சுதந்­திரக் கட்­சியை அழிக்கும் மஹிந்தவின் திட்டத்தை தொடர்கிறார் மைத்திரி

சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க குற்­றச்­சாட்டு சஜித்தின் கொள்கை திட்டம் சிறப்­பா­னது என்றும் சுட்­டிக்­காட்டு

0 601

இரு பிர­தான வேட்­பா­ளர்­க­ளி­னதும் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை பரிசீலிக்கும் போது புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித்தின் கொள்கை திட்டம் சிறப்­பா­னது. ஆனால் தனி நபர் பா­து­காப்பு மற்றும் சுதந்­திரம் தொடர்­பான கோத்தா­ப­யவின் கொள்­கைகள் நகைப்­பிற்­கு­ரி­ய­தாகும் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்தார்.

 

7 தடவை கட்சி தாவி­யவர் எமக்­கெ­தி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­ப­தாக கூறு­கின்றார். அதனை எதிர்­கொள்ள தயா­ராகவே உள்ளேன். சு.க. வை திட்­ட­மிட்டு மஹிந்த ராஜ­பக் ஷ அழிக்க முயற்­சிக்­கையில் அதற்கு சாத­மான சூழலை 2015 ஆம் ஆண்­டிற்கு பின்னர் மைத்­திரி ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்தார். மொட்­டுடன் கூட்­ட­ணி­ய­மைத்­தமை கட்­சியில் ஏக­ம­ன­தாக எடுக்­கப்­பட்ட தீர்­மா­ன­மல்ல எனவும் குறிப்­பிட்டார்.

 

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை பாது­காக்கும் அமைப்பின் மாநாடு நேற்று செவ்­வாய்க்­கி­ழமை சுக­த­தாச உள்­ளக அரங்கில் இடம்­பெற்­றது. இதன்போதே சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

 

அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

 

நாடு அர­சியல் ரீதி­யிலும்,  பொது மக்­களின்  வாழ்­வியல் ரீதி­யிலும் தீர்­மா­னங்­களை முன்­னெ­டுக்கும் தீர்க்­க­மாக தரு­ணத்தில் தற்­போது உள்­ளது.  இரண்டு பிர­தான ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் வெளி­யிட்­டுள்ள தேர்தல் கொள்கை பிர­க­ட­னத்தில்  பல்­வேறு விட­யங்கள் குறித்து ஆராய்ந்­துள்ளேன்.  பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ  வெளி­யிட்­டுள்ள தேர்தல் கொள்கை பிர­க­ட­னத்தில் மனித உரி­மை­க­ளுக்கும்,  மக்­களின் சுதந்­தி­ரத்­திற்கும் பாது­காப்பு வழங்­கு­வ­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளமை பெரும் நகைப்­பிற்­கு­ரி­ய­தாக காணப்­ப­டு­கின்­றது.

 

10வருட கால குடும்ப ஆட்­சியில் மனித உரி­மை­களும்,  மக்­களின் பாது­காப்பும் எவ்­வாறு காணப்­பட்­டது என்­பதை நாட்டு மக்கள் இன்றும் மறக்­க­வில்லை. சிலர் தங்­களின் சுய நல அர­சியல்  தேவை­க­ளுக்­காக இன்று  பக்­கச்­சார்­பாக செயற்­ப­டு­கின்­றார்கள். கோத்­தா­பய ராஜ­பக் ஷ  எவ்­வாறு மனித உரி­மை­க­ளையும், பொது மக்­களின் சுதந்­தி­ரத்­தி­னையும் பாது­காப்பார் என்­பதை முறை­யாக குறிப்­பிட வேண்டும். தேசிய நிதி மோச­டிக்கும், முறை­யற்ற அரச நிர்­வா­கத்­திற்கும்  கடந்த அர­சாங்­கமே துணை போ­யுள்­ளது.

 

 ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் நிலைமை

 

வர­லாற்று  பாரம்­ப­ரிய  பின்­ன­ணியை கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியை  2015ம் ஆண்­டுக்கு பிறகு தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவும், பொதுச்­செ­ய­லாளர் தயா­சிறி ஜய­சே­க­ர­வுமே இல்­லா­தொ­ழித்­தார்கள். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி பத­விக்கு தான் மீண்டும் தெரிவு செய்­யப்­பட வேண்டும் என்ற குறு­கிய தேவை­க­ளுக்­காக தேசிய  அர­சாங்­கத்தில் இருந்து  வெளி­யேறி கட்­சிக்கு மீண்டும். பாரிய நெருக்­க­டி­யி­னையும், அவ­ப்பெ­ய­ரி­னையும் ஏற்­ப­டுத்­தினார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  சுதந்­திர கட்­சியை மாத்­தி­ர­மன்றி ஒட்­டு­மொத்த அரச செய­லொ­ழுங்­கி­னை­யும் மோசடி செய்தார்.

 

மறு­புறம் 7 முறை ஒவ்­வொரு கட்­சி­களிலிருந்து கட்சி தாவ­லினை மேற்­கொண்டு தற்­போது சுதந்­திர கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ள­ராக செயற்­படும் தயா­சிறி  ஜய­சே­க­ரவின் முறை­யற்ற செயற்­பா­டு­க­ளினால் கட்சி முழு­மை­யாக இல்­லா­தொ­ழிக்­கப்­பட்­டுள்­ளது.

 

எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ 03 முறை அர­சியல் சூழ்ச்­சி­யினால் ஸ்ரீ  லங்கா சுதந்­திர கட்­சியை  பல­வீ­னப்­ப­டுத்­தினார் தற்­போது பொது­ஜன பெர­முன என்ற கட்­சியை உரு­வாக்கி சுதந்­திர கட்­சியை இன்று ஒரு பாரிய நெருக்­க­டிக்குள் தள்­ளி­யள்ளார். இதற்கு சுதந்­திர கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பல­வீ­னமே பிர­தான காரணம். சுதந்­திர கட்­சியின் ஆலோ­ச­க­ராக பெய­ர­ள­விலே நிய­மிக்­கப்­பட்டேன். தற்­போது  கட்­சியை முழு­மை­யாக  ஜனா­தி­ப­தியும், பொதுச்­செ­ய­லா­ளரும்  இல்­லா­தொ­ழித்து விட்டு சுதந்­திர கட்­சியின் தலைவர் ஏதும் அறி­யா­தவர் போல் சுதந்­திர கட்­சிக்கு பதில் தலைவர் ஒரு­வரை  நிய­மித்து விட்டு ஓய்­வெ­டுத்துக் கொள்­கின்றார். சுதந்­திர கட்­சியில் பதில்­த­லைவர் என்ற பத­வியே கிடை­யாது.  கட்­சியின் அர­சி­ய­ல­மைப்­பிற்கு முர­ணா­கவே ஜனா­தி­பதி பதில் தலை­வரை நிய­மித்­துள்ளார்.

 

ஜனா­தி­ப­தியின் முறை­யற்ற செயற்­பா­டு­க­ளினால்  சுதந்­திர கட்சி இன்று பல­வீ­ன­ம­டைந்­துள்­ளது.  பொது­ஜன பெர­மு­ன­வுடன் இவர்கள் கூட்­ட­ணி­ய­மைத்­துள்­ளது கூட சட்­டத்­திற்கும், கட்­சியின் கொள்­கைக்கும் முர­ணா­ன­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. பாதிக்­கப்­பட்­டுள்ள சுதந்­திர கட்­சியின் உறுப்­பி­னர்­களை பாது­காக்க வேண்­டிய தேவை காணப்­ப­டு­கின்­றது. அதன் கார­ண­மா­கவே சுதந்­திர கட்­சியை பாது­காக்கும் போராட்­டத்­தினை முன்­னெ­டுத்­துள்ளேன்.

 

2015ஆம் ஆண்டு தேசிய அர­சாங்­கத்தில் சுதந்­திர கட்சி இணைந்­த­மையே  கட்­சியை பல­வீ­னப்­ப­டுத்­தி­யது என்று குறிப்­பி­டு­வது முற்­றிலும் தவ­றா­ன­தாகும். 2015ம் ஆண்டில் இருந்து இன்று வரை ஐக்­கிய தேசிய கட்சி சுதந்­திரக் கட்­சியை இல்­லா­தொ­ழிக்கும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வில்லை. இதனை எவ்­வித்­திலும் ஆதா­ர­பூ­ர­்வ­மாக  குறிப்­பி­டுவேன். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே கட்­சியை பல­வீ­னப்­ப­டுத்­தினார். பல­வீ­னத்தை எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ முறை­யாக பயன்­ப­டுத்திக் கொண்டார்

 

 ஒழுக்­காற்று  நட­வ­டிக்கை

 

எனக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சுதந்­திர கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளுக்கும் எதி­ராக சுதந்­திர கட்­சியின் தலைவர் அல்ல பொதுச்­செ­ய­லா­ள­ருக்கு கூட ஒழுக்­காற்று நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடி­யாது. ஒரு­வேளை ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மாயின் அதனை சட்­டத்தின் ஊடா­கவே வெற்றி கொள்வேன் ஒரு­போதும் குறுக்கு வழியில் செல்­ல­மாட்டேன்.

 

அர­சியல் கொள்கை

 

அர­சியல் கொள்­கை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு  40 வரு­டத்­திற்கும் அதி­க­மான காலம் அர­சி­யலில் செல்­வாக்கு செலுத்­து­கின்றேன். இரண்டு பிர­தான ஜன­நா­யக கொள்­கை­யினை கொண்ட அர­சியல் கட்­சிகள் கூட்­ட­ணியின் ஊடாக  ஒன்­றிணைந்து செயற்­பட வேண்டும் என்ற நோக்கம் ஆரம்ப காலத்தில் இருந்து காணப்­ப­டு­கின்­றது. நான் ஜனா­தி­ப­தி­யாக இருக்கும் காலத்தில் அதற்­கான முயற்­சி­களை ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் முன்­னெ­டுத்தேன் ஆனால் அவை தோல்­வியில் முடிந்­தது.

 

2015 ஆம் ஆண்டு  குடும்ப ஆட்­சி­யினை இல்­லா­தொ­ழித்து ஜன­நா­ய­கத்­திற்கு மதிப்பு கொடுக்கும் அர­சாங்கம் தோற்றம் பெற வேண்டும் என்ற குரல் எழும்­பி­யது. தனித்து குடும்ப ஆட்­சி­யினை இல்­லா­தொ­ழிக்க முடி­யாது. ஆகையால் கூட்­ட­ணி­ய­மைத்து தேசிய அர­சாங்­கத்­தினை தோற்­று­விப்போம் என்று தீர்­மா­னிக்­க­ப்பட்­ட­தற்கு அமைய சுதந்­திர கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ள­ராக செயற்­பட்ட மைத்­தி­ரி­பால  சிறி­சே­னவை ஜனா­தி­ப­தி­யாக்­கினோம்.

 

ஐக்­கிய தேசிய கட்­சியும் ஜன­நா­ய­கத்­திற்கு முன்­னு­ரிமை கொடுத்­தாலும் பல விட­யங்­களில் தவ­றி­ழைத்­துள்­ளது அதற்கு  பல அர­சியல் கார­ணிகள்  செல்­வாக்கு செலுத்­தி­ன. கொள்­கை­யினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு கூட்­ட­ணிய­மைக்­கப்­பட்ட தேசிய அர­சாங்­கத்­தினை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே  தனது சுய­நல அர­சி­ய­லுக்­காக இல்­லா­தொ­ழித்தார். 2015 ஆம் ஆண்டு இவரை பொது­வேட்­பா­ள­ராக நிய­மிக்க பரிந்­து­ரைத்­தமைக்கு இன்று நான்  வருந்­து­கின்றேன்.

 

புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச வெளி­யிட்­டுள்ள கொள்கை பிர­க­டனம் ஏற்றுக் கொள்ளக் கூடி­யது. தேசிய பொரு­ளா­தா­ரத்­தி­னையும், தேசிய நல்­லி­ணக்­கத்­தி­னையும் எவ்­வாறு மேம்­ப­டுத்­து­வது என்­பது தொடர்பில் தெளி­வுற குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதன் கார­ண­மா­கவும், சுதந்­திர கட்­சியை பாது­காக்கும் நோக்­கிலும் புரிந்­து­ணர்வு  ஒப்­பந்தம் ஊடாக ஆத­ரவு வழங்­கி­யுள்ளேன். ஒப்­பந்த பத்­தி­ரங்­களில் ஒரு­போதும்  அரச நிர்­வாகம் தனித்து செயற்­பட முடி­யாது என்று குறிப்­பிட்­டுள்­ளமை அனை­வ­ரது உரி­மை­க­ளுக்கும், கருத்­துக்­க­ளுக்கும் முன்­னு­ரிமை கொடுப்­ப­தாக அமை­கின்­றது.

 

எதிர் தரப்பின் கொள்கை திட்டம் நகைப்­பிற்­கு­ரி­யது கடந்த  அர­சாங்­கத்­திலே தேசிய நிதி மோசடி, ஜன­நா­ய­கத்­திற்கு எதி­ரான செயற்­பா­டுகள் அனைத்தும் பகி­ரங்­க­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டன. மஹிந்த ராஜ­பக் ஷவின் ஆட்சி  காலத்­திலே  மந்த போச­னையால் பாதிக்­க­ப்பட்­ட­வர்­களின் வீதம் அதி­க­ரித்தது. அத்­துடன் கல்வி நிலை­மையும் வீழ்ச்­சி­ய­டைந்­தது. மத்­திய வங்­கியின் பிணை­முறி மோசடி ஐக்­கிய தேசிய கட்­சியால் இடம் பெற்­றது என்­பதை மறுக்க முடி­யாது. குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­பட வேண்டும். ஆனால் இதை விட பல மடங்கு தேசிய நிதி மஹிந்த ராஜ­பக் ஷவின் ஆட்­சி­கா­லத்தில் இடம் பெற்­றுள்­ளது.

 

அதை பற்றி அர­சியல் மேடை­களில் எவரும் கருத்­து­ரைப்­பது இல்லை. அதி­காரம் இல்­லாமல் அரச நிதி­யினை மோசடி செய்ய முடி­யாது என்­பதை அறிந்தே மஹிந்த தரப்பு போரா­டு­கின்­றார்கள். அதற்கு இன்று சுதந்­திர கட்­சியின் ஒரு தரப்­பினர் ஒத்­து­ழைப்பு வழங்­கு­கின்­றார்கள். கட்­சிக்கு இழுக்­கி­னையே இவர்கள் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளார்கள்.

 

தனிப்­பட்ட பகைமை

 

மஹிந்த ராஜ­பக் ஷ மற்றும் அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்கள் மீது உள்ள தனிப்­பட்ட பகைமை கார­ண­மா­கவே தற்­போது அர­சி­யலில் அவர்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டு­வ­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான தயா­சிறி ஜய­சே­கர, டலஸ் அழ­கப்­பெ­ரும ஆகியோர் குறிப்­பிட்டுக் கொள்­கின்­றார்கள் இவ்­வி­டயம் தொடர்பில் தெளி­வு­ப­டுத்த வேண்டும்.

 

மஹிந்த ராஜ­பக் ஷவின் குடும்­பத்தின் மீது கடும் கோபமும், பகை­மையும் உண்டு அது எனது தனிப்­பட்ட விட­ய­மா­கும். எனது குடும்­பத்­தி­னையும், கட்­சி­யையும், நாட்­டையும் இல்­லா­தொ­ழித்­த­மைக்கு  ஆனால்  தனிப்­பட்ட பகை­மை­யினை  ஒரு­போதும் அர­சி­யலில் செலுத்­த­வில்லை. அதி­காரம் கைக்கு வந்­த­வுடன் மஹிந்த ராஜ­பக் ஷவே பழி­வாங்­க­லினை மேற்­கொண்டார். விடு­தலை புலிகள் அமைப்பின் தலைவர் பிர­பா­கரன் என்னை கொல்­வ­தாக அறிக்கை விட்­டதை தொடர்ந்து எமது பாது­காப்­பினை பலப்­ப­டுத்­து­மாறு  பாது­காப்பு சபை பல­முறை  குறிப்­பிட்டும் எவ்­வித நட­வ­டிக்­கை­க­ளையும் முன்னாள்  பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ முன்­னெ­டுக்­க­வில்லை. 300ஆக இருந்த பாது­காப்பு தரப்­பினர் 150 ஆக குறைக்­கப்­பட்­டார்கள். பின்னர் தொடர்ந்து 20ஆக குறைக்­கப்­பட்டு முழு­மை­யா­கவே பாது­காப்பு இல்­லா­தொ­ழிக்­கப்­பட்­டது. இதனை சர்­வ­தேச நாடு­க­ளுக்கு  தெரியப்படுத்­தியே எனது பாது­காப்­பினை மீண்டும் பலப்­ப­டுத்திக் கொண்டேன்.

 

2015 ஆம் ஆண்டு ஆட்­சி­ய­தி­காரம் என்­னிடம் இல்­லாமல் இருந்­தது ஆனால் அதி­காரம் செலுத்தும் பலம் காணப்­பட்­டது. ஆனால் அதனை நான் ஒரு­போதும்  தனிப்­பட்ட பகை­மைக்­காக பயன்­ப­டுத்திக்  கொள்­ள­வில்லை. தற்­போதும் கோத்­த­ாபய ராஜ­பக் ஷவின் பாது­காப்­பிற்கு 400 பாது­கா­வ­லர்கள் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­கின்­றார்கள். ஆனால் அவரே தேசிய பாது­காப்­பினை பலப்­ப­டுத்­து­வ­தாக குறிப்­பிட்டுக் கொள்­கின்றார்.

 

தற்­போது  மஹிந்த ராஜ­பக் ஷவின் குடும்­பத்தின் மீது பகைமை கொள்­வ­தற்கு எவ்­வித அடிப்­படை கார­ணி­களும் கிடை­யாது. என்னை விடவும், எனது பிள்­ளை­களை விடவும் கல்வி அறிவில் தேர்ச்சி  பெற்­ற­வர்கள் எவரும் அவ­ரது குடும்­பத்தில் கிடை­யாது. ஆகவே அடிப்படை  காரணிகள் இல்லை பகைமை கொள்வதற்கு.

 

நாட்டின் எதிர்காலம் இன்று  அனைவரது கையிலும் உள்ளது நாட்டில் மீண்டும் இனங்களுக்கிடையில்  முரண்பாடுகள் தோற்றம் பெறக் கூடாது. இனவாதம் முழுமையாக அரசியல் தலைவர்களின் மத்தியில் இருந்து விடுபட வேண்டும்.

 

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையதாக  கைது செய்யப்பட்டுள்ள  முஸ்லிம் இளைஞர்கள் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் உளவியல் ரீதியில் பாதிப்படைந்துள்ள மையினையும், கடந்த அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளையும்  வெளிப்படுத்தியுள்ளது.

 

அதா­வது 2013 ஆம் ஆண்டு நாட்டில் இடம் பெற்ற  முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ரான இனக்­க­ல­வரம் எம்மை பெரிதும் பாதித்­தது. தற்­கொலை குண்­டு­தா­ரி­யா­கி­யா­வது உரி­மை­களை வென்­றெ­டுக்க தீர்­மா­னித்தோம் என்று அவர்கள் குறிப்­பிட்­டுள்­ள­மைக்கு கடந்த அர­சாங்­கமே பொறுப்பு கூற வேண்டும். 2015 ஆம் ஆண்­டுக்கு பிறகும்  இனக்­க­ல­வ­ரங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது அது அர­சியல் அதி­கா­ரத்தை பெற்றுக் கொள்ள ஒரு தரப்­பினர்  இட்ட ஆரம்ப அடித்­தளம் என்றே கருத வேண்டும். நாட்டில் இன­ வன்­மு­றை­யற்ற சமூகம் தோற்றம் பெற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது. பாரிய போராட்டத்தின் மத்தியில் குடும்ப  ஆட்சியில் இருந்து வென்றெடுத்த ஜனநாயகம் மீண்டும் அழிவடைவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.