்­ளது. ஏனெனில், நாம் இலங்­கையர். இலங்­கையர் என்ற மகு­டத்தின் கீழ் ஆட்­சி­யா­ளர்­க­ளுடன் முஸ்­லிம்கள் ஒன்­றி­ணைந்து பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது.

ஏனெனில், அந்­நி­யர்­களின் ஏகா­தி­பத்­திய ஆட்­சி­யி­லி­ருந்து இந்­நாட்டை மீட்­டெ­டுப்­ப­தற்குப் போரா­டிய அனைத்­தின, மத அர­சியல் தலை­வர்­க­ளுடன் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும் மக்­களும் இணைந்து போரா­டி­யி­ருக்­கி­றார்கள். அது மாத்­தி­ர­மின்றி, சுதந்­தி­ரத்­திற்கு முற்­பட்ட காலத்தில் இந்­நாட்டை ஆண்ட மன்­னர்­களின் ஆட்­சியில் பல்­வேறு பொறுப்­புக்­க­ளுக்கும் பொறுப்­பா­ளி­க­ளாக இருந்­துள்­ள­துடன் அவர்­களின் நம்­பிக்­கைக்குப் பாத்­தி­ர­மா­ன­வர்­க­ளா­கவும் நாட்­டுப்­பற்­றா­ளர்­க­ளா­கவும் செயற்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

ஆனால், வர­லாற்று ரீதி­யாகக் கட்­டிக்­காத்து வந்த நம்­பிக்கை தற்­போது தகர்த்­தெ­றி­யப்­பட்­டி­ருக்­கி­றது. ஒரு இனம் மற்ற இனத்தின் மீதான சமூக அச்­சத்தின் கார­ண­மாக துரு­வ­மாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இத்­து­ரு­வ­நிலை மாற்­றப்­பட வேண்டும். மீண்டும் முஸ்­லிம்கள் மீதான பெரும்­பான்­மை­யி­னரின் நம்­பிக்கை கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும். அந்த நம்­பிக்கை கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்­டு­மாயின் நமது முன்­னோர்கள் இந்­நாட்­டுக்­காகப் புரிந்த தியா­கங்கள் புதுப்­பிக்­கப்­ப­டு­வ­தோடு இழந்த நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­பு­வதற்­கான திட்­டங்­களும் வகுக்­கப்­பட வேண்டும். மேலும், புதிய ஜனா­தி­ப­தி­யினால் இந்­நாட்டைக் கட்­டி­யெ­ழுப்பும் பய­ணத்தில் நாட்­டுப்­பற்­றுடன் இணைந்து பய­ணிக்­கவும் வேண்டும்.

ஐரோப்­பிய போத்­துக்­கீ­சர்­களும், ஒல்­லாந்­தர்­களும், ஆங்­கி­லே­யர்­களும் இந்­நாட்டை ஆட்சி செய்­வ­தற்கு முன்­னரும் ஆட்சி செய்த காலத்­திலும் இந்­நாட்டில் வாழ்ந்த முஸ்­லிம்­களின் பங்­க­ளிப்­புகள் அக்­கால ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு அளப்­ப­ரி­ய­தா­கவே இருந்­துள்­ளது. இரா­ஜ­தந்­திர துறை­யிலும், பாது­காப்­புத்­து­றை­யிலும், மருத்­து­வத்­து­றை­யிலும், வணி­கத்­து­றை­யி­லு­மென பல்­வேறு துறை­களில் அக்­கா­லத்து ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு முஸ்­லிம்கள் பங்­க­ளிப்பு செய்­தி­ருக்­கி­றர்கள்.

முஸ்­லிம்கள் கடற் பய­ணத்­திலும், பல மொழிகள் பேசு­வ­திலும், உள்­நாட்டு, வெளி­நாட்டு தொடர்­பா­டல்­க­ளி­லு­மெனப் பல்­வேறு விட­யங்­களில் தேர்ச்­சியும் அனு­ப­வமும் பெற்­றி­ருந்­ததால் அத்­த­கை­ய­வர்கள் அக்­கா­லத்து மன்­னர்­களின் தூது­வர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

கி.பி. 1258 இல் யாப்­ப­குவையை ஆண்ட முதலாம் புவ­னே­க­பாகு என்ற மன்னன் அக்­கா­லத்­தி­லி­ருந்த எகிப்தின் மம்­லூக்­கிய மன்­ன­னு­ட­னான வர்த்­தக தொடர்பின் நிமித்தம் அபூ உஸ்­மான் என்­ப­வரை தூது­வ­ராக அனுப்பி வைத்­த­தா­கவும் கி.பி. 1762ஆம் ஆண்­ட­ளவில் கண்டி மன்னனாக இருந்த கீர்த்­திஸ்ரீ இரா­ஜ­சிங்­கனை சந்­திப்­ப­தற்­காக கிழக்­கிந்­திய வர்த்­தகக் கம்­ப­னியின் தூது­வ­ராக ஜோன் பைபஸ் திரு­கோ­ண­ம­லைக்கு வந்­தி­ருந்­த­வேளை, அவரை வர­வேற்று கண்­டிக்கு அழைத்­து­வ­ரு­வ­தற்­காக மவுலா முகாந்­திரம் என்­ப­வ­ரது புதல்­வரான உதுமான் லெப்பை என்­ப­வரை மன்னர் அனுப்பி வைத்­தி­ருந்­த­தா­கவும் அதேபோல், போர்த்­துக்­கே­ய­ருக்கு எதி­ரான போராட்­டத்தில் அவர்­களை விரட்­டி­ய­டித்து நாட்டைக் காப்­பாற்­று­வ­தற்­காக கள்­ளிக்­கோட்டை சமோ­ரினின் உத­வியைப் பெற மாயா­துன்னை மன்னன் முஸ்­லிம்­க­ளையே தூது­வ­ராக அனுப்பி வைத்­தி­ருந்­த­தா­கவும் வர­லாறு கூறு­கி­றது.

தூது­வர்­க­ளாக மாத்­தி­ர­மின்றி, மன்­னர்­களின் பாது­காப்பு, வைத்­தியம், வாணிபம் என பல்­வேறு விட­யங்­களில் அக்­கா­லத்து பௌத்த சிங்­கள மன்­னர்­களின் விசு­வா­சத்­துக்கும் நம்­பிக்­கைக்­கு­ரி­ய­வர்­க­ளா­கவும் ஆளு­மை­மிக்­க­வர்­க­ளாகவும் முஸ்­லிம்கள் வாழ்ந்து நாட்டுப் பற்றை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள்.

அந்­நி­யர்­களின் கால­னித்­துவ ஆட்சிக் காலங்­க­ளின்­போது, இந்­நாடு பல சாதக பாதக விளை­வு­களை அனு­ப­வித்­தது. சாத­க­மான விளை­வு­க­ளாக பொரு­ளா­தார விருத்தி, அர­சியல் கட்­ட­மைப்பு மாற்றம், போக்­கு­வ­ரத்து வச­திகள் ஏற்­ப­டுத்­தப்­பட்டமை அவை தேவைக்­கேற்ப விருத்தி செய்­யப்­பட்­டமை, தொழிற்­சா­லைகள் நிறு­வப்­பட்­டமை, கல்வி முன்­னேற்றம் கண்­டமை. பாட­சா­லைகள் உரு­வாக்­கப்­பட்­டமை, சமூக முன்­னேற்­றமும் வாழ்க்கை முறை­மையும் மாற்றம் கண்­டமை போன்­ற­வற்றைக் குறிப்­பிட முடி­வ­துடன், பாதக விளை­வு­க­ளாக கலா­சா­ரத்தில் மாற்­றமும் அதன் பின்­ன­ரான சீர­ழி­வு­களும், மத­மாற்றம் மேற்­கொள்­ளப்­பட்­டமை, பொரு­ளா­தாரச் சுரண்டல், அடி­மைப்­ப­டுத்தல் முத­லான கால­னித்­து­வத்தின் பாதக விளை­வு­க­ளையும் குறிப்­பி­டலாம்.

இந்­நாட்டின் காற்றை சுதந்­தி­ர­மாகச் சுவா­சிக்க வேண்டும். தங்­களைத் தாங்­களே ஆள­வேண்டும், மாற்றான் ஆட்­சியில் நாம் மண்­டி­யிட்டுக் கிடக்க முடி­யாது என்ற ஒன்­று­பட்ட உணர்வின் வழியே சமூக ஒரு­மைப்­பா­டு­க­ளோடு ஒன்­றி­ணைந்து நாட்­டுக்கு சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொ­டுக்க உயிர், உடல், பொருள் கால நேரங்கள் அனைத்­தையும் தியாகம் செய்து அந்­நி­யரின் அடக்­கு­முறை, சுரண்டல் ஆட்­சி­யி­லி­ருந்து நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும் தேச­பி­தாக்கள் காப்­பாற்­றி­னார்கள்.

அவ்­வாறு போராடி 1948ஆம் ஆண்டு இந்­நாட்­டுக்கு சுதந்­தி­ரத்தை பெற்­றுக்­கொ­டுத்த சுதந்­திர இலங்கைத் தேசத்தின் தேச பிதாக்­க­ளாக டீ.எஸ். சேன­நா­யக்க, எப்.ஆர் சேன­நா­யக்க, எஸ்.டப்­ளியூ. ஆர். டீ. பண்­டா­ர­நா­யக்க, சேர் பாரன் ஜய­திலக்க, ஈ.டப்­ளியூ. பெரேரா, டி.ஆர் விஜே­ய­வர்­தன, ஜேம்ஸ் பீரிஸ், ஆதர் வி. டயஸ், அநகா­­ரிக தர்­ம­பால, சேர். பொன்­னம்­பலம் இரா­ம­நாதன், சேர். பொன்­னம்­பலம் அரு­ணா­சலம், சேர். முத்­துக்­கு­மா­ர­சு­வாமி, சேர். வைத்­தி­ய­லிங்கம் துரை­சு­வாமி, டாக்டர் ஆனந்த குமா­ர­சு­வாமி, ஸ்ரீலஸ்ரீ ஆறு­மு­க­நா­வலர், சி.வை. தாமோ­த­ரம்­பிள்ளை ஆகிய பெரும்­பான்மை சிங்­களத் தலை­வர்­க­ளு­டனும் சகோ­தர தமிழ் தலை­வர்­க­ளு­டனும் இணைந்து முஸ்­லிம்­களின் தலை­வர்­க­ளாக விளங்­கிய டாக்டர் ரீ.பி.ஜாயா, சேர்.ராசிக் பரீட், அறிஞர் சித்தி சின்­ன­லெப்பை, வாப்­பிச்சி மரைக்கார், சேர் மாக்கான் மாக்கார் போன்­ற­வர்கள் ஒன்­றி­ணைந்து பெற்­றெ­டுத்த தேச விடு­த­லைக்­கான வர­லா­றுகள் பௌத்த சிங்­கள மக்கள் மத்­தியில் மீள ஒப்­பு­விக்­கப்­பட வேண்டும்.

அத்­துடன், இந்­நாட்­டுக்­காக பாரி­ள­யவில் அன்றும், இன்றும் இந்­நாட்டு முஸ்­லிம்கள் தியா­கங்கள் பல புரிந்­தி­ருக்­கி­றார்கள், புரிந்­து­கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இருப்­பினும், பெரும்­பான்மை மக்கள் மத்­தியில் சிறு­பான்மை இன மக்கள் தொடர்பாக குறிப்பாக யுத்த வெற்றியின் பின்னர் முஸ்லிம்கள் தொடர்பான சமூக அச்சம் பெரும்பான்மை மக்கள் மத்தியில் அநியாயமாகத் தோற்றுவிக்கப்பட்டது. முஸ்லிம்கள் தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள சமூக அச்சம் களையப்பட வேண்டும். அதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளும், சிவில் அமைப்புக்களும், பெரும்பான்மை அரசியல் தலைமைகளுடனும் சிவில் அமைப்புக்களுடனும் இணைந்து பெரும்பான்மை சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. கடந்த காலங்களிலும் பல்வேறு மட்டங்களிலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும் அம்முயற்சி வெற்றியளிக்கவில்லை என்பதை இத்தேர்தல் பெறுபேறுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன.

இந்நிலையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்றியின் பின்னரான உரைகள் அவருக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்கள் மத்தியில் அவரின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான நம்பிக்கையை வளர்த்திருக்கிறது.

“எனக்கு ஆதரவாகவும், எதிராகவும் வாக்களித்த நாட்டு மக்களுக்கு நானே ஜனாதிபதி. ஆகவே அனைத்து மக்களும் எதிர்பார்க்கும் சிறந்த அரச நிர்வாகத்தினை முன்னெடுத்துச் செல்வேன். அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் பாரபட்சமின்றிய விதத்தில் செயற்படுத்தப்படுவார்கள் என்ற அவரது வெற்றியின் பின்னரான அறிவிப்பின் நம்பிக்கையின் அடிப்படையில் சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்பும் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் கோட்பாட்டின் வெற்றியில் பங்காளர்களாக மாறுவதற்கு அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் இந்நாட்டு முஸ்லிம்கள் ஒன்றிணைந்து செயற்பட உறுதிகொள்ள வேண்டும்.-Vidivelli

  • எம்.எம்.ஏ.ஸமட்

Leave A Reply

Your email address will not be published.