இன­வா­தத்தை தோற்­க­டிப்­ப­தாக நமது வாக்­குகள் அமைய வேண்டும்

0 122

“நாட்டின் எதிர்­காலம் இன்று  அனை­வ­ரது கைக­ளி­லுமே உள்­ளது. நாட்டில் மீண்டும் இனங்­க­ளுக்­கி­டையில்  முரண்­பா­டுகள் தோற்றம் பெறக் கூடாது. அர­சியல் தலை­வர்கள் முழு­மை­யாக இன­வா­தத்­தி­லி­ருந்து விடு­பட வேண்டும்” என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்­துள்ளார்.

நேற்று முன்­தினம் கொழும்பில் நடை­பெற்ற சுதந்­திரக் கட்­சியை பாது­காக்கும் அமைப்பின் சம்­மே­ள­னத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அதே­போன்­றுதான் ஏப்ரல் 21 தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய முஸ்லிம் இளை­ஞர்கள் ஏன் இவ்­வா­றா­ன­தொரு கடி­ன­மான பாதையை தேர்ந்­தெ­டுத்­தார்கள் என்­ப­தற்­கான கார­ணத்­தையும் அவர் தனது உரையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

” ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­தாக  கைது செய்­யப்­பட்­டுள்ள  முஸ்லிம் இளை­ஞர்கள் குறிப்­பிட்­டுள்ள கருத்­துக்கள், அவர்கள் உள­வியல் ரீதியில் பாதிப்­ப­டைந்­துள்ள மையி­னையும், கடந்த அர­சாங்­கத்தின் முறை­யற்ற செயற்­பா­டு­க­ளையும்  வெளிப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது.

அதா­வது 2014 ஆம் ஆண்டு நாட்டில் இடம்­பெற்ற  முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ரான கல­வரம் எம்மை பெரிதும் பாதித்­தது. தற்­கொலை குண்­டு­தா­ரி­யாக மாறி­யேனும் உரி­மை­களை வென்­றெ­டுக்க தீர்­மா­னித்தோம் என்று அவர்கள் குறிப்­பிட்­டுள்­ள­மைக்கு கடந்த அர­சாங்­கமே பொறுப்பு கூற வேண்டும். 2015 ஆம் ஆண்­டுக்கு பிறகும்  இனக்­க­ல­வ­ரங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­மை­யா­னது அர­சியல் அதி­கா­ரத்தை பெற்றுக் கொள்ள ஒரு தரப்­பினர்  இட்ட ஆரம்ப அடித்­தளம் என்றே கருத வேண்டும். நாட்டில் இன வன்­மு­றை­க­ளற்ற சமூகம் தோற்றம் பெற வேண்டும் என்­பதே அனை­வ­ரதும் எதிர்­பார்ப்­பா­க­வுள்­ளது” என்றும் அவர் தன­து­ரையில் மேலும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

முன்னாள் ஜனா­தி­ப­தியின் இந்த இரு கருத்­துக்­களும் கவ­னிப்­புக்­கு­ரி­ய­தாகும்.

நாட்டின் எதிர்­கா­லத்தை அர­சி­யல்­வா­தி­களின் கைகளில் மாத்­திரம் நாம் ஒப்­ப­டைத்­து­விட முடி­யாது. மாறாக நம் அனை­வ­ருக்கும் அதில் பொறுப்­புள்­ளது. அந்த பொறுப்பை சரி­வர நிறை­வேற்­று­வ­தற்­கான காலமே இது­வாகும். எதிர்­வ­ர­வுள்ள ஜனா­தி­பதி தேர்­தலில் நாம் அளிக்­க­வுள்ள வாக்­குகள் ஒவ்­வொன்­றுமே நமது அந்தப் பொறுப்பை சரி­வர நிறை­வேற்­று­வ­தாக அமைய வேண்டும்.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க குறிப்­பிட்ட அடுத்த விட­யம்தான் முஸ்லிம் இளை­ஞர்கள் தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளாக மாறி­ய­மைக்­கான கார­ணி­யாகும். 2014 அளுத்­கம சம்­பவம் முதல் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்க்­கப்­பட்ட வன்­மு­றை­களை தடுத்து நிறுத்­தவும் முஸ்லிம் சமூ­கத்­திற்கு உரிய பாது­காப்பை வழங்­கவும் ஆட்­சி­யி­லி­ருந்த அர­சாங்­கங்கள் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. இதுவே முஸ்லிம் இளை­ஞர்­களில் ஒரு­சா­ராரை தீவி­ர­வாத த்தின்பால் தள்­ளி­யது. சில தீய சக்­திகள் அவ்­வி­ளை­ஞர்­களை மூளைச்­ச­லவை செய்து குண்­டு­களை கொடுத்து ஏப்ரல் 21 அவ­லத்தை அரங்­கேற்­றினர்.

ஆக, அர­சாங்­கங்­களின் செயற்­றி­ற­னின்­மையும் அர­சி­யல்­வா­திகள் மத்­தியில் குடி­கொண்­டுள்ள இன­வா­தமும் இந்த நாட்­டுக்கு பெரும் சாபக்­கே­டாகும். இதுவே சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்­தியில் இனக்­கு­ரோ­தங்கள் வளரக் கார­ண­மாக அமைந்­துள்­ளது. இந்த அபா­யத்­தி­லி­ருந்து நாட்டை விடு­விக்க வேண்­டி­யதே புதி­தாக தெரிவு செய்­யப்­ப­ட­வுள்ள ஜனா­தி­பதி முன்­னுள்ள பாரிய சவா­லாகும்.

இந்த நாட்டில் தற்­போ­துள்­ள­வர்­களில் இன­வாத முத்­திரை குத்­தப்­ப­டாத ஒரு சிரேஷ்ட தலைவர் என்ற வகையில் சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் மேற்­படி கருத்­துக்­களை, அவ­ரது அர­சியல் நிலைப்பாடுகளுக்கப்பால் சகல தரப்புகளின் அரசியல்வாதிகளும் கவனத்திற் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அதுமாத்திரமன்றி எதிர்வரவுள்ள தேர்தலில் மக்கள் தமது கடமையை சரிவரச் செய்ய வேண்டும். நமது வாக்குகள் இனவாத சக்திகளை பலப்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது. இந்த நாட்டில் இதன் பின்னரும் இன வன்முறைகள் இடம்பெறாதவாறு உறுதிப்படுத்துவதற்கான வாக்குகளாக நமது வாக்குகள் அமைய வேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.