பாதிக்கப்பட்ட பள்ளி தொடர்பில் ஹிஸ்புல்லாஹ் பொய் குற்றச்சாட்டு

முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம் தெரிவிப்பு

0 471

ஜனா­தி­பதி வேட்­பாளர் ஹிஸ்­புல்லாஹ் திகன கல­வ­ரத்தில் பாதிக்­கப்­பட்ட பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்­பாக பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து தேர்தல் பிர­சா­ரத்தை மேற்­கொண்டு வரு­கின்றார்.

 

இது அர­சி­ய­லுக்­காக தம்மை ஹீரோ­வாகக் காட்ட முனையும் செயற்­பா­டாகும். பள்­ளி­வாசல் ஒன்றை கட்ட வரும்­போது  அதைத்­த­டுப்­ப­தற்கு எந்­த­வொரு முஸ்­லிமும் தடை­யாக இருக்க மாட்­டார்கள் என்று முஸ்லிம் சமய விவ­காரம் மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரி­வித்தார்அவர் தொடர்ந்து கருத்து தெரி­விக்­கையில்,ஹிஸ்­புல்­லாஹ திகன பள்­ளி­வா­சலைக் கட்­டு­வ­தற்கு முன்­வந்­துள்­ள­தாக பள்­ளி­வா­சல்கள் நிரு­வா­கிகள் தெரி­வித்­தார்கள். அப்­படி கட்­டு­வ­தற்கு முன்­வந்­த­வ­ருக்கு நான் மறுப்புத் தெரி­விக்க வில்லை. ஒருவர் பள்­ளியைக் கட்ட முடி­யு­மாக இருந்தால் அதை நான் ஒரு பாக்­கி­ய­மா­கவே கரு­து­கிறேன். நானாக இருக்­கலாம் அல்­லது நண்பர் ஹிஸ்­புல்­லாஹ்­வாக இருக்­கலாம். அல்­லது வேறு ஒரு­வ­ராக இருக்­கலாம். அப்­படி ஒருவர் பள்­ளியைக் கட்ட வரும்­போது அதைத் தடை செய்­வ­தற்கு, நிறுத்­து­வ­தற்கு நான் மட்­டு­மல்ல, எந்­த­வொரு முஸ்­லிமும் செயற்­பட மட்­டார்கள். ஆகவே, இது ஒரு பொய்­யான குற்­றச்­சாட்­டாகும்.  அவர் திகன பள்­ளி­வா­சலை கட்­ட­வந்­த­தா­கவும் அதை நான் தடுத்து நிறுத்­தி­ய­தா­கவும் கூறி­யி­ருந்தார். உண்­மை­யி­லேயே இது ஒரு பொய்க்­குற்­றச்­சாட்டு. அந்தப் பள்ளி நிரு­வாகம் இருக்­கின்­றது.

 

பள்ளி நிரு­வா­கத்தின் மூலம் அறிந்­து­கொள்ள முடியும். இந்தப் பள்­ளியை ஹிஸ்­புல்லாஹ் கட்­டு­வ­தாக இருந்தால் தாரா­ள­மாகக் கட்­டலாம். இந்தப் பாதிப்பின் மூலம் ஏனைய மக்­க­ளுக்கும்  ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்ற வகையில் அர­சாங்­கத்­திலும் இதற்­கான நஷ்­ட­யீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்­டு­மென்ற எதிர்­பார்ப்பு எனக்­கி­ருந்­தது.இந்தப் பள்­ளி­வா­ச­லுக்கு ஒதுக்­கீடு செய்­யப்­பட்ட நிதி போதாது.  மேலும் அதி­க­ரித்துத் தர­வேண்­டு­மென்று அமைச்­ச­ரவைக் குழுக கூட்­டத்தில் எல்லா முஸ்லிம் அமைச்­சர்­களும் ஏகோ­பித்த குரலில்கருத்­தினை முன்­வைத்­தி­ருந்தோம். இந்த வன்­முறைச் சம்­ப­வத்தின் மூலம் பாதிக்­கப்­பட்ட திகன, கண்டி மக்­க­ளுக்கு 8 கோடி ரூபா பெறு­ம­தி­யான நஷ்­ட­யீடு வழங்­கப்­பட்­டுள்­ளது. வீடுகள், வர்த்­தக நிலை­யங்கள் பாதிக்­கப்­பட்ட மக்கள் பெற்றுக் கொண்­டுள்­ளார்கள். இந்த நஷ்­டயீடு படிப்­ப­டி­யாக மூன்று கட்டங்களில்  வழங்கப்பட்டுள்ளன. இது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. எல்லா மக்களும் சந்தோசப்படுமளவுக்கு நஷ்டயீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹலீம் மேலும் தெரிவித்தார்.-Vidivelli

  • இக்பால் அலி

Leave A Reply

Your email address will not be published.