தோ்தல் களம் இன, மத நல்­லு­ற­வுக்­கான ஆரம்ப தள­மாகப் பிர­யோ­கிக்கப்பட வேண்டும்

தேசிய ஷூரா சபை தெரி­விப்பு

0 502

சமூக ஒற்­றுமை பாதிப்­ப­டை­யாத வகையில் இந்தத் தேர்தல் களம் இன, மத நல்­லு­ற­வுக்­கான ஓர் ஆரம்ப தளமாகப் பிர­யோ­கிக்­கப்­படல் வேண்டும். எனவே தேசத்தின் நலன்­க­ருதி பொருத்­த­மா­ன­தொரு வேட்பாளருக்கு வாக்­க­ளிப்­பதில் ஒற்றுமை­யா­கவும், தூர­நோக்­கு­டனும், உளத்­தூய்­மை­யு­டனும் செயற்­ப­டு­வது சமூகக் கட­மை­யென தேசிய ஷூரா சபை தெரி­வித்­துள்­ளது.

தேசிய ஷூரா சபை வெளி­யிட்­டி­ருக்கும் பொது அறி­வித்­த­லி­லேயே இவ்­வாறு சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

2019 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி, சனிக்­கி­ழமை காலை 7.00 மணி தொடக்கம் பி.ப. 5.00 மணி­வரை நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­ப­தியைத் தீர்­மா­னிக்கும் வாக்­க­ளிப்பில் 15,992,096 பேர் பங்­கேற்கத் தகைமை பெற்­றுள்­ளனர்.

வாக்­க­ளிப்பின் போது, அனு­ம­திக்­கப்­பட்ட அடை­யாள அட்­டையை அல்­லது தேர்தல் ஆணைக்­குழு அங்­கீ­கா­ரத்­து­ட­னான தற்­கா­லிக அடை­யாள அட்­டையை சமர்ப்­பிப்­ப­துடன், உரிய அதி­கா­ரிகள் முன்­னி­லையில் ஆள­டை­யாளம் (முக அடை­யாளம்) உறு­தி­செய்­யப்­படல் வேண்டும்.

கட்­சிகள் சார்­பா­கவும், சுயா­தீன உறுப்­பி­னர்­க­ளா­கவும் 35 போட்­டி­யா­ளர்கள் கள­மி­றங்­கி­யுள்ள இந்தத் தேர்தலில் செல்­லு­ப­டி­யாகும் மொத்த வாக்­கு­களில் 50% த்திலும் கூடிய (சுமார் 65 இலட்சம்) வாக்­கு­களை பெறு­ப­வரே ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வு­செய்­யப்­ப­டுவார்.

எந்­த­வொரு வேட்­பா­ளரும் முதலாம் கணிப்­பீட்டில் 50% வாக்­கு­களைப் பெறாத விடத்து மாத்­திரம், அதி கூடிய வாக்­கு­களைப் பெற்ற முத­லிரு வேட்­பா­ளர்­களும் இரண்டாம் சுற்றுக் கணிப்­பீட்­டுக்குத் தகைமை பெற்­ற­வர்­க­ளாகக் கரு­தப்­பட்டு ஏனைய 33 வேட்­பா­ளர்­களும் இரண்டாம் சுற்­று­லி­ருந்து (தேர்தலி­லி­ருந்து) நீக்­கப்­ப­டு­வார்கள்.

இருப்­பினும் இந்த நீக்­க­கப்பட் 33 வேட்­பா­ளர்­க­ளுக்கும் கிடைக்­க­பெற்ற வாக்­கு­களில், இரண்டாம் சுற்­றுக்குத் தகை­மை­பெற்ற இரு வேட்­பா­ளர்­க­ளுக்­கு­மான விருப்பு வாக்­குகள் ஏதும் இடப்­பட்­டி­ருப்பின் அவை பிரத்­தி­யே­க­மாக (முறையே 2ஆம், 3ஆம் விருப்பு வாக்­குகள்) எண்­ணப்­பட்டு தகை­மை­பெற்ற இரு முதன்மை வேட்­பா­ளர்­க­ளி­னதும் ஆரம்ப வாக்­கு­க­ளுடன் சேர்க்கப்­பட்ட பின்னர் அதி­கூ­டிய வாக்­கு­களைப் பெற்ற போட்­டி­யாளர் வெற்­றி­பெற்­ற­வ­ராகக் கரு­தப்­ப­டுவார்.

ஆகவே, மொத்த வாக்­கா­ளர்­களில் சுமார் 10 சத­வீ­த­மான வாக்­கு­களைக் கொண்ட இலங்கை முஸ்­லிம்­க­ளா­கிய நாம் தேசத்தின் நலன் கருதி, தேசிய ஒற்­று­மைக்கும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான ஒரு­மைப்­பாட்­டுக்கும் வழி­வ­குத்து, மனித உரி­மை­க­ளையும் சமய உரி­மை­க­ளையும் மதித்து, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை­நாட்டும் ஒரு ஜனா­தி­ப­தியைத் தெரிவு செய்­வதில் ஒரு பொது­வான புரிந்­து­ணர்­வுடன் எமது அனைத்து வாக்­கு­களும் வீண­டிக்­கப்­ப­டாமல் பிர­யோ­கிக்கக் கட­மைப்­பட்­டுள்ளோம்.

சமூக ஒற்­றுமை பாதிப்­ப­டை­யாத வகையில் இந்தத் தேர்தல் களம் இன, மத நல்­லு­ற­வுக்­கான ஓர் ஆரம்ப தள­மாகப் பிர­யோ­கிக்­கப்­படல் வேண்டும். எனவே, தேசத்தின் நலன்­க­ருதி பொருத்­த­மா­ன­தொரு வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிப்­பதில் ஒற்­று­மை­யா­கவும், தூர­நோக்­கு­டனும், உளத்­தூய்­மை­யு­டனும் செயற்­ப­டு­வது சமூகக் கட­மை­யென தேசிய ஷூரா சபை கருதுகின்றது.

முஸ்லிம் சமூகம் மற்றும் தேசம்சார் கரிசனைகளை ஆராய்ந்து அவ்வப்பொழுது உரிய தரப்புகளின் கவனத்திற்குக் கொண்டுவரும் தேசிய ஷூரா சபை, ஜனாதிபதித் தேர்தல் விஞாபனங்களுக்கான முன்மொழிவுகளை ஆராய்ந்து ஆவணமாகத் தயாரித்து உரிய தரப்புக்களின் கவனத்திற்கு கொண்டுவர ஆவன செய்துள்ளது என்பதனையும் அறியத் தருகிறோமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.