வேட்பாளர் கோத்தாவுக்கு ஆதரவா? இல்லையா?

5 ஆம் திகதி தீர்மானம் என்கிறது சு.க

0 1,402

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­ப­ய­வுக்கு ஆத­ரவு நல்­கு­வதா? இல்­லையா? என்­பது தொடர்பில் எதிர்­வரும் 5 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் நேற்று முன்­தினம் இரவு நடை­பெற்ற மத்­திய செயற்­குழுக் கூட்­டத்தில் இத்­தீர்­மானம் எட்­டப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது­ஜன பெர­மு­னவின் அபேட்­சகர் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு ஆத­ரவு அளிப்­பதில் பிரச்­சி­னை­யில்லை என்­றாலும் தாமரை மொட்டுச் சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தென்றால் ஆத­ர­வ­ளிக்க முடி­யா­தென மத்­திய செயற்­குழு உறுப்­பி­னர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

இதே­வேளை பொது­ஜன பெர­மு­ன­வுடன் ஜனா­தி­பதி தேர்­தலில் ஒன்­றி­ணைவ தென்றால் அதற்­கென புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மொன்று தயா­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் கட்­சியின் உப­த­லை­வ­ரு­மான நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார். இந்த புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்­கையை மத்­திய செயற்­குழுக் கூட்டத்திலும் அவர் சமர்ப்பித்தார்.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் வரைபு நேற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஏ.ஆர்.ஏ.பரீல்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.