புதிய ஜனாதிபதிக்கு சிறுபான்மை மக்கள் ஓத்துழைக்க வேண்டும்

0 1,015

இலங்­கையின் 7 ஆவது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­ாபய ராஜபக் ஷ நேற்று பத­விப்­பி­ர­மாணம் செய்து கொண்டார்.
நேற்று அநு­ரா­த­புரம் ருவன்­வெ­லி­சாய வளா­கத்தில் ஜய­சிறி மஹா போதிக்கு அருகில் பிர­தம நீதி­ய­ரசர் ஜயந்த ஜய­சூ­ரிய முன்­னி­லையில் பத­விப்­பி­ர­மாண நிகழ்வு இடம்­பெற்­றது.

பத­விப்­பி­ர­மாண நிகழ்வில் கலந்துகொண்டு புதிய ஜனா­தி­பதி நாட்டு மக்­க­ளுக்கு உரை­யாற்­று­கையில்; தான் வெளி­யிட்ட கொள்கைப் பிர­க­ட­னத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தாக உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார். தான் நாட்டை நேசிப்­ப­தா­கவும், நாட்டை அபி­வி­ருத்திப் பாதையில் இட்டுச் செல்­வ­தற்கு பாரிய பொறுப்­புள்­ள­தென்­ப­தையும் ஏற்­றுக்­கொண்­டுள்ளார். நாட்டின் இறை­மையை மதிக்­கும்­படி அனைத்து சர்­வ­தேச நாடு­க­ளி­டமும் கோரிக்கை விடுத்­துள்ளார். அனைத்தின மக்­க­ளையும் சம­மாக நடத்­து­வ­தா­கவும், நாட்டில் நல்­லி­ணக்­கத்­தையும், இன நல்­லு­ற­வையும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தா­கவும் நாட்டின் பாது­காப்பை உறுதி செய்­வ­தா­கவும் கூறி­யுள்ளார்.

இதே­வேளை “சிங்கள மக்­களின் வாக்­கு­களின் அடிப்­ப­டை­யிலே நான் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்டேன். தமிழ், முஸ்லிம் மக்­க­ளிடம் எனக்கு ஆத­ரவு வழங்­கு­மாறு கோரி­யி­ருந்தேன். ஆத­ரவு கிடைக்­க­வில்லை என்­றாலும் நான் உங்­க­ள் அனைவரினதும் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ளேன். நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு உங்­க­ளது பங்­க­ளிப்புத் தேவை. எனது பய­ணத்தில் தமி­ழர்­களும், சிங்­க­ள­வர்­களும் பங்­கா­ளர்­க­ளாக வேண்டும்” எனத் தெரி­வித்­துள்ளார்.

தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்ற ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் கலந்து கொண்ட நிகழ்­விலும் புதிய ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தான் வெளி­யிட்ட கொள்கை பிர­க­ட­னத்தை முழு­மை­யாக நிறை­வேற்­று­வ­தாக உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

இதே­வேளை, நீண்­ட­கால இடை­வெ­ளிக்­குள்­ளா­கி­யுள்ள மாகாண சபைத் தேர்­தலை தாம­த­மில்­லாமல் நடத்­து­வ­தற்கு முன்­வர வேண்டும் என புதிய ஜனா­தி­ப­திக்கு தேர்தல் ஆணைக்­குவின் தலை­வ­ரினால் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வகையில் நாட்­டி­னதும், நாட்டு மக்­க­ளி­னதும் பாது­காப்­பினை உறுதி செய்­வ­தா­கவும் இனங்­க­ளுக்கு இடையில் நல்­லி­ணக்­கத்­தையும் நல்­லு­ற­வையும் வளர்ப்­ப­தா­கவும் ஜனா­தி­ப­தியின் ஆரம்ப செயற்­பா­டுகள் அமை­ய­வேண்டும். மாகாண சபைத்­தேர்தல் தொடர்­பிலும் உடன் கவனம் செலுத்­தப்­ப­ட­வேண்டும்.

முஸ்­லிம்கள் தேர்­தலில் தனக்கு ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை என்ற அவ­ரது மனப்­ப­தி­வினை இல்­லாமற் செய்­வ­தற்கு முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் புதிய ஜனா­தி­ப­தியின் நாடு மற்றும் சமூகம் சார்ந்த செயற்­பா­டு­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும்.

ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அலி­சப்ரி விடுத்­துள்ள அறை கூவ­லுக்கு முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் செவி சாய்க்­க­வேண்டும். புதிய ஆட்­சி­யா­ளர்­க­ளுடன் இணைந்து செயற்­பட முஸ்லிம் தலைமைகள் முன்­வர வேண்­டு­மென அவர் அழைப்பு விடுத்­துள்ளார்.

இலங்கை முஸ்­லிம்கள் நல்­ல­தொரு ஆட்­சி­யா­ளரைத் தரு­மாறு பள்­ளி­வா­சல்­களில் பிரார்த்­த­னையில் ஈடு­பட்­டார்கள். சிலர் நோன்பும் நோற்­றார்கள், அல்லாஹ் அந்தப் பிரார்த்­த­னை­களை அங்­கீ­க­ரித்­துள்ளான். நாம் அந்த முடி­வுக்கு மதிப்­ப­ளிக்­க­வேண்டும். புதிய ஜனா­தி­பதி தனக்கு வாக்­க­ளிக்­காத மக்­க­ளதும் ஜனா­தி­ப­தி­யாவார் என அலி சப்ரி குறிப்­பிட்­டுள்ளார்.

இதே­வேளை அமைச்­சர்­க­ளான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன் ஆகி­யோரும் புதிய ஜனா­தி­ப­திக்கு வாழ்த்­துக்­களைத் தெரி­வித்­துள்­ளார்கள்.

‘உங்­க­ளது நிர்­வா­கத்தின் கீழ் அமைதி, ஒற்­றுமை, இனங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்கம், நல்­லெண்ணம் என்­ப­வற்­றுக்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டு­மென’ அமைச்சர் ஹக்கீம் வேண்­டி­யுள்ளார்.

உங்­க­ளது வெற்­றியில் பங்­கெ­டுக்­காத சிறு­பான்மை மக்­களின் மனங்­களை வென்­றெ­டுத்து இனங்­க­ளுக்கு இடையில் இணைப்புப் பால­மாக இருக்க வேண்டும் எனவும் புதிய ஜனா­தி­ப­தியை அவர் வேண்­டி­யுள்ளார்.

முன்னாள் வட­மா­காண ஆளுநர் சி. விக்­னேஸ்­வ­ரனும், புதிய ஜனா­தி­ப­தியை வாழ்த்­தி­யுள்ளார். ஜனா­தி­பதித் தேர்தல் இந்­நாட்டு மக்கள் இன ரீதியாக இரு துருவங்களாகப் பிரிந்திருப்பதை உணர்த்தியுள்ளமை இந்நாட்டில் இனப்பிரச்சினை ஒன்றிருப்பதை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது என்பதையும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மொத்தத்தில் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ முஸ்லிம்களதும், தமிழர்களதும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும். முஸ்லிம்கள் இந்நாட்டில் சுதந்திரமாக அச்சமின்றி வாழும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூகத்தின் அபிலாஷையாக இருக்கிறது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.