கிழக்கில் மீண்டும் தேடுதல் நடவடிக்கைகள் திடீர் சோதனை சாவடிகளும் அமைப்பு

0 766

அம்­பாறை மாவட்­டத்தின் தமிழ்­பேசும் மக்கள் செறிந்து வாழும் நாவி­தன்­வெளி பகு­தியில் புதிய சோதனைச் சாவடி அமைக்­கப்­பட்­டுள்­ள­துடன், சாய்ந்­த­ம­ருது பகு­தி­களில் இரா­ணு­வத்­தி­னரின் குழு­வொன்று மற்­று­மொரு பாரிய தேடுதல் நட­வ­டிக்­கை­யொன்றை முன்­னெ­டுத்­துள்­ளது. நேற்று திங்­கட்­கி­ழமை திடீ­ரென உழவு இயந்­தி­ரத்தில் வந்த சுமார் 15 இற்கும் அதி­க­மான இரா­ணு­வத்­தினர் நாவி­தன்­வெளி பிர­தேச செய­ல­கத்­திற்கு அருகே உள்ள சவ­ளக்­கடை சந்­தியில் சோதனை சாவ­டி­யொன்றை அமைத்து சோதனை நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தனர்.

அதே­போன்று இரா­ணு­வத்­தி­ன­ருக்கு நேற்று கிடைக்­கப்­பெற்ற தக­வ­லொன்றை அடுத்து கன­ரக வாக­ன­மொன்றில் வந்­தி­றங்­கிய சுமார் 40 இற்கும் அதி­க­மான இரா­ணு­வத்­தினர் சாய்ந்­த­ம­ருது பகு­தியில் விசேட தேடுதல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டனர். சாய்ந்­த­ம­ருது அல்-­–ஹிலால் வீதியில் அமைந்­துள்ள வீடுகள், மைய­வா­டியை அண்­டிய பகு­தி­களில் படை­யினர் தேடு­தலை மேற்­கொண்­ட­துடன் குறிப்­பிட்ட பிர­தே­சத்தில் வீதியால் சென்ற பொது­மக்­களும் சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டனர். மேலும் அண்மைக் கால­மாக அடிக்­கடி இடம்­பெறும் இரா­ணுவ சோதனை நட­வ­டிக்­கை­களால் மக்கள் அச்­ச­ம­டைந்­துள்­ளனர். மேலும் குறித்த பகு­தி­களில் கடந்த ஒரு வார­மாக இரா­ணு­வத்­தி­னரின் திடீர் தொடர் தேடுதல் நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன.

இதே­வேளை, ஏப்ரல் 21 குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்னர் காத்­தான்­குடி பிர­தே­சத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பள்­ளி­வா­சலை அண்­மித்­த­தாக கடற்­கரை பிர­தே­சத்தில் அமைக்­கப்­பட்­டி­ருந்த சோதனைச் சாவடி ஒரு மாதத்திற்கு முன்னர் அகற்றப்பட்டிருந்தது. எனினும் நேற்று முதல் குறித்த சோதனைச்சாவடி மீண்டும் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.