பொதுஜன பெரமுன சிறுபான்மையினரை அச்சுறுத்தி பிரசாரத்தை முன்னெடுக்கிறது

பிரதி அமைச்சர் பரணவிதான குற்றச்சாட்டு

0 608

ஸ்ரீலங்கா பொது ஜன பெர­மு­னவைச் சேர்ந்தோர் சிறு­பான்மை மக்­களை அச்­சு­றுத்தி தேர்தல் பிர­சா­ரத்தை மேற்­கொண்டு வரு­வ­தாக குற்­றஞ்­சாட்­டி­யி­ருக்கும் திறன்கள் அபி­வி­ருத்தி மற்றும் தொழிற்­ப­யிற்சி பிரதி அமைச்சர் கரு­ணா­ரத்ன பர­ண­வி­தான, தாம் ஜன­நா­யக ரீதி­யி­லேயே தேர்தல் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்­கப்­போ­வ­தா­கவும் குறிப்­பிட்டார்.

நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது இவ்­வாறு தெரி­வித்த அவர் தொடர்ந்து கூறி­ய­தா­வது, 

அடுத்­த­வாரம் ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுத்­தாக்கல் இடம்­பெ­ற­வுள்­ளது. அர­சியல் கட்­சிகள் அவற்றின் வேட்­பா­ளர்­களை நிய­மித்­த­வண்ணம் இருக்­கின்­றார்கள். ஐக்­கிய தேசியக் கட்சி அதன் பிர­தித்­த­லைவர் சஜித் பிரே­ம­தா­சவை நிய­மித்­தி­ருக்­கின்­றது.

இந்­நி­லையில் ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான பிர­சார நட­வ­டிக்­கைளை ஜன­நா­யக விதி­மு­றை­க­ளுக்கு இணங்க நாம் எதிர்­வரும் காலங்­களில் முன்­னெ­டுக்­க­வுள்ளோம். 2015 ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தினால் தேர்­த­லின்­போது சட்­டத்­திற்குப் புறம்­பான செயற்­பா­டுகள் பல இடம்­பெற்­றன. நாம் தற்­போது அவ்­வா­றான நிலையை மாற்­றி­ய­மைத்­துள்ளோம். ஆகவே, அவ்­வா­றான ஊழல்­மி­குந்த தேர்தல் பிர­சா­ரங்கள் இடம்­பெ­ற­மாட்­டாது. மாறாக, ஜன­நா­யக ரீதி­யா­கவே தேர்தல் பிர­சா­ரங்கள் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் முன்­னெ­டுக்­கப்­படும்.

மேலும், ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு அனை­வ­ருக்கும் சுதந்­திரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. அனை­வ­ரு­டைய எண்­ணங்­க­ளுக்கும் சுயா­தீ­னத்­துவம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

அதேபோல் எமது கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரான சஜித் பிரே­ம­தா­சவும் ஜன­நா­யக ரீதியில் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ள­துடன், தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களும் முறை­யான விதத்­தி­லேயே எதிர்­கா­லத்தில் இடம்­பெ­ற­வுள்­ளன. தேசப்­பற்­றுள்ள மக்கள் யாரு­டைய பக்கம் உள்­ளார்க.ள் என்று ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான பிர­சார நட­வ­டிக்­கை­களின் போது கண்­கூ­டாகப் பார்க்க முடியும்.

மொட்டு கட்­சியை சார்ந்தோர் வடக்கு, கிழக்­கிற்கு விஜயம் செய்து தமிழ் மக்­களை அச்­சு­றுத்தி வாக்­கு­களை பெற்­றுக்­கொள்ள முற்­ப­டு­கின்­றனர். அதனை ஏற்றுக்கொள்ள இயலாது. நாட்டுப்பற்றுள்ள சிங்கள பௌத்த பெரும்பான்மை யின மக்கள் எப்போதும் ஜனநாயகத்தின் பக்கமுள்ள சிறந்த தலைவரான சுஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பர்.

ஆகவே, எதிர் வரும் தேர்தலில் ஜனநாயக ரீதியாக வெற்றிகொண்டு ஜனநாயகத்தை உருவாக்குவோம்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.