அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு

0 1,018

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீ­முக்கு எதி­ராக காத்­தான்­குடி நகர சபையின் முன்னாள் உறுப்­பி­னரும் பொது ஜன பெர­முன கட்­சியின் காத்­தான்­குடி செயற்­பாட்­டா­ள­ரு­மான எம்.எஸ்.எம்.சியாத் நேற்று முன்­தினம் முறைப்­பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார்.

 

2015 ஆம் ஆண்டு ஸஹ்­ரானின் தம்­பியை மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் அமைச்சர் ஹக்­கீ­முடன் தானும் பார்­வை­யி­டு­வது போன்ற புகைப்­ப­ட­மொன்று ஊட­கங்­களில் வெளி­வந்­தது. இதன் போது நான் பொது ஜன பெர­முன ஆத­ர­வா­ள­ராக அங்கு ஸஹ்­ரானின் தம்­பியை பார்­வை­யிடச் சென்­ற­தாக அமைச்சர் ஹக்கீம் தேர்தல் பிர­சார மேடை­களில் பேசி வரு­கின்றார். இவ­ரது இந்தக் கருத்­துக்­கெ­தி­ரா­கவே காத்­தான்­குடி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­டொன்றை செய்­த­தாக காத்­தான்­குடி நகர சபையின் முன்னாள் உறுப்­பி­னரும் பொது ஜன பெர­முன கட்­சியின் காத்­தான்­குடி செயற்­பாட்­டா­ள­ரு­மான எம்.எஸ்.எம்.சியாத் தெரி­வித்தார்.

 

2015 ஆம் ஆண்டு இடம் பெற்ற பொதுத் தேர்­தலின் போது நான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸுக்கே ஆத­ரவு வழங்­கினேன். அப்­போது அந்த தேர்­தலின் பின்னர் ஏற்­பட்ட தேர்தல் வன்­மு­றை­க­ளை­ய­டுத்து பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்­தார்கள். அவர்­களைப் பார்க்கச் சென்ற போது ஸஹ்­ரானின் தம்­பியும் அங்கு இருந்தார். இந்தப் புகைப்­ப­டத்தில் நானும் காணப்­ப­டு­வதால் நான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸ்­காரர் இல்­லை­யெ­னவும் பொது ஜன­பெ­ர­முன கட்­சியின் ஆத­ர­வாளர் எனவும் என்னை அமைச்சர் ஹக்­கீ­முக்கு தெரி­யாது எனவும் அமைச்சர் ஹக்கீம் தேர்தல் மேடை­களில் பேசி­யுள்ளார். எனக்கு இவரின் கருத்­தினால் பாரிய பாதிப்­புக்கள் ஏற்­பட்­டுள்­ளன. எனது கௌர­வத்­துக்கும் அப­கீர்த்தி ஏற்­பட்­டுள்­ளது. தற்­போது நான் சார்ந்­துள்ள பொது ஜன பெர­முன கட்­சிக்கும் அமைச்சர் ஹக்கீம் என்னைக் காட்டி அப­கீர்த்­தியை ஏற்படுத்த முனைகின்றார். இதைக் கண்டித்தே தான் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.-Vidivelli

  • எம்.எஸ்.எம்.நூர்தீன்

Leave A Reply

Your email address will not be published.