குடியுரிமை குறித்த ஆவணங்களை தேர்தல் ஆணைக்குழு கோருவதில்லை

மஹிந்த தேசப்பிரிய

0 1,335

ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவி­னது அமெ­ரிக்க குடி­யு­ரிமை நீக்­கப்­பட்­டமை தொடர்­பி­லான ஆவ­ணங்கள் தேர்தல் ஆணைக்­கு­ழு­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தாக அவ­ரது சட்ட ஆலோ­சகர் சட்­டத்­த­ரணி அலி சப்ரி தெரி­வித்­தாலும் அவ்­வா­றான எந்த ஆவ­ணமும் பெற்றுக் கொள்­ளப்­ப­ட­வில்லை என தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார்.

பிபிசி செய்திச் சேவை­யு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லின்­போதே அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார். ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவின் குடி­யு­ரிமை பிரச்­சினை மற்றும் அது தொடர்பில் தேர்தல் ஆணைக்­கு­ழு­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் ஆவ­ணங்கள் தொடர்பில் தேர்தல் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய விளக்­க­ம­ளிக்­கையில்;

தேர்­தலில் போட்­டி­யிடும் எந்­த­வொரு வேட்­பா­ளரும் சிறைத் தண்­டனை அனு­ப­வித்­துள்­ளாரா? தேவை­யான தகு­திகள் இருக்­கின்­றதா? அர­சாங்­கத்­துடன் ஒப்­பந்­தங்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கி­றாரா? குடி­யு­ரிமை தொடர்­பான பிரச்­சி­னைகள் உள்­ள­னவா? என்­பது தொடர்பில் தேர்தல் ஆணைக்­குழு வேட்­பா­ளர்­க­ளிடம் எந்த கடி­தத்­தையும் கேட்­காது அது தொடர்பில் அவதா­னமும் செலுத்­தப்­ப­ட­மாட்­டாது என்­றாலும் வேட்பு மனுவில் “தான் எந்­த­வொரு தகு­தி­யற்ற விட­யங்­க­ளுக்கும் உட்­ப­ட­வில்லை. இதில் நான் போட்­டி­யிட விரும்­பு­கிறேன்” என வேட்­பாளர் கையொப்­ப­மிட வேண்டும். சமா­தான நீதிவான் அந்த கையொப்­பத்தை உறுதி செய்ய வேண்டும். அத்­தோடு வேட்­பாளர் 35 வய­திற்கு மேற்­பட்­ட­வ­ராக இருக்க வேண்டும். 35 வய­துக்குக் குறைந்­த­வ­ராக இருந்தால் அவ­ரது வேட்­பு­மனு நிரா­க­ரிக்­கப்­படும். 35 வய­துக்கு குறை­வாக இருந்து 35 வய­துக்கு அதிகம் என பொய் தகவல் வழங்­கி­னாலும் தேர்தல் ஆணைக்­கு­ழு­வினால் அதனை விசா­ரிக்க முடி­யாது. குடி­யு­ரிமை தொடர்பில் உத்­தி­யோ­க­பூர்வ தக­வல்கள் எதையும் நாங்கள் கோருவது இல்லை. பெற்றுக் கொள்வதும் இல்லை. குறைந்தபட்சம் அடையாள அட்டையின் பிரதியைக் கூட கோருவது இல்லை.

இதன் அடிப்படையில் நாம் எந்த ஆவணத்தையும் பெறவில்லை எனத் தெரிவித்தார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.