காஸாவில் 75 ஆவது வாரமாக தொடரும் மக்கள் போராட்டம்

0 198

மீளத்­தி­ரும்­பு­வ­தற்­கான மாபெரும் பேரணி என அழைக்­கப்­படும் ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ரான வாராந்த எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில் காஸாவைச் சேர்ந்த நூற்­றுக்­க­ணக்­கான பலஸ்­தீ­னர்கள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாது­காப்பு வேலியை நோக்கிச் சென்­றனர்.

பலஸ்­தீனக் கொடி­யினை ஏந்­திக்­கொண்ட ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் கிழக்கு காஸா பள்­ளத்­தாக்­கி­லுள்ள ஐந்து வெவ்­வேறு இடங்­களில் ஒன்று குழு­மினர்.
பலஸ்­தீனப் பிரி­வி­னரால் தோற்­று­விக்­கப்­பட்ட மீளத் திரும்­பு­வ­தற்­கான மாபெரும் பேர­ணியின் மற்றும் காஸா ஆக்­கி­ர­மிப்பைத் தகர்ப்­ப­தற்­கான உயர்­மட்ட தேசிய ஆணைக்­குழு இவ்­வெள்­ளிக்­கி­ழமை ஆர்ப்­பாட்­டத்­திற்கு லெப­னானை தள­மாகக் கொண்ட அகதி முகாம்கள் என அங்­குள்ள அக­தி­களின் துன்­பங்­களைக் குறிக்கும் வகையில் பெய­ரிட்­டுள்­ளது.

வாராந்த ஆர்ப்­பாட்­டத்தின் மீது இஸ்ரேல் இரா­ணு­வத்­தினர் மேற்­கொண்ட தாக்­குதல் கார­ண­மாக 39 பலஸ்­தீ­னர்கள் காயத்­திற்­குள்­ளா­ன­தாக பலஸ்­தீன சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது.

காயத்தின் தன்­மைகள் தொடர்பில் மேல­திக விப­ரங்கள். எத­னையும் வெளி­யி­டாது சுருக்­க­மாக வெளி­யி­டப்­பட்ட அமைச்சின் அறிக்­கையில் உண்­மை­யான துப்­பாக்கி ரவை­களைப் பயன்­ப­டுத்தி மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­க­ளினால் 26 பேருக்கு காயம் ஏற்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கடந்த வருடம் மார்ச் மாதம் காஸாவில் ஆரம்­பிக்­கப்­பட்ட மீளத் திரும்­பு­வ­தற்­கான மாபெரும் பேர­ணியில் காஸா­வு­ட­னான இஸ்­ரேலின் எல்லை வேலிப் பகுதியில் இஸ்ரேலினால் மேற் கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரண மாக 270 பேர் உயிரிழந்துள்ள தோடு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந் துள்ளனர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.