ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு பொதுமக்கள் தகவல் வழங்க சந்தர்ப்பம்

0 174

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்­குதல் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­விற்கு பொது­மக்கள் தக­வல்­களை வழங்­கு­வ­தற்கு வச­திகள் செய்­யப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பான தக­வல்­களை கொழும்பு – 0-7, முதலாம் மாடி, பிரிவு இலக்கம்- 5, பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­டபம் என்ற முக­வ­ரிக்கு பதிவு தபால்­மூலம் அனுப்­பி­வைக்க முடி­யு­மென்று ஆணைக்­குழு அறி­வித்­துள்­ளது.

இந்த தக­வல்­களை அடுத்த மாதம் 14 ஆம் திக­திக்கு முன்னர் அனுப்பி வைக்­கு­மாறு ஆணைக்­குழு பொது­மக்­க­ளுக்கு அறி­வித்­துள்­ளது. ஆணைக்­குழு தனது பணி­களை ஆரம்­பிக்கும் அடிப்­படை நட­வ­டிக்­கை­யாக பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து தக­வல்­களை பெற்­றுக்­கொள்­ள­வுள்­ளது. கிடைக்­கப்­பெறும் தக­வல்­களை மதிப்­பீடு செய்து மேல­திக நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ள­வுள்­ள­தா­கவும் ஆணைக்­கு­ழுவின் சிரேஷ்ட உறுப்­பினர் ஒருவர் தெரி­வித்தார்.

உயிர்த்த ஞாயி­றன்று நாட்டின் பல இடங்­களில் இடம்­பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்­பவம் குறித்து விசா­ரணை செய்­வ­தற்­காக இந்த ஆணைக்­குழு நிய­மிக்­கப்­ப­ட­வி­ருப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த 21 ஆம் திகதி வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தார். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சனத் டி சில்வா இதன் தலைவராக செயற்படுகிறார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.