தேர்தலின் வெற்றி எது?

0 1,129

நடந்து முடிந்த தேர்தல் முடி­வு­க­ளின்­படி சிங்­களப் பெரும்­பான்மை வாக்­கு­களை அதிகம் பெற்று சிறி­த­ள­வான சிறு­பான்மை வாக்­கு­களால் நாட்டின் ஏழா­வது ஜனா­தி­ப­தி­யாக கோத்­தா­பய ராஜபக் ஷ தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்றார்.

இந்த தேர்தல் முடிவும் கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெற்­றியும் சிறு­பான்மை சமூக அர­சி­யலில் உற்­று­நோக்­கக்­கூ­டிய பல கேள்­வி­க­ளையும் மீளாய்வு செய்ய வேண்­டிய பல படிப்­பி­னை­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாகப் பலரும் பல்­வே­று­வி­த­மான கருத்­துக்­க­ளையும் பகிர்ந்­து­கொள்­கின்­றனர்.

நடந்து முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் முஸ்­லிம்­களும் மலை­யகம் உட்­பட நாட்­டி­லுள்ள தமி­ழர்­களும் பெரும்­பான்­மை­யாக ஒரு­மித்த வாக்­கு­களை சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரித்து அ­ளித்­தி­ருந்­தார்கள்.

மறு­புறம், சிறு­பான்மை சமூ­கங்­க­ளான தமிழ், முஸ்­லிம்­களின் வாக்­குகள் தேவை­யில்லை என்ற ஆரம்­பத்­தோ­டுதான் கோத்­தா­பய தரப்­பினர் தங்கள் தேர்தல் பிர­சா­ரங்­களை மேற்­கொண்­ட­தாகப் பேசப்­பட்­டன. அதன்­படி, கடந்­த­கால தேர்­தல்கள் மூலம் அவர்கள் பெற்ற சிங்­கள வாக்­கு­களைக் கணித்து, சிங்­கள மக்கள் மத்­தியில் அவர்­க­ளுக்­கி­ருந்த செல்­வாக்கில் நம்­பிக்கை வைத்து, சிறு­பான்மை வாக்­கு­களை எதிர்­பார்க்­காமல்  சிங்­கள வாக்­கு­களால் இத்­தேர்­தலில் வெற்றி கண்­டி­ருக்­கி­றார்கள்.

இந்த வெற்றி சிறு­பான்மை சமூ­கங்­களை இந்த ஆட்­சியின் எதி­ரி­க­ளாக்கி இருக்­கின்­றது? சிறு­பான்மை சமூ­கங்கள் ஆத­ரித்த சஜித் பிரே­மதாச தோற்றுப் போன­தனால், எமது தெரிவும் முடிவும் தூர நோக்­கற்­ற­தா­கி­விட்­டது? அல்­லது பிழை­யான ஒரு முடி­வா­கி­விட்­டது? என்­றெல்லாம் விமர்­சிக்­கும்­படி எம்மில் சிலரின் கருத்­துக்­களும் பேச்­சுக்­களும் இருப்­ப­தா­கவும் தெரி­கி­றது.

இந்தக் கேள்­வி­க­ளுக்கும் விமர்­ச­னங்­க­ளுக்கும் பின்­னா­லுள்ள ஒரே­யொரு மனோ­பாவம் என்­ன­வென்றால், நாம் வாக்­க­ளித்த வேட்­பாளர் எப்­ப­டியும் வெற்­றி­பெற வேண்­டு­மென்ற மர­பான சிந்­தனை முறைமை எமக்குள் மேலோங்கி இருப்­ப­தே­யாகும். இந்தப் பின்­ன­ணி­யில்தான், நாம் வாக்­க­ளித்­தவர் வெற்றி பெற்றால் எமது முடிவு சரி என்றும் தோல்­வி­ய­டைந்தால் எமது முடிவு பிழை­யென்றும் தீர்ப்புக் கூறிப் பழ­கிக்­கொண்டோம்.

ஆனாலும், மேற்­படி வழி­மு­றை­யின்­படி, வெற்றி தோல்­வியை வைத்து எமது முடிவு சரியா? பிழையா? என்று பார்ப்­ப­தென்றால், இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில்  JVPக்கு வாக்­க­ளித்த நான்கு இலட்­சத்­திற்கும் மேற்­பட்ட மக்கள் JVP நிச்­சயம் வெற்றி பெறு­மென்ற முடி­வெ­டுத்தா வாக்­க­ளித்­தார்கள்? இதில் கோத்­தாவோ, சஜித்தோ வெற்றி பெறு­வார்கள் என்ற நிலை தெரிந்தும் நிச்­சயம் தோற்றுப் போகும் JVP க்கு வாக்­க­ளித்­த­வர்கள் எல்­லோரும் தூர­நோக்­கற்­ற­வர்­களா? அவர்­களின் முடிவு பிழை­யா­னதா? என்று கேட்டால் இதற்கு என்ன பதில் கூற­மு­டியும்?

ஆக, தேர்­தலின் வெற்றி என்­பது வாக்­கு­களால் தீர்­மா­னிக்­கப்­ப­டு­வ­தாக வரை­ய­றுக்­கப்­பட்­டாலும், கொள்­கையின் வெற்றி, சமூ­கத்தின் வெற்றி என்றும் நாம் அதற்குள் இன்னும் பல வெற்­றி­களைக் காணலாம்.  இதன்­படி தேர்­தல்­களில் வெற்­றிக்­காக வாக்­க­ளிப்­ப­திலும் பார்க்க கொள்­கைக்கு வாக்­க­ளிப்­ப­வர்­களும் சமூ­கத்­திற்­காக வாக்­க­ளிப்­ப­வர்­களும் தங்­களின் நிலைப்­பாட்டில் வெற்றி பெற்­ற­வர்­களே! இங்கு அவர்கள் வாக்­க­ளித்த வேட்­பாளர் தோற்­றாலும் வாக்­க­ளித்த அவர்­க­ளது கொள்கை தோற்­காமல் வாழும்.

இதன்­படி பார்த்தால், இத்­தேர்­தலில் சிறு­பான்மைச் சமூ­கங்கள் வாக்­க­ளித்த சஜித் பிரே­ம­தாச தோற்­றாலும்; சமூகம் என்ற கொள்­கையில் ஒரு­மித்து தங்கள் வாக்குப் பலத்­தினை ஒன்­று­ப­டுத்திக் காட்­டி­யதில் இத்­தேர்­தலில் முஸ்லிம், தமிழ் சமூக அர­சி­யலும் வெற்றி பெற்­றுத்தான் இருக்­கி­றது.

இதே­போன்று, கோத்­தா­ப­யவின் வெற்றி என்­பதும் இந்த நாட்டின் ஜனா­தி­ப­திக்­கான வெற்றி மாத்­தி­ர­மல்ல. அது சிங்­கள சமூ­கத்­திற்­கான வெற்­றி­யா­கவும் பௌத்த அர­சொன்றை மிகப் பல­மாக நிறுவும் அவ­ரது கொள்­கைக்­கான வெற்­றி­யா­கவும் இருப்­ப­தையும் நாம் ஆழ்ந்து பார்க்க வேண்­டி­யி­ருக்­கின்­றது.

ஏனெனில், முஸ்லிம் சமூகம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் என்ற சமூகக் கட்­சியில் ஒன்­றி­ணை­வ­துபோல், தமி­ழர்கள் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு என்று ஒன்­றி­ணை­வ­துபோல், மலை­யகத் தமி­ழர்கள் மலை­யக அர­சி­ய­லாக ஒன்­றி­ணை­வ­துபோல் சிங்­கள மக்­களும் தங்­க­ளுக்­கான ஒரு சமூகக் கட்­சியை கொள்­கை­ய­ளவில் உரு­வாக்­கி­யதன் வெற்­றிதான் கோத்­தா­ப­யவின் வெற்­றி­யாகும். பௌத்த மதத்தை அடிப்­படைக் கொள்­கை­யாகக் கொண்ட இந்தக் கட்­சியின் வெற்­றியில் முஸ்லிம் சமூ­கமோ சிறு­பான்மை சமூ­கமோ எந்த இடத்தை அடைய முடி­யு­மென்ற பெரும் கேள்வி எம்முன் எழுந்து நிற்­கி­றது.

இதில் கோத்­தா­ப­ய­வுக்கு ஆத­ர­வ­ளித்து அவர் பக்கம் நின்ற சிறு­பான்மை சமூ­கத்­த­வர்கள் பெரும் மகிழ்ச்சி கொள்­வதும் தாங்கள் தூர­நோக்­குடன் வெற்­றியின் பக்கம் நின்­று­விட்டோம் என்று மார் தட்­டு­வதும் நீண்­ட­கா­லத்­திற்கு நிலைத்­தி­ருக்­குமா? என்ற கேள்­வி­யையும் வைத்­துக்­கொள்ள வேண்டும்.

இதற்கு மேலாக, சிறு­பான்மைச் சமூ­கங்கள் கோத்­தா­ப­யவை ஆத­ரிக்­காமல் தனித்து நின்­றது பெரும் ஆபத்­தான விடயம் என்றும் நாங்கள் தனி­யாக எங்­களைப் பிரித்துக் காட்­டி­யது  இலங்கை தேசி­யத்தின் இறை­மைக்கே பிழை­யா­னது என்­பது போன்றும் சிறு­பான்மை அர­சியல் தலை­வர்கள் இந்த தவறை செய்­து­விட்­டார்கள் என்றும் இன்னும் சிலரின் பிர­சா­ரங்கள் எல்லை இல்­லா­மலும் பேசப்­ப­டு­கின்­றது.

இது எந்­த­வித அடிப்­ப­டை­யு­மில்­லாத ஒரு பேச்­சாகும். ஏனெனில், தேசியக் கட்­சி­களின் வேட்­பா­ளர்­களை முற்­றாக நிரா­க­ரித்து, சிறு­பான்மைச் சமூக, அர­சியல் தலை­வர்கள் தங்கள் முஸ்லிம், தமிழ் சமூ­கங்­க­ளுக்குள் ஒரு வேட்­பா­ளரை நிறுத்தி தனி நாடு கேட்­ப­துபோல் அவர்­க­ளுக்கு ஒன்­று­பட்டு வாக்­க­ளிக்­கும்­படி இந்த தேர்­தலை எதிர்­கொண்­டி­ருந்தால் நாம் நாட்டின் தேசி­யத்­திற்கு மாற்­ற­மா­ன­வர்கள் என்று கூறலாம். ஆனால் நாங்கள் அவ்­வாறு செய்­யாமல் இந்த நாட்டின் தேசியக் கட்­சி­யொன்றின் பௌத்த சிங்­கள வேட்­பா­ள­ரான சஜித் பிரே­ம­தா­ச­வைத்தான் ஆத­ரித்து வாக்­க­ளித்தோம். கோத்­தா­ப­யவைப் போன்று சஜித்தும் ஒரு தேசியக் கட்­சி­யி­னதும் சிங்­கள சமூ­கத்­தி­னதும் வேட்­பா­ளர்தான்.

இதற்­க­மைய நாங்கள் மாத்­தி­ர­மல்ல, எங்­க­ளோடு சேர்த்து இந்த நாட்டின் பௌத்த சிங்­கள மக்கள் சுமார் 35 இலட்சம் வாக்­கு­களை சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு அளித்­தி­ருக்­கி­றார்கள்.

இதன்­படி பார்த்தால் இந்த 35 இலட்ச சிங்­கள மக்­களும் கோத்­தா­ப­ய­வுக்கு வாக்­க­ளிக்­கா­து­விட்­டது ஆபத்­தான விட­யமா? இவர்கள் இந்த நாட்டின் தேசி­யத்­திற்கு எதி­ரா­ன­வர்­களா?

ஆக, முஸ்லிம், தமிழ் சமூ­கங்கள் ஒன்­று­பட்டு ஒரு­பக்­க­மாக தங்கள் வாக்­கு­களை அளித்­தாலும் அவர்கள் இந்த நாட்டின் சிங்­கள மக்­க­ளோடும் தேசிய அர­சி­ய­லோடும் இணைந்­துதான் இந்த தேர்­தலை எதிர்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்த நாட்டின் ஜன­நா­யக வழி­மு­றையில் ஒரு ஜனா­தி­ப­தியைத் தெரிவு செய்­வ­தற்­காக கொள்கை அடிப்­ப­டையில் பொருத்­த­மா­ன­வ­ராக சஜித் பிரே­ம­தாச சிறு­பான்மை சமூ­கத்தின் அர­சியல் தலை­வர்­களால் அடை­யாளம் காட்­டப்­பட்டார். அந்தக் கொள்­கையின் பின்னால் எமது மக்­களும் சமூ­கமும் நின்­றது.

மறு­த­லை­யாகப் பார்த்தால் மக்­களின் தீர்ப்­பு­கள்தான் தலை­வர்­களின் கொள்­கை­க­ளாகவும் மாறு­கின்­றன. கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிக்கும் முடி­வினை மக்கள் ஒன்­று­பட்டு எடுத்து தலை­வர்­களை அதன் வழியில் பின்­வரச் செய்­தார்கள்.

அப்­போது மக்கள் எடுத்த இந்த முடி­வுக்கு மஹிந்­தவின் ஆட்­சியில் காணப்­பட்ட ஆபத்தும் அச்­ச­மும்தான் மிக முக்­கிய கார­ண­மாகத் தெரிந்தது. இம்முறையும் அதனை முன்னனுபவமாகக் கொண்டு அத்தகைய ஆபத்தும் அச்சமும் நிறைந்த ஒரு ஆட்சி உருவாகுவதை எமது சிறுபான்மை சமூகத்தினர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அத்தகைய ஒரு வேட்பாளருக்கு எமது சமூகம் ஆதரவளிக்காது என்ற கடந்தகால அனுபவங்களும் எமது தலைவர்கள் சஜித் பிரேமதாசவை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டதற்கும் மிக முக்கிய காரணமாகலாம்.

எனவே, தேர்தலின் வெற்றி எது எனக் கேட்டால், அதிகூடிய வாக்குகளைப் பெறுபவர் வெற்றிபெற்றவரானாலும் தலைவர்களின் பின்னால் அந்தச் சமூகமும் மக்களும் நிற்பதுவும் கொள்கையளவில் பெற்ற வெற்றியே ஆகும். இங்கு நாம் ஆதரவளித்த வேட்பாளர் தோற்றாலும் கொள்கையில் நாம் தோற்காது நிற்கின்றோம் என்ற செய்தி மிகவும் கனதியானது. எதிர்கால சமூக அரசியலுக்கு அது உறுதியான ஓர் அடித்தளத்தை உடையது.-Vidivelli

  • நவாஸ் சௌபி

Leave A Reply

Your email address will not be published.