துரோகம் வெட்கம் அறியாது

தேர்­தலும் முஸ்­லிம்­களும் இன்ன பிறவும்

0 1,224

If the JVP is two self–centered to enter a broad anti – fascist compact with a leading democratic factor, the Centrist – populist then the only Viable solution is for the progressive – minded citizens to give AKD the second preference and not the first, because giving him the first preference would lead to the victory of a dictator. The stakes are far too high to wast first preference on AKD. (Dr. Dayan Jayathilake)

நவம்பர் 16 ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு இன்னும் சரி­யாக 14 நாட்கள் எஞ்­சி­யுள்­ளன. தேர்தல் பிர­சாரம் கொட்டும் மழை­யிலும் அனல் அலையாய் பொரி கிளப்பி வரு­கின்­றது. அர­சியல்வாதி­க­ளிடம் எஞ்­சி­யுள்ள கடை­சிப்­பு­க­லிடம் ஒரு­வரை ஒருவர் குற்றம் சுமத்தும் வார்த்தை விளை­யாட்டு மட்­டுமே. இரு பிர­தான கட்­சி­களின் வேட்­பா­ளர்­களும் அள்ளி வீசும் வாக்­கு­று­தி­களில் உள்­ள­டங்­காத எது­வுமே இல்லை என்ற அள­வுக்கு மேடை மேடை­யாக வார்த்­தை­களைக் கொட்டித் தீர்க்­கின்­றனர். இவ்­வ­ளவு வாக்­கு­று­தி­க­ளையும் நிறை­வேற்­று­வ­தற்கு இலங்­கையை விற்­றாலும் போதாது என Daily Mirror பத்­தி­ரி­கையில் ஒருவர் கிண்டல் செய்­தி­ருப்­பதும் கவ­னிக்­கத்­தக்­கது.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலை விட இந்தத் தேர்தல் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது என்றும் அதன் அர­சியல் தாற்­ப­ரியம் கவ­னிப்­புக்­கு­ரி­யது என்றும் பலர் சொல்­வ­தற்கு சில நியா­யங்கள் இருக்­கவே செய்­கின்­றன. சிறு­பான்­மை­யி­னரைப் பொறுத்த மட்டில் குறிப்­பாக, முஸ்­லிம்­க­ளுக்கு தேர்தல் பெறு­பேறு மிகுந்த முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது என்­பதே பொது­வான கருத்­தாக உள்­ளது. ஆனால் முஸ்லிம் சமூ­கத்தில் ஒன்­றுக்­கொன்று முரண்­பட்­டதும், நேரி­டை­யா­னதும், இடக்கு முடக்­கா­ன­து­மான வாதங்­களும் தர்க்­கங்­களும் நீண்டு செல்­கின்­றன. ஒரு சாரார் கோத்­தாவை ஆத­ரிக்கும் நிலைப்­பாட்டில் உள்­ளனர். ஏனென்றால் அவர்தான் வெற்றி பெறுவார். ஆக, வெற்­றி­யா­ளரின் பக்கம் நிற்­பதே பாது­காப்­பா­னது எனவும் முஸ்லிம் விரோதத் தீவி­ரத்தை தணிக்க அது உதவும் என்­பதும் அவர்­க­ளது வாத­மாக உள்­ளது.

ஐ.தே. முன்­னணி வேட்­பாளர் சஜித்தை ஆத­ரிப்­பதே மிகப்­பொ­ருத்­த­மா­னது. ஏனெனில், ஒப்­பீட்டு ரீதியில் இன­வாதம் சற்று, குறைந்த ஒரு தலைவர் அவர் எனவும் நாட்­டுக்கு சேவை­யாற்­றக்­கூ­டிய இளம் தலைவர் அவர் எனவும் முஸ்­லிம்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­க­ளுக்கு அவ­ருடன் பேச்­சு­வார்த்தை நடாத்தி தீர்­வு­காண முடியும் எனவும் சஜித் ஆத­ர­வா­ளர்கள் ஆழ­மாக நம்­பு­கின்­றனர்.

மூன்­றா­வது ஓர் அணி தேசிய மக்கள் சக்­தியின் வேட்­பாளர் அநுர குமா­ர­வுக்கே இம்­முறை முஸ்­லிம்கள் வாக்­க­ளிக்­க­வேண்டும். ஏனெனில், இரு பிர­தான கட்­சி­களும் கடந்த 70 ஆண்­டு­கால வர­லாற்றில் நல்­லாட்­சியை உரு­வாக்கத் தவ­றி­விட்­டன. நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக எந்தப் பொருத்­த­மான கொள்­கைத்­திட்­டமும் அவற்­றிடம் இருக்­க­வில்லை. ஆகக்­கு­றைந்­தது பன்­மைப்­பாங்கை முறை­யாகக் கையாளக் கூடிய (Dealing with Diversity) வலி­மை­யுள்ள தலை­வர்­க­ளா­க­வேனும் அவர்கள் இருக்­க­வில்லை. எல்­லா­வற்­றிற்கும் மேலாக எல்லை கடந்த ஊழல் மோச­டி­களும் முறை­யற்ற நிதிக்­கை­யாள்­கையும் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை அத­ல­பா­தா­ளத்தில் தள்­ளி­யி­ருக்­கி­றது. ஒவ்­வொரு பிர­ஜையின் தோளிலும் ஐந்­தரை இலட்சம் ரூபா கடன் சுமையை மாறி­மாறி வந்த ஆட்­சி­யா­ளர்கள் திணித்­துள்­ளனர். 12 (Trillion) ட்ரில்­லியன் ரூபா இலங்­கையின் வெளி­நாட்டுக் கடன் தொகை­யாக உள்­ளது. ஆக, இவற்­றை­யெல்லாம் நேர்­மை­யா­கவும் மனச்­சாட்­சி­யு­டனும் பரி­சீ­லிக்கும்போது முஸ்­லிம்கள் அநு­ரவை ஆத­ரிப்­பது தவிர வேறெந்த தெரிவும் அவர்கள் முன்னால் இல்லை என்­பது மூன்­றா­வது அணியின் ஆணித்­த­ர­மான நிலைப்­பா­டாக உள்­ளது.

யதார்த்­தத்தில் மூன்­றா­வது அணியின் நிலைப்­பாடு கொள்கை அளவில் மிகச் சரி­யா­னது. நேர்­மை­யா­னது. இதய சுத்­தி­யுடன் கூடி­யது என்­பதில் ஒரு துளியும் சந்­தே­க­மில்லை. நடை­மு­றையில் மூன்­றா­வது சக்தி வெற்றிவாகை சூடவும் பெரும்­பான்மை சிங்­கள மக்கள் வாக்குப் பலத்தால் அது அதி­கா­ரத்தைக் கையேற்கும் காலம் கனிய இன்னும் நாம் காத்­தி­ருக்­க­வேண்­டி­யி­ருப்­பினும் முழு இலங்­கை­யர்­களும் இன,மத பேத­மின்றி எடுக்க வேண்­டிய ஒரே தீர்­மானம் இது­வா­கத்தான் இருக்க முடியும்.

இவ்­வாறு நேர்­மை­யாக சிந்­திக்கும் ஒரு முற்­போக்­கான மக்கள் இயக்­கமும் கட்­சியும் முஸ்லிம் சமூ­கத்தின் உள்ளே இயங்­கு­வது நம்­பிக்கை தரு­கின்­றது. நீதி­யையும் நேர்­மை­யையும் நாட்டின் மீது உண்­மை­யான நேசத்­தையும் கொண்­டுள்­ள­வர்கள் முஸ்­லிம்கள் மத்­தியில் உள்­ளனர் எனும் ஒரு கருத்தை சிங்­கள சமூ­கத்­தி­லுள்ள முற்­போக்கு சக்­தி­க­ளிடம் ஆழ­மாகப் பதிக்­கின்­றது. இன்­றைய கால­கட்­டத்தில் இந்த அணு­கு­மு­றையும் பார்­வையும் இன்­றி­ய­மை­யா­தது.
இத்­த­கை­ய­தொரு கொதிப்­பான தரு­ணத்தில் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த இந்தத் தேர்­தலை முழு முஸ்லிம் சமூ­கமும் எவ்­வாறு நோக்­க­வேண்டும் என்­பது முக்­கிய கேள்­வி­யா­கி­யுள்­ளது. தேசிய மக்கள் சக்­தியைத் தவிர ஏனைய இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­க­ளுக்கும் ஆத­ர­வ­ளிக்க வேண்டும் என்­போரின் வாதங்­களை நாம் சற்று நிதா­னித்துப் பரி­சீ­லித்தால் அதன் உண்மைச் சொரூபம் புல­னாகும்.

71 வய­தான கோத்தா­பய 20 வழக்­கு­க­ளுடன் தொடர்­பான ஒருவர். அநுர குமார சொல்­வ­துபோல் பாலியல் குற்றச் சாட்டு தவிர ஏனைய அனைத்து வகைக் குற்றச்சாட்­டு­களும் அவர் மீது உள்­ளன. பாது­காப்பு செய­லா­ள­ராக இருந்­த­போது கோத்தா­பய மேற்­கொண்ட எதேச்­ச­தி­கா­ர­மிக்க பல நட­வ­டிக்­கைகள் கடும் விமர்­ச­னத்­துக்கு உட்­பட்­டி­ருந்­ததை நினை­வு­கூர வேண்டும். மிக் விமானக் கொள்­வ­னவு, எவன்காட் மிதக்கும் ஆயுத தொழிற்­சாலை விவ­காரம், தனது தந்தை ராஜபக் ஷ நினைவு நூத­ன­சாலை விவ­காரம், இலங்கை–அமெ­ரிக்க இரட்டை பிர­ஜா­வு­ரிமை விடயம் அனைத்தும் மிக சீரி­ய­சான விவ­கா­ரங்கள் என்கிறார் மூத்த பத்­தி­ரி­கை­யா­ளரும் அர­சியல் விமர்­ச­க­ரு­மான விக்டர் ஐவன். அவ­ரது கருத்து நாட்டின் அடிப்­படைச் சட்­டங்­க­ளையும் அர­சி­ய­ல­மைப்பு விதி­க­ளையும் மீறிய ஒரு­வரால் தேர்­தலில் நிற்க முடி­யாது என்பதாகும்
இன்­றைய ஜனா­தி­பதி பத­வி­யேற்று ஒரு வாரத்தின் பின் பொல­ன­று­வையில் நடை­பெற்ற கூட்­ட­மொன்றில் “தப்பித் தவறி தான் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­ப­டா­தி­ருந்தால் கொலை­யுண்டு மண்ணில் புதை­யுண்­டி­ருக்க வேண்டி ஏற்­பட்­டி­ருக்கும்” என்று ராஜபக் ஷாக்­களை சாடி­யி­ருந்தார். காரணம், வெள்ளை வேன் கொலைக் கலா­சாரம் இலங்­கையின் மனித உரிமை விட­யத்தைக் கடு­மை­யாகக் கேள்­விக்­குள்­ளாக்கி இருந்­ததை இலங்­கை­யர்கள் பெரும்­பாலும் மறந்­தி­ருக்க மாட்­டார்கள். லசந்த, எக்­னெ­லி­கொட மற்றும் சில தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீது திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்ட படு­கொ­லைகள் மிகச் சாதா­ர­ண­மா­ன­வை­யல்ல. ஊடக சுதந்­தி­ரத்தின் குரல்­வ­ளையை ராஜபக் ஷாக்கள் எவ்­வ­ளவு குரூ­ர­மாக நசுக்­கி­னார்கள் என்­பதை ஊட­க­வி­ய­லா­ளர்கள் இல­குவில் மறந்­து­வி­டார்கள். மஹிந்­தவின் மன்­ன­ராட்­சியில் இவை எல்லாம் சர்வ சாதா­ரணம்.

2015 ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு சற்று முன்னர் Daily Mirror பத்­தி­ரி­கையின் ஆசி­ரியர் தலைப்பில் எழுதப்பட்ட தர­வொன்றும் எனக்கு நினை­வுக்கு வரு­கி­றது. அப்­போ­தைய ஆட்­சியில் அரச நிறு­வ­னங்­களின் தலைமைப் பத­வி­களில் 286 ராஜபக் ஷ குடும்ப அங்­கத்­த­வர்கள் உள்­ளனர் என்றும் இது நாட்டின் ஜன­நா­ய­கத்­திற்கு விழும் பேரடி எனவும் ஆசிரியர் எழு­தி­யி­ருந்தார். இதுதான் ராஜபக் ஷ ஆட்­சியில் நடந்த உண்மை. அது தேசிய ஜன­நா­யக சக்­தியின் அர­சாங்கம் அல்ல. ஒரு குடும்­பத்தின் ஊழலும் மோச­டியும் நிறைந்த ஆட்சி. அடுத்­த­வர்­களை ஆயு­தங்கள் மூலமும் அதி­கா­ரத்தின் மூலமும் பய­மு­றுத்தி முன்­னெ­டுக்­கப்­பட்ட ஒரு சர்­வா­தி­கார ஆட்சி அதி­காரப் பாஸிஸம்.

இன­வா­தமும் மத­வா­த­முமே அந்த ஆட்­சியின் மூல­த­ன­மாக இருந்­தன. ஜன­நா­யகம் குழி தோண்டிப் புதைக்­கப்­பட்­டது. அரா­ஜகம் தலை­தூக்கி தாண்­ட­வ­மா­டி­யது. இனக்­க­ல­வ­ரங்கள் மூட்­டப்­பட்­டன. கிறீஸ் பூதங்கள் இறக்­கப்­பட்­டன. கொலைக்­க­லா­சாரம் மக்­களை அச்­சு­றுத்­தி­யது. இன்றும் கூட கோத்­தா­விற்கு ஆத­ர­வ­ளிக்க வேண்டும் என “பொக்கட் மீடிங்” நடத்தும் சில மஹிந்த பக்­தர்­களும், முஸ்லிம் பிர­ப­லங்­களும் ‘‘கோத்­தா­விற்கு வாக்­க­ளிக்­கா­விட்டால் அம்­பா­னைக்கு கிடைக்கும்” என்ற அந்தப் பயத்தைக் காட்­டியே அவ­ருக்கு வாக்குக் கேட்­கி­றார்கள். துரோகம் வெட்­க­ம­றி­யாது.

சுதந்­தி­ரமும் உரி­மையும் கொண்ட ஒரு சம அந்­தஸ்­துள்ள பிரஜை ஒரு சிவில் அரசில் தனது வாக்­கு­ரி­மையைப் பயன்­ப­டுத்த எந்தக் கொம்­ப­னுக்கும் அஞ்ச வேண்­டி­ய­தில்லை என்­பதை சட்டம் தெரிந்­த­வர்­களே மறந்­து­போ­வது ஒன்றும் ஆச்­ச­ரி­யத்­திற்­கு­ரி­ய­தல்ல. ‘‘முஸ்­லிம்­களே சிந்­தி­யுங்கள். சிலர் எம்மை ஏறி மிதித்து அடியும் தந்­தார்கள். பின்னர் பணமும் தந்­தார்கள். வேறு சிலர் ஏறி மிதித்துச் சென்­றார்கள். நாம் பணம் தந்­த­வ­னுக்­குத்தான் ஆத­ர­வ­ளிக்க வேண்டும்” என தொப்பி போட்ட ஒரு மௌலவி வெட்­க­மில்­லாமல் கோத்­தா­வுக்கு ஆத­ரவு தரு­மாறு மக்­களைக் கோரு­கின்றார்.

அந்­நியர் நுகத்­த­டியில் அடி­மைப்­பட்டுக் கிடப்­பதே உத்­தமம் என்று நினைக்கும் இந்தக் கொத்­த­டி­மைத்­தனம் வெட்­க­ம­றி­யாது.
“வெல்­லப்­போ­வது கோத்தா” எனவே அவ­ருக்கு நாம் வாக்­க­ளித்தால் முஸ்லிம் விரோ­தத்தைத் தணிக்­கலாம் என்ற வாதத்தின் லொஜிக் எனக்குப் புரி­ய­வில்லை. ராஜபக் ஷாக்கள் நேர்­மை­யா­ன­வர்கள் என்­ப­தற்கு சாத­க­மான எந்தக் கார­ணியும் இல்லை. கடந்­த­கால ராஜபக் ஷ யுகத்தில் அத்­த­கைய நேர்­மு­க­மான (Positive) மாற்றம் எத­னையும் முஸ்­லிம்கள் காண­வில்லை. மறு­த­லை­யாக முஸ்லிம் விரோ­தமும் குரோ­த­முமே திட்­ட­மிட்டு வளர்க்­கப்­பட்­டன. இன்று கோத்­தாவின் பக்கம் நிற்கும் முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள கூட்டு மற­தியை ஒரு துயரம் என்­பதா? துரோகம் என்­பதா…?. தெரி­ய­வில்லை. கோத்தா ஜனா­தி­ப­தி­யானால் இலங்­கைக்கு என்ன நேரும் என்­ப­தற்கு ஓர் உதா­ரணம் நம் கண்கள் முன்னால் உள்­ளது. அதுதான் எகிப்தில் ஸீஸி நடாத்தும் இரா­ணுவ அரா­ஜகம்.

உதய கம்மன்பில, அது­ர­லிய ரதன தேரர், ஞான­சார தேரர், விமல் வீர­வன்ச என பச்சை இன­வா­தி­களைக் கொண்ட ஒரு கட்­சிக்கு சூடு சொர­ணை­யுள்ள, யோக்­கி­ய­தை­யான ஒரு முஸ்­லிமோ தமி­ழனோ வாக்­க­ளிக்க மாட்டான் என்­பது திண்ணம். இன்று கிழக்கில் வங்­கு­ரோத்து நிலைக்குச் சென்­றுள்ள அதா­வுல்லாஹ் மற்றும் ஹிஸ்­புல்லாஹ் போன்­ற­வர்­களும் வியா­ழேந்­திரன், கருணா அம்மான் போன்றவர்களும் கோத்தா பக்­தர்­க­ளாக மாறி­யதன் பின்­புலம் அதி­கார மோகமும் தம்மைப் பாது­காத்­துக்­கொள்­வ­தற்­கான தந்­தி­ர­முமே. அதில் எந்­த­வொரு சமூ­கப்­பற்றும் நலனும் இல்லை என்­பது கண்­கூடு.

இத்­த­ரு­ணத்தில் சஜித்தை ஆத­ரி­யுங்கள். அவ­ருக்கு வாக்­க­ளி­யுங்கள் என்று உணர்ச்சி வயப்­பட்டு நிம்­ம­தி­யான வாழ்வை உறுதி செய்யும் ஹக்­கீமும், ரிஷாத்தும் சஜித் வருகை மூலம் சமூ­கத்­திற்கு வழங்­கப்­போகும் நலன்­கள்தான் என்ன?

கடந்த நான்­கரை ஆண்­டு­கால ஆட்­சியில் ரணில் வாக்­கு­றுதி அளித்த எதுவும் நடக்­க­வில்லை. அவர்கள் நல்­லாட்­சிக்குத் தலை­வ­ராகக் கொண்டு வந்த (ஆப்ப) சிறி­சேன மேற்­கொண்ட ஒக்­டோபர் புரட்சி மீளவும் 52 நாட்கள் மஹிந்­தவைப் பிர­த­ம­ராக்­கி­யது. ரணிலை ஓரங்­கட்­டி­யது. கொள்­ளை­யர்கள், திரு­டர்கள், அலி பாபாக்கள் அவர்­களை சட்­டத்­திற்கு முன்­கொண்­டு­வ­ருவோம். அதற்­காக வாக்­க­ளி­யுங்கள் என்றே சரத் பொன்­சேகா, சந்­தி­ரிகா, ரணில், ராஜித போன்றோர் தேர்தல் மேடை­களில் காது கிழியக் கத்­தி­னார்கள். நடந்­தது என்ன? ராஜபக் ஷாக்­க­ளுடன் ரணில் செய்­து­கொண்ட இரக­சிய ஒப்­பந்தம் கடை­சி­வரை அவர்­களைக் காப்­பாற்­றி­யது மட்­டு­மல்ல, இறு­தியில் ஐ.தே. கட்­சி­யி­னர்தான் கொள்­ளை­யர்கள் என்­பதை மத்­திய வங்கி பிணை முறி ஊழல் மூலம் ராஜபக் ஷாக்கள் நிரூ­பித்­தார்கள்.

ரணில் ஒரு நம்­ப­கத்­தன்­மை­யுள்ள தலை­வரோ தேசத்தின் பிரச்­சி­னை­களைச் சரி­யாகப் புரிந்து கொண்­ட­வரோ அல்ல. அவ­ரது ஆட்­சியில் அம்­பாறை, திகன, மினு­வாங்­கொட, குரு­நாகல் எனப் பல்­வேறு இன வெறி­யாட்­டங்கள் முஸ்லிம் சமூ­கத்­திற்­கெ­தி­ராகக் கட்­ட­விழ்க்­கப்­பட்­டன. எல்­லா­வற்­றுக்கும் மேலாக 4/21 பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலும் இந்த ஆட்சியிலேயே நடந்தது. முஸ்லிம் உளவியல் மீது பேரிடியாய் இறங்கிய இந்தச் சம்பவம் ஒரு சூழ்ச்சித்திட்டம். அது ராஜபக் ஷாக்களால் தேர்தலைக் குறிவைத்து முன்னெடுக்கப்பட்டது. ஸஹ்ரான் ஒரு கொந்தராத்துக்காரன் என்றெல்லாம் இன்று மஹேஷ் சேனநாயக்க, கலாநிதி தயான் ஜயதிலக, அமீர் அலி போன்றோர் மட்டுமன்றி ஸஹ்ரான் குழுவுக்கு தாமே ஊதியம் வழங்கினோம் என கெஹலிய ரம்புக்வெல்ல தொலைக்காட்சி விவாதத்தில் பகிரங்கமாகவே ஏற்றுக்கொண்டிருந்தார். ஞானசாரரும் இந்தத் தருணத்தில் அமைதி பூண்டுள்ளார். தூக்கத்திலும், விழிப்பிலும், சாவு வீட்டிலும், திருமண விழாவிலும் கலந்துகொண்டும் ரணில் CTA… CTA என்று புலம்பித்திரிகிறார்.

இவற்றையெல்லாம் நேர்மையாகவும் எந்த அரசியல் சார்பும் இன்றி பார்க்குமிடத்து துரோகம் வெட்கம் அறியாது என்ற வாசகமே நினைவுக்கு வருகிறது. மோகம்; அதிகார மோகம் வெட்கமறியாது என்பதைப் போலவே இலங்கையில் அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர். தமது தனிப்பட்ட சுய நலன்களுக்காக அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கூறுவோர் சொல்லும் நியாயங்களைப் பார்த்தால் துரோகம் வெட்கம் அறியாது என்ற அரசியல் வாசகமே நெஞ்சை நெருடுகிறது. வாழ்க ஜனநாயகம். வாழ்க வாழ்க ஜனநாயகம்.-Vidivelli

  • ஷகீப் அர்ஸலான்

Leave A Reply

Your email address will not be published.