பாபரி மஸ்ஜித் தொடர்பான தீர்ப்பு மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

இந்திய முஸ்லிம்கள் கோரிக்கை

0 1,146

இந்­தி­யாவின் வட மாநி­ல­மான உத்­தர பிர­தே­சத்தில் அமைந்­துள்ள பாபரி மஸ்ஜித் அமைந்­தி­ருந்த காணி தொடர்பில் வழங்­கப்­பட்ட தீர்ப்பு மீளாய்வு செய்­யப்­பட வேண்­டு­மெனக் கோரி இந்­திய உச்ச நீதி­மன்­றத்தில் மனு­வொன்றை தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக இந்­திய முஸ்லிம் குழு­வொன்று அறி­வித்­துள்­ளது.

புத்­தி­ஜீ­விகள் மற்றும் அமைப்­புக்­க­களின் ஒன்­றி­ணைந்த கட்­ட­மைப்­பான அனைத்­திந்­திய முஸ்லிம் தனியார் சட்ட சபை, குறித்த காணியின் உரித்­து­ரிமை தொடர்­பான முஸ்­லிம்­களின் கோரிக்­கையை நிரா­க­ரித்­துள்­ள­மைக்கு எதி­ராக குறித்த தீர்ப்­பினை மீளாய்வு செய்­யு­மாறு கோரும் விண்­ணப்­ப­மொன்றை உச்ச நீதி­மன்­றத்தில் தாக்கல்  செய்­ய­வுள்­ள­தாக  கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தெரி­வித்­தது.

16 ஆம் நூற்­றாண்டின் ஆரம்­பத்தில் கட்­டப்­பட்ட பாபரி மஸ்ஜித் அமைந்­தி­ருந்த வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடம் ராமர் கோயில் கட்­டு­வ­தற்கு இந்­துக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட வேண்­டு­மென உச்ச நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.

பள்­ளி­வா­ச­லொன் றைக் கட்­டு­வ­தற்கு மத்­திய அர­சாங்­கமோ அல்­லது மாநில அர­சாங்­கமோ ஐந்து ஏக்கர் விஸ்­தீ­ரணம் கொண்ட பொருத்­த­மான காணி­யொன்­றினை சுன்னி வக்ப் சபைக்கு வழங்க வேண்டும் எனவும் இந்­திய உச்ச நீதி­மன்றம் தனது தீர்ப்பில் தெரி­வித்­தி­ருந்­தது.

ஐந்து நீதி­ப­திகள் கையொப்­ப­மிட்­டுள்ள தீர்ப்பு தொடர்பில் அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட சபையைப் பிரதிநிதித்துவப் படுத்தும் முஸ்லிம் தரப்பு அதிருப்தியினை வெளியிட்டிருந்தது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.