2ஆவது வாக்கையும் பயன்படுத்துங்கள்

கே.டி. லால்காந்த

0 1,289

இம்­முறை நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் பிர­தான அபேட்­ச­கர்கள் எவரும் 50 சத­வீத வாக்­கு­களைப் பெற­மு­டி­யாத நிலை ஏற்­படும் என்றும் எனவே, இரண்­டா­வது விருப்பு வாக்­கு­களை எண்ணும் நிலை ஏற்­ப­டலாம் என்றும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற அங்­கத்­தவர் கே.டி. லால்­காந்த தெரி­வித்தார்.

கண்டி டெவோன் ஹோட்­டலில் இடம்­பெற்ற ஊடக சந்­திப்பில் அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

தேர்தல் தொடர்­பான அறி­வித்தல் ஆரம்­பத்தில் விடுக்­கப்­பட்டபோது குறிப்­பி­டத்­தக்க அளவு போட்டி நிலை­மைகள் காணப்­ப­ட­வில்லை. ஆனால் படிப்­ப­டி­யாக வாக்­க­ளிப்பு தினம் அண்­மித்­துள்­ள­போது அது கடும் மும்­முனைப் போட்­டி­யா­கி­யுள்­ளது. எந்த அபேட்­ச­கரும் 50 சத­வீத வாக்­கு­களை பெற­மு­டி­யாத நிலை­யொன்று உரு­வாகும் சாத்­தியம் தென்­ப­டு­கி­றது. எனவே வாக்­க­ாளர்கள் இரண்டாம் தெரி­வுக்கு செல்­வது நல்­லது என்றார்.

எனவே, இம்­முறை தேசிய மக்கள் சக்தி அபேட்­கசர் அனு­ர­கு­மார திசா­நா­யக்­கா­விற்கு உங்கள் முத­லா­வது வாக்­கையும் மற்ற பிர­தான அபேட்­ச­கர்­களில் ஒரு­வ­ருக்கு இரண்­டா­வது தெரி­வையும் வழங்­கு­வது பொருத்­த­மெனக் கரு­து­கிறேன்.

1982ஆம் ஆண்டு ஏறத்­தாழ ஒரு வகை­யான மும்­முனைப் போட்டி நடை­பெற்­ற­போதும் அதன் பிறகு அவ்­வா­றான ஒரு நிலை காணப்­ப­ட­வில்லை.  ஆனால் இம்­முறை தெளி­வான ஒரு மும்­முனைப் போட்டி நடக்கும்  சாத்­தி­ய­முண்டு. எனவே யாரை வெற்றி பெறச் செய்­வது, யாரை தோல்­வி­ய­டையச் செய்­வ­தெனப்  பொது­மக்கள் முடி­வு­செய்ய வேண்டும்.

கடந்த 71 வரு­டங்­க­ளாக மாறி­மாறி ஆட்­சிக்கு வந்­த­வர்கள் மீண்டும் நாட்டை அபி­வி­ருத்தி செய்ய எமக்கு வரம் தாருங்கள் என்று கேட்­பது பெரும் வேடிக்­கை­யாகும். ஆனால் ஸ்ரீலங்கா சு.க., ஐ.தே.க., பொ.ஜ.பெ. போன்ற எல்லாப் பிரி­வு­க­ளி­னதும் அடி­நா­தத்தை உடைத்­தெ­றிந்­துள்ள 32 அமைப்­புக்­களைக் கொண்டு எமது தேசிய மக்கள் சக்தி அமைப்பு கட்டியெழுப்பப் பட்டுள்ளது என்றார்.

ஜனாதிபதி சட்டத்தரணி லால் விஜேநாயக்க உட்பட பலர் இங்கு கருத்து வெளியிட்டனர்.-Vidivelli

  • வத்­து­காமம் நிருபர்

Leave A Reply

Your email address will not be published.