தமிழ் பேசும் மக்களின் வாக்குகளுக்கு இனவாத பரிமாணத்தைக் கற்பிப்பது நேர்மையற்றது

த.தே.கூ. தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டுகிறார்.

0 659

ஜனா­தி­பதித் தேர்­தலில் இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் வாக்­க­ளித்­தி­ருக்கும் முறைக்கு இன­வாதப் பரி­மா­ணத்தைக் கற்­பிப்­பது நேர்­மை­யற்­றது என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் கூறி­யி­ருக்­கிறார்.

தமிழ் பேசும் மக்கள் இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் இன­வாத அடிப்­ப­டையில் வாக்­க­ளிப்­ப­தற்­கான தேவையும் எழ­வில்லை. ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றி­ருக்கும் கோத்­தா­பய ராஜபக் ஷவும், ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பா­ள­ரான சஜித் பிரே­ம­தா­சவும் சிங்­கள பௌத்­தர்­களே. பொரு­ளா­தார விவ­கா­ரங்­களைப் பொறுத்­த­வ­ரை­யி­லும்­கூட அவர்­க­ளி­ரு­வரும் ஒரே மாதி­ரி­யான அணு­கு­மு­றையைக் கொண்­ட­வர்­களே. ஆனால் சிறு­பான்­மை­யி­னத்­த­வரின் பிரச்­சி­னை­களைப் பொறுத்­த­வரை சஜித் பிரே­ம­தாச தேர்தல் பிர­சா­ரங்­களில் வர­வேற்­கக்­கூ­டிய நிலைப்­பா­டு­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார் என்று சம்­பந்தன் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

வடக்கு – கிழக்கு மாகா­ணங்கள் மற்றும் தலை­நகர் கொழும்பு, மலை­யக தமி­ழர்கள் வாழும் பகு­தி­களில் சஜித் பிரே­ம­தா­ச­விற்குப் பெரு­ம­ளவு வாக்­குகள் கிடைத்­தி­ருப்­பதை சுட்­டிக்­காட்டி, இலங்கை வரை­ப­டத்தில் வர்­ணத்தின் மூல­மாக வேறு­ப­டுத்தி சமூக ஊட­கங்­களில் ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வு­களை இலங்­கையின் இனப்­பி­ளவை வெளிக்­காட்டும் ஆணை அல்­லது துரு­வ­ம­யப்­பட்ட தீர்ப்பு என்று வர்­ணித்து அபிப்­பி­ரா­யங்கள் வெளி­யி­டப்­பட்ட வண்­ண­முள்­ளன.

தென்­னி­லங்­கையில் அமோக செல்­வாக்குக் கொண்­ட­வ­ரான கோத்­தா­பய ராஜபக் ஷவை நிரா­க­ரித்­ததன் மூலம் இன அடிப்­ப­டையில் தமி­ழர்கள் வாக்­க­ளித்­தி­ருப்­ப­தா­கவும் சிலர் குற்­றஞ்­சாட்­டி­னார்கள். இந்தக் கருத்­துக்கள் எல்லாம் இணை­யத்­த­ளங்­களில் சூடான வாதப்­பி­ர­தி­வா­தங்­களை மூள­வைத்­தி­ருப்­பதைக் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. சமூக ஊட­கங்­களின் பதி­வு­களில் இன­வாத ரீதி­யான கருத்­துப்­ப­தி­வுகள் பெரு­ம­ளவில் இடம்­பெ­று­வ­தா­கவும் கவலை வெளி­யி­டப்­ப­டு­கின்­றது. ‘தமிழ் மக்கள் இன அடிப்­ப­டையில் வாக்­க­ளிக்க விரும்­பி­யி­ருந்தால் தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இன­வாதத் தொனி­யு­ட­னான கருத்­துக்­களை வெளி­யிட்ட தமிழ் வேட்­பா­ள­ரான சிவா­ஜி­லிங்­ கத்­திற்கு அல்­லவா வாக்­க­ளித்­தி­ருப்­பார்கள்?’ என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் கேள்வி எழுப்­பினார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சஜித் பிரே­ம­தா­ச­விற்கு ஆத­ர­வ­ளிக்கும் அதன் நிலைப்­பாட்டை வெளி­யிட்ட பிறகு, அக்­கட்சி சஜித்­துடன் உடன்­ப­டிக்கை ஒன்றைச் செய்­தி­ருப்­ப­தாக கோத்­த­ாப­யவின் ஆத­ர­வா­ளர்கள் குற்­றஞ்­சாட்­டி­னார்கள். ஆனால் சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தேசிய பிரச்­சினை தொடர்­பாக முன்­வைக்­கப்­பட்ட பல கொள்­கைகள் மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாக அதி­கா­ரத்­தி­லி­ருந்த போது உறு­தி­ய­ளித்த விட­யங்­க­ளி­லி­ருந்து வேறு­பட்­டவை அல்ல. சஜித் பிரே­ம­தாச உறு­தி­ய­ளித்த விட­யங்கள் முன்னர் கேள்­விப்­ப­டா­த­வையும் அல்ல என்று சம்­பந்தன் கூறினார்.

கோத்­தா­ப­ய­விற்கு மக்கள் அளித்­தி­ருக்கும் ஆணையை இன­வாத அடிப்­ப­டை­யி­லா­ன­தாகக் குறைத்து மதிப்­பி­டக்­கூ­டாது என்­பதும் முக்­கி­ய­மா­ன­தாகும். இன்­றைய அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களால் ஏமாற்­றமும், அதி­ருப்­தியும் அடைந்த மக்கள் கோத்­தா­ப­ய­விற்கு பெரு­ம­ளவில் தமது ஆத­ரவை வெளிக்­காட்­டி­யி­ருக்­கி­றார்கள். வாழ்க்­கைச்­செ­லவு, ஊழல்­மோ­சடி, உர­மா­னியம், வேலை­வாய்ப்பு போன்ற பல்­வேறு அடிப்­படைப் பிரச்­சி­னை­களில் அர­சாங்கம் முன்னர் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறைவேற்றவில்லை. இவ்வாறாகப் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்தியிருக்கின்றன என்று சம்பந்தன் விளக்கமளித்தார்.

‘மக்கள் தங்களது ஜனநாயகத் தெரிவுகளை செய்வதற்கான அருகதை உடையவர்கள். செல்லுபடியாகக் கூடியவகையில் அவர்கள் தமது வாக்குகளை அளிக்கும்போது அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்’ என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ‘த இந்து’ பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்குக் கூறியிருக்கிறார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.