கிழக்கில் முஸ்லிம்களுக்கு இடம்கொடுக்காது பிள்ளையானை முதலமைச்சராக்க துடிக்கின்றனர்

எதிர்க்கட்சித் தலைவரை கடுமையாக சாடுகிறார் பிரதமர்

0 1,222

“கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு இடம் கிடை­யாது. நான் பிள்­ளை­யானை கிழக்கு மாகா­ணத்தின் முத­ல­மைச்­ச­ராக்கப் போகின்றேன்” என்று ராஜபக் ஷ தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்றார்.

முஸ்­லிம்­க­ளி­னாலும் முத­ல­மைச்­சரை தெரிவு செய்ய முடி­யு­மெனப் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் இளைஞர் மாநாடு நேற்று சம்­மாந்­து­றையில் அக்­கட்­சியின் தேசிய இளைஞர் அமைப்­பாளர் முஹம்மட் முஸர்ரப் தலை­மையில் நடை­பெற்­றது. அதில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே பிர­தமர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு இடம் கிடை­யாது. நான் பிள்­ளை­யானை கிழக்கு மாகா­ணத்தின் முத­ல­மைச்­ச­ராக்கப் போகின்றேன் என்று ராஜபக் ஷ தெரி­வித்துக் கொண்­டி­ருக்­கின்றார். தமிழ் மக்­க­ளுக்கு ஒரு முத­ல­மைச்சர் தேவை­யென்றால் அதனை தமிழ் மக்கள் தெரிவு செய்­யட்டும். அவர்கள் யாரும் பிள்­ளை­யானை முத­ல­மைச்­ச­ராக்­கு­வ­தற்கு விரும்­ப­வில்லை. கிழக்கு மாகா­ணத்தில் தமிழ் மக்­க­ளுக்கும் ஒரு முத­ல­மைச்­சரை தெரிவு செய்­வ­தற்கு உரிமை இருக்­கின்­றது. அது­போ­லவே முஸ்­லிம்­களுக்கும் ஒரு முத­ல­மைச்­சரை தெரிவு செய்­வ­தற்கு உரிமை இருக்­கின்­றது. சிங்­கள மக்­க­ளுக்கும் அந்த சந்­தர்ப்பம் இருக்­கின்­றது.  தமிழ், முஸ்லிம், சிங்­கள மக்கள் கிழக்கு மாகா­ணத்தில் ஒற்­று­மை­யுடன் வாழ்­வ­தனால் அந்த பணியை கிழக்கு மாகாண மக்­க­ளி­டைமே ஒப்­ப­டைக்­கின்றேன்.

கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கோ, எனக்கோ இங்கு வாக்கு கிடை­யாது. இங்கு வாக்­க­ளிக்கும் மக்கள் அதனை தீர்­மா­னிக்­கட்டும். சிங்­க­ள­வ­ராக இருந்­தாலும், தமி­ழ­ராக இருந்­தாலும், முஸ்­லி­மாக இருந்­தாலும் மிகச் சிறந்த செயற் திறன் கொண்­ட­வ­ராக அவர் இருக்க வேண்டும்.

தெற்குப் பிர­தே­சத்­திற்கு சென்று நான் தமிழ்க் கட்­சி­க­ளுடன் இர­க­சிய ஒப்­பந்தம் செய்­தி­ருக்­கிறேன் என்று. இவ்­வா­றுதான் அவர்கள் இன­வா­தத்தை பரப்பி வரு­கின்­றார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் போதும் அத­னைத்தான் அவர்கள் செய்­தார்கள். இன்னும் அதனை தொடர்ந்து முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவர்­க­ளுடன் தேசிய நல்­லி­ண­க்கத்தை ஏற்­ப­டுத்த முடி­யுமா? அர­சியல் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக தீ வைத்­தாலும் பர­வா­யில்லை என்று நினைக்கும் மனம் கொண்­ட­வர்கள் அவர்கள். ஆகவே, நாம் ஜன­நா­ய­கத்தை பாது­காத்துக் கொள்ள வேண்­டி­யுள்­ளது. இதற்­காக நீங்கள் எல்­லோரும் அன்னச் சின்­னத்­திற்கு வாக்­க­ளிக்க வேண்­டு­மென்று கேட்டுக் கொள்­கின்றேன்.

நாம் நாட்டை நவீ­ன­ம­யப்­ப­டுத்தி அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்ள வேண்டும். அந்த அடிப்­ப­டையில் கிழக்கு மாகா­ணத்­தையும் பாரி­ய­ளவில் அபி­வி­ருத்தி செய்ய வேண்­டி­யி­ருக்­கின்­றது. யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட கிழக்கு, வடக்கு மாகா­ணங்­க­ளுக்கும், மொன­ரா­கலை போன்ற பிர­தே­சங்­க­ளுக்கும் அபி­வி­ருத்­திக்­காக அதி­க­ளவு நிதி­யு­த­வி­களை வழங்­கு­மாறு நான் சர்­வ­தே­சத்தைக் கேட்டுக் கொள்­கின்றேன். கிரா­மங்­க­ளையும், வீதி­க­ளையும் அழ­கிய முறையில் அபி­வி­ருத்தி செய்ய வேண்­டி­யி­ருக்­கின்­றது. மேலும், உலர் வல­யத்தில் விவ­சா­யத்தை அபி­வி­ருத்தி செய்ய நட­வ­டிக்­கை­களை எடுக்க இருக்­கின்றோம். குறிப்­பாக நெல் உற்­பத்­தியை அதி­க­ரிப்­ப­தற்கு நட­வ­டிக்­கை­களை எடுக்க இருக்­கின்றோம். நெற்­செய்­கைக்குத் தேவை­யான இயந்­தி­ரங்­க­ளையும், ஏனைய கரு­வி­க­ளையும் கொள்­வ­னவு செய்­வ­தற்கு நாங்கள் உத­வி­களை செய்­ய­வி­ருக்­கின்றோம். கால்­ந­டை­களை விஞ்­ஞான அடிப்­ப­டையில் அபி­வி­ருத்­தி­களை செய்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­க­ளையும் நாங்கள் மேற்­கொள்ள இருக்­கின்றோம். அதன் மூல­மாக பாலுற்­பத்­தி­யையும் அதி­க­ரிப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம்.

இது மட்­டு­மன்றி அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு மாவட்­டங்­க­ளுக்கும் ஒரு முத­லீட்டு வல­யத்தை வழங்­க­வி­ருக்­கின்றோம் என்­ப­த­னையும் சொல்லிக் கொள்­கின்றேன்.

மேற்­படி துறை­களை அபி­வி­ருத்தி செய்­வதன் மூல­மாக தொழில் வாய்ப்­புக்கள் அதி­க­ரிக்கும். வியா­பா­ரமும் அதி­க­ரிக்கும். நாங்கள் இந்த நாட்­டிற்குப் புதிய பொரு­ளா­தா­ரத்­தையும் அறி­முகம் செய்ய இருக்­கின்றோம். அதா­வது, சுற்­றுலா பொரு­ளா­தா­ரத்தை மேலும் இப்­பி­ர­தே­சங்­களில் அபி­வி­ருத்தி செய்ய வேண்டும். மட்­டக்­க­ளப்பு, பலாலி விமான நிலை­யங்­களை இந்­தி­யா­வுக்கும், இலங்­கைக்கும் இடையே விமான சேவையை வழங்கும் விமான நிலை­யங்­க­ளாக மாற்­றி­ய­மைக்­கப்­படும். சென்னை –- மட்­டக்­க­ளப்பு, சென்னை – பலாலி, மட்­டக்­க­ளப்பு – கொழும்பு, பலாலி – கொழும்பு விமான சேவைகள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வி­ருக்­கின்­றன. இதற்­காக மட்­டக்­க­ளப்பு விமான நிலையம் அபி­வி­ருத்தி செய்­யப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது. இதற்­கான அனு­ம­தி­களை இந்­திய எயார் லைனும், இலங்­கையின் பிக்ஸ் எயார் லைனும் பெற்­றி­ருக்­கின்­றன. அடுத்த வரு­டத்­தி­லி­ருந்து மத்­தள விமான நிலை­யமும் செயற்­பட ஆரம்­பிக்கும்.

இதன் மூல­மாக வாகரை முதல் அரும்­கம்பை வரை ஒரு விசா­ல­மான சுற்­றுலா வல­யத்தை அமைக்க முடியும். இந்த அபிவிருத்திகள் மூலமாக இப்பிரதேசங்களில் பல அபிவிருத்திகளும், தொழில் வாய்ப்புக்களும் ஏற்படும்.

மட்டக்களப்பு, கல்முனை. சம்மாந்துறை பிரதேசங்களில் தகவல் பயிற்சி முகாம்களையும் அமைக்க இருக்கின்றோம். இவ்வாறு பல துறைகளையும் அபிவிருத்தி செய்து இப்பிரதேங்களில் தொழில் வாய்ப்புக்களை அதிகரிப்பதுதான் எங்களின் அபிவிருத்தி வேலைத் திட்டமாகும் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் இணைந்து சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம். என்றார்.-Vidivelli

  • நிந்­தவூர் நிருபர்

Leave A Reply

Your email address will not be published.