தனி நபர்களுக்கு இடையிலான இருவேறு சம்பவங்களால் கிரிந்தவில் வன்முறைகள் சொத்துக்களுக்கு சேதம்

மூவர் கைது; 4 பொலிஸார் பணி இடைநிறுத்தம்

0 556

தனி­ந­பர்­க­ளுக்கு இடையே இடம்­பெற்ற இரு­வேறு சம்­ப­வங்கள், வன்­மு­றை­க­ளாக பரிணா­ம­ம­டைந்­ததன் விளை­வாக மாத்­தறை – ஹக்­மன பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கிரிந்­தவில் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான வீடுகள், சொத்­துக்­க­ளுக்கு வன்­முறைக் கும்­ப­லொன்­றினால் சேதம் விளை­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதனால் சுமார் 15 வீடுகள், வாக­னங்கள் உள்­ளிட்ட சொத்­துக்­க­ளுக்கு சேதம் விளை­விக்­கப்பட்­டுள்ள நிலையில், அவற்றின் பெறு­ம­தி­யினை மதிப்­பீடு செய்யும் பணிகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளன. இதனால் பிர­தே­சத்தில் கடந்­த­வார இறு­தியில் அச்­சத்­துடன் கூடிய சூழல் ஏற்­பட்ட நிலையில், பொலிஸ் அதி­ர­டிப்­படை, இரா­ணுவம் குவிக்­கப்­பட்டு வன்­மு­றை­யா­ளர்­களின் நட­வ­டிக்­கைகள் முற்­றாக முடக்­கப்­பட்­டன. இதனால் தற்­போது அப்­ப­கு­தியில் அமை­தி­நிலை ஏற்­பட்­டுள்­ள­துடன் பொது­மக்­களின் அன்­றாட வாழ்வும் வழ­மைக்குத் திரும்­பி­யுள்­ள­தாக பிர­தே­சத்­துக்குப் பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

இந்­நி­லையில் இந்த வன்­மு­றை­க­ளுக்கு தூப­மிட அடிப்­ப­டை­யாக அமைந்­த­தாகக் கூறப்­படும் இரு­வேறு சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டைய மூவர் மாத்­தறை பிராந்­திய குற்றத் தடுப்புப் பிரி­விலும், மாத்­தறை பொலிஸ் அத்­தி­யட்­சகர் அலு­வ­ல­கத்­திலும் சர­ண­டைந்­ததன் பின்னர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்­களில் இருவர் எதிர்­வரும் ஒக்­டோபர் 10 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் நேற்று மாத்­தறை பொலிஸ் அத்­தி­யட்­சகர் அலு­வ­ல­கத்தில் சர­ண­டைந்த நபர் ஹக்­மன பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட பின்னர், அங்கு தடுத்து வைத்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார். விசா­ர­ணை­களைத் தொடர்ந்து அவரை மாத்­தறை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­ய­வுள்­ள­தாக பொலிஸார் கூறினர்.

இந்த வன்­மு­றைகள் ஏற்­ப­டு­வதைத் தடுக்கத் தவ­றி­யமை, கட­மை­களை சரி­வரச் செய்­யாமை, சந்­தேக நபர்­களைக் கைது செய்ய நட­வ­டிக்கை எடுக்­காமை தொடர்பில் ஹக்­மன பொலிஸ் நிலை­யத்தின் 4 பொலிஸார் பணி இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டுள்­ளனர். 3 பொலிஸ் சார்­ஜன்ட்கள் மற்றும் ஒரு கான்ஸ்­டபிள் ஆகி­யோரின் பணி­களே இவ்­வாறு இடை நிறுத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­தது.

அத்­துடன் ஹக்­மன பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்ட மேலும் பல அதி­கா­ரிகள், இந்த சம்­ப­வங்­க­ளின்­போது செயற்­பட்ட விதம் தொடர்பில் விசேட விசா­ர­ணை­களை நடாத்­து­மாறு தென் மாகா­ணத்­துக்குப் பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்­னாண்டோ, மாத்­தறை பொலிஸ் அத்­தி­யட்­சகர் அனில் பிரி­யந்­த­வுக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி இரவு 7.50 மணி­ய­ளவில் ரவீந்ர சந்­தகன் எனும் இளைஞர் மீது இரு முஸ்லிம் இளை­ஞர்கள் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர். இந்த சம்­பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ள நிலையில், அவர் பொலிஸ் நிலை­யத்­தி­லி­ருந்து தப்பிச் சென்­றுள்ளார்.

இந்­நி­லையில் மறுநாள் 27 ஆம் திகதி, கிரிந்த – போதி­ருக்­கா­ராம விகா­ரைக்கு அரு­கி­லுள்ள முஸ்லிம் நபர் ஒரு­வ­ருக்கு சொந்­த­மான வீட்டில் இடம்­பெற்­றுள்ள வாக்­கு­வா­த­மொன்றின் இடையே ‘பியர்’ போத்தல் ஒன்று விகாரை வளா­கத்­துக்குள் வீசப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்தே அப்­ப­கு­தியில் வன்­மு­றை­க­ளுடன் கூடிய பதற்­ற­நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இத­னா­லேயே அப்­ப­கு­தி­யி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான வீடுகள், சொத்­துக்கள் வன்­முறை கும்­ப­லொன்றால் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. எவ்­வா­றா­யினும், பொலிஸ் விசேட அதி­ரடிப் படை­யினர், இரா­ணு­வத்­தினர் அழைக்­கப்­பட்டு வன்­மு­றைகள் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்டு நிலைமை சுமு­க­மாக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் வன்­மு­றை­க­ளுடன் தொடர்­பு­டைய நபர்­களைக் கைது­செய்ய மாத்­தறை மாவட்ட குற்­றத்­த­டுப்புப் பிரி­வி­னரின் உத­வி­யுடன் விசேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யி­லேயே கடந்த 26 ஆம் திகதி பதி­வான தாக்­குதல் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய இருவர் மாத்­தறை மாவட்ட குற்­றத்­த­டுப்புப் பிரிவில் சர­ண­டைந்­துள்­ளனர். அவர்­களை தாக்­குதல் நடாத்­தி­யமை மற்றும் இடை­யூறு ஏற்­ப­டு­த்­தி­யமை தொடர்­பி­லான குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் கைது செய்த பொலிஸார் மாத்­தறை நீதி­மன்றில் ஆஜர் செய்­ததை அடுத்து எதிர்­வரும் ஒக்­டோபர் 10 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­த­ர­விட்­டுள்ளார்.

இந்த சம்­பவம் தொடர்பில் ஆரம்­பத்தில் சந்­தேக நபரைக் கைது செய்­யாமை, கட­மை­களை சரி­வரச் செய்­யாமை, மோதல் ஏற்­பட வழி­ய­மைத்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் ஒரு பொலிஸ் சார்­ஜன்டும், கான்ஸ்­ட­பிளும் பணி இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இது இவ்­வா­றி­ருக்க, கடந்த 27 ஆம் திகதி இடம்­பெற்ற சம்­பவம் தொடர்பில் சந்­தேக நபர் மாத்­தறை பொலிஸ் அத்­தி­யட்­சகர் அலு­வ­ல­கத்தில் நேற்று சர­ண­டைந்­துள்ளார். இத­னை­ய­டுத்து அவரை மத ஸ்தல­மொன்றின் மகி­மைக்கு பங்கம் விளை­வித்­தமை, அச்ச நிலை­மையை தோற்­று­வித்­தமை, அரச விரோத செய­லொன்­றினை புரிந்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் கைது செய்த பொலிஸார், ஹக்­மனை பொலிஸ் நிலை­யத்தில் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர். அவரை மாத்தறை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில், அச்சம்பவம் பதிவாகும்போது அதாவது, கடந்த 27 ஆம் திகதி காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கிரிந்த போதிருக்காராம விகாரையில் பாதுகாப்புக் கடமையிலிருந்த இரு பொலிஸ் சார்ஜன்ட்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். தனது கடமையை சரிவர செய்யாமை, சந்தேக நபரைக் கைது செய்யாமை, மோதல் ஏற்படுவதை தடுக்காமை தொடர்பில் அவர்கள் இருவரும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

எம்.எப்.எம்.பஸீர்

vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.