ஏப்ரில் 21 குண்டுத்தாக்குதல்: குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவர்

சிலாபத்தில் கோத்தாபய ராஜபக் ஷ திட்டவட்டம்

0 70

ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­குதல் சுயா­தீன ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்டு குற்­ற­வா­ளி­க­ளாகக் கரு­தப்­ப­டு­ப­வர்கள் எவ்­வித பார­பட்­ச­மு­மின்றி தண்­டிக்­கப்­ப­டு­வார்கள். தேசிய    பாது­காப்பை என்னால் மாத்­தி­ரமே மீண்டும் பலப்­ப­டுத்த முடி­யு­மென பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ தெரி­வித்தார்.

சிலாபம் நகரில் நேற்று இடம்­பெற்ற    பொது­ஜன பெர­மு­னவின் தேர்தல் பிர­சார கூட்­டத்தில் கலந்­து­கொண்டு கருத்­து­ரைக்­கை­யிலே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அர­சி­யல்­வா­தி­களின் தேவை­க­ளுக்­கா­கவும், சர்­வ­தேச அமைப்­பு­களி கோரிக் ­கை­க­ளுக்­கா­கவும் புல­னாய்வுப்  பிரி­வினர் பயன்­ப­டுத்திக் கொள்­ளப்­பட்­டனர். இதன் விளைவு தேசிய பாது­காப்பு இன்று பல­வீ­ன­மா­கி­யுள்­ளது. தேவை­யற்ற விட­யங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்கும் அமைச்­ச­ர­வை­யினால் மக்­களின் பாது­காப்­பினை பலப்­ப­டுத்த முடி­யாது.

30வருட  கால சிவில் யுத்­தத்தை இரா­ணுவ மார்க்­கத்தின் ஊடாக இல்­லா­தொ­ழிக்க முடி­யாது என்று சர்­வ­தேச நாடு­க­ளும் அமைப்­புக்­களும், உள்ளூர் தரப்­பி­னரும் குறிப்­பிட்­டார்கள். அனை­வ­ரது கருத்­துக்­க­ளையும் குறு­கிய காலத்­திற்குள் முடி­விற்கு கொண்­டு­வந்து அவர்­களின் கருத்­துக்­களை பொய்­யாக்­கினோம். இன்றும் தேசிய பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யாக்கப்­பட்­டுள்­ளது. யுத்­தத்தை வெற்­றி­கொண்ட என்னால் மாத்­தி­ரமே தேசிய பாது­காப்­பினை பலப்­ப­டுத்த முடியும்.தேசிய  பொரு­ளா­தா­ரத்தை  மேம்­ப­டுத்தும் திட்­டங்கள்  எமது தேர்தல்  கொள்கை பிர­க­ட­னத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. அனைத்து திட்­டங்­களும்  பத­விக்­கா­லத்தில் முழு­மை­யாக  செயற்­ப­டுத்­தப்­படும். தேசிய  உற்­பத்­தி­களை   வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான செயற்­றிட்­டங்கள் துறைசார் நிபு­ணர்­களின் ஊடாக வகுக்­கப்­பட்­டுள்­ளன.

கிரா­மிய அபி­வி­ருத்­தி­க­ளுக்­கான   நவீன திட்­டங்­களும் தொழில்­துறை விருத்தி, ஏழ்மை இல்­லா­தொ­ழிப்பு  மற்றும் சுகா­தாரப் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வும்  செயற்படுத்தப்படும். அரசியல் தேவைகளுக்கு அப்பாற்பட்டு  அனைவருக்கும் பொதுவான  அபிவிருத்தி திட்டங்கள்  கொள்கை   திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந் துள்ளவர்களுக்கு  நிவாரணம் வழங்கப்படும்.-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.