ஒரு நாளில் மாத்திரம் நினைவு கூரப்படும் தலைவர்!

0 714

இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல் தொடர்பில் சமூகம் சார்ந்த சிந்­த­னை­களை மேற்­கொண்ட பல தலை­வர்கள் இருந்­தி­ரு­கி­றார்கள். ஆயினும், மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்­ரப்பை நினைவு கூர்­வ­தனைப் போன்று ஏனைய தலை­வர்­களை பெரி­தாக நினைவு கூர்­வ­தில்லை. அதற்­காக மர்ஹூம் அஷ்ரப் எந்த தவ­று­க­ளையும் செய்­ய­வில்லை என்று கூற முடி­யாது. அவர் ஏனைய முஸ்லிம் தலை­வர்­களை விடவும் வித்­தி­யா­ச­மா­ன­தொரு பாதையில் முஸ்லிம் சமூ­கத்தின் அர­சி­யலை முன்­னெ­டுத்தார். முஸ்­லிம்­க­ளுக்கும் தனித்­து­வ­மான அர­சியல் கட்சி வேண்­டு­மென்று முஸ்லிம் காங்­கி­ரஸை ஸ்தாபித்தார். அவர் முஸ்லிம் காங்­கி­ரஸை ஆரம்­பித்த காலம் முஸ்­லிம்கள் தமிழ் ஆயுதக் குழுக்­க­ளினால் மிகவும் மோச­மாக பாதிக்­கப்­பட்ட கால­மாக இருந்­தது. அத்­தோடு, முஸ்­லிம்­களின் வாக்­கு­க­ளையும், முஸ்­லிம்­க­ளையும் பேரி­ன­வாத தேசிய கட்­சிகள் தமது தேவைக்கு ஏற்­ற­வாறு பயன்­ப­டுத்திக் கொண்­டன. இந்த இரண்டு விட­யங்­க­ளையும் மர்ஹூம் அஷ்ரப் கடு­மை­யாக எதிர்த்தார்.

அவ­ரு­டைய துணிச்சல் மிக்க இந்த நட­வ­டிக்கை இலங்கை முஸ்­லிம்­களை குறிப்­பாக கிழக்கு மாகாண முஸ்­லிம்­களை ஈர்த்­தது. இதனால், இன்றும் அவர் பேசப்­படும் ஒரு­வ­ராக இருக்­கின்றார். மேலும், இன்று முஸ்லிம் அர­சி­யலை கையில் எடுத்துக் கொண்டு சக்­கரம் ஆடிக் கொண்­டி­ருப்­ப­வர்­களில் அதிகம் பேர் மர்ஹூம் அஷ்­ரப்பின் பாச­றையில் அர­சியல் அரிச்­சு­வ­டியை கற்­ற­வர்கள். இவர்கள் முஸ்­லிம்­களின் அர­சி­யலை விலை பேசி விற்­றாலும், மர்ஹூம் அஷ்­ரப்­புக்கு முஸ்­லிம்கள் மத்­தியில் இன்னும் மரி­யாதை இருப்­ப­தனை உணர்ந்­துள்­ளார்கள். இதனால், வரு­டத்­திற்கு ஒரு தட­வை­யா­வது அவரைப் பற்றி பேசி தங்­களை மர்ஹூம் அஷ்­ரப்பின் கொள்­கை­களை வாழ வைக்க வந்­த­வர்கள் என்று காட்டிக் கொள்­வ­தற்­கா­கவும் நினைவு தினத்தை கொண்­டாடிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். மர்ஹூம் அஷ்­ரப்­புக்கு தற்­போது 19ஆவது நினைவு தினத்தை எடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். பொது­வாக மர்ஹூம் அஷ்­ரப்பின் நினைவு நினைத்தை முஸ்லிம் காங்­கி­ரஸூம், ஏனைய கட்­சி­களில் உள்ள அவ­ரது சீடர்­களும் எடுத்துக் கொண்­டி­ருக்கும் நினைவு தினம் மர­ணித்­த­வரை (அஷ்­ரப்பை) உயிர்ப்­பிக்கும் நாளா­கவே இருக்­கின்­றது.

வருடா வருடம் செப்டெம்பர் 16ஆம் திகதி மர்ஹூம் அஷ்­ரப்பின் நினைவு தின வைப­வங்­களை முஸ்லிம் காங்­கிரஸ் உட்­பட அர­சியல் கட்­சி­களும், பல அமைப்­புக்­களும் நடாத்திக் கொண்­டி­ருக்­கின்­றன. இது கடந்த 18 வரு­டங்­க­ளாக நடை­பெற்­றுள்­ளன. தற்­போது 19ஆவது நினைவு தினத்தை நடாத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவ்­வை­ப­வத்தில் மர்ஹூம் அஷ்­ரப்பின் ஆளுமை, திறமை, முஸ்லிம் சமூ­கத்­திற்­காக அவர் ஆற்­றிய சேவைகள் குறித்­தெல்லாம் ஆட்­களை அழைத்து பேசு­கின்­றார்கள். இதற்­காக பெரும் தொகைப் பணத்­தையும் செலவு செய்­கின்­றார்கள். மர்ஹூம் அஷ்­ரப்பின் சிறந்த ஆளு­மைக்கு எடுத்துக் காட்­டுத்தான் இன்று வரைக்கும் பல கோணல்­க­ளுக்கு மத்­தி­யிலும் முஸ்லிம் காங்­கிரஸ் உயிர் வாழ்ந்து கொண்­டி­ருப்­பது. அவர் அன்று போட்ட அத்­தி­வாரம் இன்னும் பெரி­ய­ளவில் உடைந்து தாழ் இறங்­க­வில்லை. அதனால், இங்கு நாம் மர்ஹூம் அஷ்­ரப்பின் ஆளுமை, சமூ­கப்­பற்று மற்றும் திற­மைகள் குறித்து பேச முன் வர­வில்லை. அது குறித்து வாச­கர்கள் நிறைய அறிந்­தி­ருப்­பீர்கள்.

ஆனால், மர்ஹூம் அஷ்­ரப்­புக்கு நினைவு தினத்தை நடத்திக் கொண்­டி­ருக்கும் அர­சியல் கட்­சிகள் குறித்தும், அதன் உறுப்­பி­னர்கள் குறித்தும் பேசு­வது பொருத்­த­மென்று நினைக்­கின்றேன். ஒரு தலை­வனின் நினைவு தினத்தை மாத்­திரம் வரு­டாந்தம் அனுஷ்­டித்துக் கொண்­டி­ருப்­பதில் எந்தப் பய­னு­மில்லை. அத்­த­கைய வைப­வங்கள் அவ­ருக்கு செய்­கின்ற மரி­யா­தை­யாகக் கொள்­ளவும் முடி­யாது. ஆனால், குறித்த அத்­த­லை­வனின் நல்ல கொள்­கை­களை வாழ வைப்­ப­துதான் அத்­த­லை­வ­னுக்கு செய்­கின்ற உண்­மை­யான மரி­யா­தை­யாகும். ஆதலால், 19ஆவது நினைவு தினம் என்ற பெயரில் மர்ஹூம் அஷ்­ரப்­புக்கு வைப­வங்­களை நடத்திக் கொண்­டி­ருக்கும் முஸ்லிம் காங்­கி­ர­ஸாக இருந்­தாலும், அதன் தலை­வ­ராக இருந்­தாலும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், உயர்­பீட உறுப்­பி­னர்­க­ளாக இருந்­தாலும் மர்ஹும் அஷ்­ரப்பின் எந்தக் கொள்­கையை நிலை நாட்­டி­யுள்­ளார்கள். அவர் குரல் கொடுத்து முஸ்லிம் சமூ­கத்தின் எந்தப் பிரச்­சி­னையை தீர்த்து வைத்­துள்­ளார்கள் என்று சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.

இதே போன்­றுதான் ஐக்­கிய சமா­தானக் கூட்­ட­மைப்­பாக இருந்­தாலும், தேசிய காங்­கி­ர­ஸாக இருந்­தாலும், அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­ஸாக இருந்­தாலும் மர்ஹூம் அஷ்ரப் காட்­டிய வழியில் பய­ணிக்­க­வில்லை. ஆனால், எல்லா அர­சியல் கட்­சிக்­கா­ரர்­களும் நாங்­கள்தான் அஷ்­ரப்பின் கொள்­கைகளை வாழ வைத்துக் கொண்­டி­ருக்­கின்றோம் அல்­லது வாழ வைப்­ப­தற்கு போராடிக் கொண்­டி­ருக்­கின்றோம் என்று கூச்­ச­லிட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். வெறும் கூச்­சல்கள் உணர்­வு­க­ளுடன் சம்­பந்­தப்­ப­டு­வ­தில்லை. அதன் பின்னால் வேறு திட்­டங்கள் இருக்கும். இன்று முஸ்லிம் கட்­சிகள் யாவும் மர்ஹூம் அஷ்­ரப்பின் கொள்­கைளை தேர்தல் காலங்­களில் மாத்­திரம் பேசிக் கொள்ளும் நிலை­யி­லேயே இருந்து கொண்­டி­ருக்­கின்­றன. தேர்தல் காலங்­களில் அஷ்ரப் எனும் மந்­திரக் கோலைக் கொண்டு முஸ்­லிம்கள் மத்­தியில் மாயா­ஜால வித்தை காட்டிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்லிம் வாக்­கா­ளர்கள் உண்­மைக்கும், போலிக்கும் வித்­தி­யா­சத்தைப் புரிந்து கொள்­ளாது வித்­தை­களில் மயங்கி தன்­னிலை மறந்து முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் சமூ­கத்தை விலை பேசி விற்­ப­தற்கு துணை­யாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

சமூக அர­சி­யலைச் செய்­வ­தற்கு மர்ஹூம் அஷ்­ரப்பின் பின்னால் அணி திரண்­ட­வர்கள் அணி அணி­யாகப் பிரிந்து தேசிய கட்­சி­க­ளுடன் சுமுக உறவைப் பேணி இணக்க அர­சியல் செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

மர்ஹூம் அஷ்ரப் மர­ணித்து 19 வரு­டங்­களில் இணக்க அர­சியல் எனும் அசிங்­கத்­திற்குள் முகங்­களைப் புதைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவர்கள் சமூ­கத்தை தலை நிமிர்ந்து பார்க்­காது பணங்­க­ளையும், அமைச்சர் பத­வி­க­ளையும், தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­க­ளையும், கட்­சியின் தலைவர், செய­லாளர் மற்றும் ஏனைய பத­வி­க­ளையும் எதிர்­பார்த்து சமூ­கத்தை தலை குனிந்து செல்லும் நிலைக்­குள்­ளாக்கி இருக்­கின்­றார்கள். முஸ்லிம் அர­சியல் தலை­வர்­க­ளி­டமும், அக்­கட்­சி­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டமும் உள்ள மனித பல­வீ­னங்கள் முஸ்லிம் சமூ­கத்­தையே அதிகம் பாதிக்கச் செய்­துள்­ளன.

அதே வேளை, முஸ்லிம் சமூ­கத்­திற்­காக எத­னை­யா­வது சாதித்துக் காட்­டி­யுள்­ளார்­களா என்றால் அதனைக் கூட கண்டு கொள்ள முடி­ய­வில்லை. மர்ஹூம் அஷ்­ரப்பின் அர­சியல் காலம் மிகக் குறு­கி­ய­தாகும். அக்­கா­லத்­திற்குள் பல­வற்றை சமூ­கத்­திற்­காக சாதித்­துள்ளார். ஆனால், அவ­ரது மர­ணத்தின் பின்னர் கட்­சியை பொறுப்­பேற்றுக் கொண்­ட­வர்கள் 19 வரு­டங்­களில் முஸ்லிம் சமூ­கத்தின் எந்த அடிப்­படைத் தேவை­யையும் பூர்த்தி செய்­ய­வில்லை. பாதை­களை அமைப்­பதும், கட்­டி­டங்­களை அமைப்­பதும் முஸ்லிம் சமூ­கத்தின் தேவை­யாக இருந்­தாலும், முஸ்­லிம்­க­ளுக்கு அர­சியல் கட்சி இதற்­காக ஆரம்­பிக்­க­வில்லை. ஏனெனில் இத்­தே­வை­களை இன்­றுள்ள முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை விடவும் அதி­க­மாக தேசிய கட்­சி­களில் அமைச்­சர்­க­ளா­கவும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளா­கவும் இருந்த முஸ்­லிம்கள் செய்­துள்­ளார்கள். அத்­தோடு, சிங்­கள அமைச்­சர்கள் கூட முஸ்லிம் பிர­தே­சங்­களின் அபி­வி­ருத்­திக்கு பங்­க­ளிப்­புக்­களைச் செய்­துள்­ளார்கள். முஸ்லிம் காங்­கிஸை மர்ஹூம் அஷ்ரப் ஆரம்­பித்த போது முஸ்லிம் சமூ­கத்தின் குர­லாக மாத்­தி­ரமே இருப்போம் என்­றுதான் தெரி­வித்தார். ஆனால், இன்று முஸ்­லிம்­களின் குர­லாக யாரு­மில்லை என்­ப­துதான் மிகப் பெரிய கவ­லை­யாகும். ஏப்ரல் 21 தற்­கொலை தாக்­கு­தல்­களின் பின்னர் ஏற்­பட்ட அர­சியல் நெருக்­க­டிகள், பௌத்த இன­வா­தி­களின் முஸ்லிம் விரோத செயல்கள், இட்­டுக்­கட்­டப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள், முஸ்­லிம்­களின் மீதான தாக்­கு­தல்கள், அத்­து­ர­லிய ரதன தேரரின் உண்ணா விர­தமும் இடம்­பெற்­றது. இவற்றைத் தொடர்ந்து முஸ்லிம் அமைச்­சர்கள் பத­வி­களை இரா­ஜி­னாமாச் செய்­தார்கள். இதன் பின்னர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் தீரும் வரை அமைச்சர் பத­வி­களை ஏற்­க­மாட்டோம். கல்­முனை பிர­தேச செய­லகப் பிரச்­சினை தீரும் வரை அமைச்சர் பத­வி­களை ஏற்றுக் கொள்­ள­மாட்டோம் என்று சொல்லிக் கொண்ட முஸ்லிம் கட்­சி­களின் தலை­வர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இப்­பி­ரச்­சி­னைகள் முடி­வு­றாத நிலை­யி­லேயே அமைச்சர் பத­வி­களை மீண்டும் ஏற்றுக் கொண்­டார்கள். இதுதான் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களின் நிலைப்­பா­டாகும். இவ்­வாறு சொல்­லு­வது ஒன்று செய்­வது ஒன்­றாக இருந்து கொண்­டுள்ள நிலையில் மர்ஹூம் அஷ்­ரப்­புக்கு 19ஆவது நினைவு தினம் எடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

மர்ஹூம் அஷ்ரப் விடு­தலைப் புலி­களின் ஆயுத அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும், அரச இயந்­தி­ரத்தின் அதி­கார அடக்கு முறை­க­ளுக்கும் மத்­தி­யில்தான் சமூ­கத்தின் உரி­மை­களைப் பற்றிப் பேசி­னார்கள். ஆனால், இன்­றுள்ள முஸ்லிம் கட்­சி­களும், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அர­சாங்­கத்தின் பங்­கா­ளிகள் என்ற அந்­தஸ்தை பெற்­றுள்ள பின்­ன­ணி­யில்தான் முஸ்­லிம்­களின் மீது பௌத்த இன­வா­தி­களின் தூண்­டு­தலின் பேரில் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்­த­வர்கள் அளுத்­கம, பேரு­வளை, தர்­கா­நகர் போன்ற இடங்­களில் முஸ்­லிம்­களின் மீது தாக்­கி­னார்கள். அதன் போது அன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் அத்­தாக்­கு­தல்­க­ளுக்கு கார­ண­மா­ன­வர்­களை கைது செய்­ய­வில்லை. பௌத்த இன­வா­தி­க­ளையும், தாக்­கு­தல்­க­ளுக்கு துணை­யாக செயற்­பட்ட தேரர்­க­ளையும் பாது­காக்கும் நட­வ­டிக்­கை­க­ளையே அர­சாங்கம் மேற்­கொண்­டது. இதன் போது கூட முஸ்லிம் கட்­சி­களும், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அமைச்சர் பத­வி­களை இரா­ஜி­னாமாச் செய்­ய­வில்லை. அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­களை கண்­டிக்­க­வில்லை. பௌத்த இன­வா­தி­களின் மீது மாத்­திரம் பழியைப் போட்­டு­விட்டு, அர­சாங்­கத்தை பாது­காத்­தார்கள்.

தற்­போ­தைய அர­சாங்­கத்­திலும் முஸ்­லிம்கள் பௌத்த இன­வா­தி­க­ளினால் தாக்­கப்­பட்­டார்கள். கிந்­தோட்டை, அம்­பாறை, திகன, கண்டி, குரு­நாகல், குளி­யாப்­பிட்டி, மினு­வாங்­கொடை, கின்­னி­யாம உள்­ளிட்ட 30இற்கும் மேற்­பட்ட ஊர்­களில் வாழ்ந்த முஸ்­லிம்­களின் மீது பௌத்த இன­வா­திகள் தாக்­கி­னார்கள். பள்­ளி­வா­சல்­களும் தாக்­கப்­பட்­டன. ஆயினும், பங்­கா­ளிகள் என்­றுள்ள முஸ்லிம் அமைச்­சர்­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஆளுந்தரப்பு கதி­ரை­க­ளையே அலங்­க­ரித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்லிம் சமூ­கத்­திற்கு பாது­காப்பு தர முடி­யாத ஆட்­சியின் பங்­காளி எனும் பட்­டத்தில் சமூ­கத்­திற்கு எந்தப் பய­னு­மில்லை. முஸ்லிம் சமூகம் பயன் பெறாது போனாலும் தாங்கள் அமைச்­சர்­க­ளாக இருக்க வேண்­டு­மென்­பதே முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளி­னதும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­னதும் தீர்­மா­ன­மாக இருக்­கின்­றது. இவ்­வாறு சமூகம் பிறரால் தாக்­கப்­பட்டும், அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்­டு­முள்ள நிலையில் அமைச்சர் பத­வி­க­ளுக்­காக எல்லா அர­சாங்­கத்தின் காலங்­க­ளிலும் பங்­காளி என்­றி­ருப்­பர்கள் மர்ஹூம் அஷ்­ரப்பின் 19ஆவது நினைவு தினத்தை அனுஷ்­டித்து, அவரைப் பற்றி கவர்ச்­சி­க­ர­மாகப் பேசி தங்­களை அஷ்­ரப்­வா­தி­க­ளாக காட்டிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

மர்ஹூம் அஷ்ரப் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் வாழும் முஸ்­லிம்­க­ளுக்கு தேசிய கட்­சி­க­ளி­னாலும், தமிழ் ஆயுதக் குழுக்­க­ளி­னாலும் ஏற்­ப­டுத்­தப்­பட்ட அநி­யா­யங்­க­ளி­னாலும் அதிகம் பாதிக்­கப்­பட்­டி­ருந்தார். அதற்­காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஒரு சமூக இயக்­க­மாக செயற்­பட்ட போது அத­னூ­டாக குரல் கொடுத்துக் கொண்­டி­ருந்தார். வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் உள்ள முஸ்லிம் இளை­ஞர்­களில் சிலர் தேசிய கட்­சி­களின் ஒடுக்­கு­தல்கள், அர­சியல் அதி­கா­ரத்தைக் கொண்­ட­வர்­களின் பார­பட்ச நட­வ­டிக்­கை­க­ளினால் கவலை கொண்டு தமிழ் ஆயுதக் குழுக்­களில் இணைந்து செயற்­பட்­டார்கள். முஸ்லிம் இளை­ஞர்­களின் இந்த மன­மாற்றம் எதிர்­கா­லத்தில் சமூ­கத்­திற்கு பெரிய பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்று கரு­தியும் முஸ்லிம் காங்­கி­ரஸை தோற்­று­வித்து அதன் மூல­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான அநி­யாயங்­க­ளுக்கு நியா­யங்­களைப் பெற்றுக் கொள்ள முடி­யு­மென்று முஸ்லிம் இளை­ஞர்­களை தமிழ் ஆயுதக் குழுக்­களில் இணைந்து கொள்­வ­தனை தடுத்தார்.

இலங்கை –- இந்­திய உடன்­ப­டிக்கை மூல­மாக தற்­கா­லி­க­மாக இணைந்த வடக்கு, கிழக்கு மாகா­ணத்தை நிரந்­த­ர­மாக இணைக்க வேண்­டு­மென்று தமி­ழர்கள் கோரிய போது, வடக்கும், கிழக்கும் நிரந்­த­ர­மாக இணைய வேண்­டு­மாயின் அதில் முஸ்­லிம்­க­ளுக்கும் அதி­காரம் இருக்க வேண்டும். முஸ்லிம் பிர­தே­சங்­களை இணைத்து அதி­கார அலகு தரப்­பட வேண்­டு­மென்று கோரினார். இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்­கென ஓர் அதி­கார அலகு இருக்கும்போது, அந்த அதி­கா­ரத்தை பெறு­கின்­ற­வர்கள் முழு நாட்­டி­லு­முள்ள முஸ்­லிம்­க­ளுக்­காக குரல் கொடுப்பர் என்று தெரி­வித்து இருந்தார். பின்னர் அவர் தென்­கி­ழக்கு அலகை சந்­தி­ரிகா அர­சாங்­கத்தின் தீர்­வாக முன் வைத்த கதையும் மர்ஹூம் அஷ்­ரப்­பிடம் இருக்­கின்­றது. ஆயினும், அவர் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு கிழக்கு மாகா­ணத்தில் அதி­கார மையம் ஒன்று இருக்க வேண்­டு­மென்­பதில் உறு­தி­யாக இருந்தார். ஆனால், அவ­ரது மர­ணத்தின் பின்னர் முஸ்லிம் காங்­கிரஸ் வடக்கு, கிழக்கு முஸ்­லிம்­களின் குறிப்­பாக கிழக்கு முஸ்­லிம்­களின் அர­சியல் நலன்கள், அதி­கா­ரங்கள் குறித்து பேச­வில்லை.

தமி­ழர்­களின் அதி­கார மையத்தை ஏற்றுக் கொண்டு, அதற்­கேற்ற வகையில் செல்லும் ஒரு போக்­கையும், முஸ்­லிம்­க­ளுக்கு அதி­கார அலகு கிடைக்­காது போனாலும், அல்­லது கிழக்கு மாகாணம் வடக்­குடன் ஏதோ­வொரு அடிப்­ப­டையில் இணைந்து கொண்­டாலும் கவ­லை­யில்­லா­த­தொரு நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருப்­ப­தா­கவே இருக்­கின்­றது. அம்­பாறை மாவட்­டத்தில் முஸ்­லிம்­களை பெரும்­பான்­மை­யாகக் கொண்ட கரை­யோர மாவட்­டத்தைக் கூட முஸ்லிம் காங்­கிரஸ் கோரி இருந்­தது. இந்தக் கோரிக்கை கூட முஸ்லிம் காங்­கி­ர­ஸி­னாலோ, ஏனைய முஸ்லிம் கட்­சி­க­ளி­னா­லேயோ நிறை­வேற்றிக் கொள்ள முடி­ய­வில்லை. கரை­யோர மாவட்டம் தொடர்பில் கரை­யோர மாவட்­டமும் மண்­ணாங்­கட்­டியும் என்று தூக்கி எறிந்த நபர்­களைக் கொண்­ட­தா­கவே முஸ்லிம் காங்­கிரஸ் இருந்­தது. இம்­மா­வட்டக் கோரிக்கை குறித்து அக்­கட்­சியின் இன்­றைய தலைமைத்துவம் மௌன­மா­கவே இருக்­கின்­றது.

இதே போன்று மர்ஹூம் அஷ்ரப் முஸ்­லிம்­களின் காணிப் பிரச்­சினை பற்­றியும் அதிகம் பேசினார். பொன்­னன்­வெளி காணிப் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்­கை­களை எடுத்தார். இதனை ஜே.வி.பி. உட்­பட சிங்­கள கட்­சிகள் எதிர்த்தன. இதனை நிறை­வேற்­று­வ­தற்கு முன்­ன­தா­கவே அவர் மர­ண­ம­டைந்தார். ஆயினும், இன்று ஆட்­சியில் இருக்கும் முஸ்லிம் கட்­சி­க­ளினால் முஸ்­லிம்கள் இழந்த ஒரு அங்­குலக் காணியைக் கூட மீட்டுக் கொடுக்க முடி­ய­வில்லை. இவ்­வி­த­மாக எத­னையும் செய்து கொள்ள முடி­யாத நிலையில் அமைச்சர் பத­வி­களை மாத்­திரம் வைத்துக் கொண்டு ஒரு சில அபி­வி­ருத்­தி­களை செய்­து­விட்டு நாங்கள் அஷ்­ரப்­வா­திகள் என்று சொல்லிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். மர்ஹூம் அஷ்­ரப்பின் மர­ணத்­தோடு அவரின் கொள்­கை­களும் மர­ணித்து விட்­டன. ஆயினும், தேர்தல் காலங்­க­ளிலும், நினைவு தினங்­க­ளிலும் மர்ஹூம் அஷ்­ரப்பைப் பற்றி பேசிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இதே வேளை, மர்ஹூம் அஷ்ரப் தனது கையினால் ஆரம்­பித்து வைத்த ஒரு சில அபி­வி­ருத்திப் பணி­களைக் கூட பூர்த்தி செய்­யாது அஷ்­ரப்பை பற்றி பேசு­வதில் அர்த்­த­மில்லை. நிந்­தவூரில் சுமார் 24 வரு­டங்­க­ளாக அஷ்ரப் ஞாப­கார்த்த மண்­டபம் பூர்த்தி செய்­யப்­ப­டாத நிலையில் இருந்து கொண்­டி­ருக்­கின்­றது. மர்ஹூம் அஷ்­ரப்பின் கைக­ளினால் அடிக்கல் வைத்த ஒரு மண்­டபம் 24 வரு­டங்­க­ளாக பூர்த்தி செய்­யப்­ப­டாது இருக்­கின்­ற­தென்றால் இவர்கள் மர்ஹூம் அஷ்ரப்பின் மீது எத்தகைய அபிமானத்தைக் கொண்டுள்ளார்கள் என்று புரிந்து கொள்ள முடியும். அதே போன்றுதான் அவரது ஒலுவில் வீடு. அதனை கட்சியின் கிழக்கு மாகாண காரியாலயமாக்குவதாகவும், தாருஸ்ஸலாம் என்று பெயர் சூட்டுவதாகவும் தெரிவித்தார்கள். பின்னர் அதனை அஷ்ரப்பின் நினைவுகளைச் சுமந்ததொரு மியூசியமாக்க இருக்கின்றோம் என்றும் தெரிவித்துக் கொண்டார்கள். எதுவும் நடக்கவில்லை. நாங்கள் இப்படித்தான், பேசுவோம் செய்யமாட்டோம் என்பதாகவே மர்ஹூம் அஷ்ரப்பின் பாசறைக் குழந்தைகளின் கதையாக இருக்கின்றது.

இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸி லிருந்து பிரிந்து புதிய கட்சிகளை தோற்றுவித்தவர்கள் கூட மர்ஹூம் அஷ்ரபின் கொள்கைகளை வாழ வைக்கவில்லை. அவர்கள் முஸ்லிம் காங்கிரஸின் மீதும், அதன் தலைமையின் மீதும் அதிகம் குறை கண்டார்கள். ஆனால், அவர்களினால் அக்குறையை நிவர்த்தி செய்ய முடியவில்லை. அவர்கள் அமைச்சர் பதவிகள், தலைவர் பதவிகள் வேறு தேவைகளுக்காகவே புதிய கட்சிகளை ஆரம்பித்தார்கள்.

இவ்விதமாகவே மர்ஹூம் அஷ்ரப்பின் பாசறையில் அரசியல் கற்றுக் கொண்டவர்களின் கதைகள் இருந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் வருடாந்தம் மர்ஹூம் அஷ்ரப்பின் நினைவு தினத்தை மேற்கொண்டு மரணித்தவரை உயிர்ப்பிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளுகின்றார்கள். ஒரு நாளில் உயிர்ப்பித்து மறுநாளில் மரணிக்கச் செய்கின்றார்கள். தேர்தல் காலங்களில் போஸ்டர்களில் காட்சிப்படுத்துகின்றார்கள். இன்று இவர்களுக்கு மர்ஹூம் அஷ்ரப்பின் கொள்கைகளை விடவும், அவரின் போட்டோக்களே தேவைப்படுகின்றன. மர்ஹூம் அஷ்ரப் நல்ல அரசியல்வாதி, ஆனால், அவரால் நல்ல சீடர்களை உருவாக்க முடியவில்லை.

எஸ்.றிபான்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.