ஊடகங்களும் சமூகமும் படும்பாடு

0 3,143

‘ஜனா­தி­பதி சிறி­சேன நள்­ளி­ரவில் காரி­ய­மாற்­று­வதில் சூரன். இம்­முறை நள்­ளி­ரவில், அவர் மற்­றொரு கெட்­டித்­த­னத்தைக் காட்­டி­யுள்ளார். அரச ரூப­வா­ஹினி கூட்­டுத்­தா­ப­னத்தை தன்­னி­ட­முள்ள பாது­காப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்­துள்ளார். யுத்த காலத்­தில்தான் இத்­த­கைய நிலை மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. மேற்­படி கைய­கப்­ப­டுத்­தலின் பின்­ன­ணி­யிலும் யுத்­த­மொன்றே உள்­ளது. அது, சிறி­சேன – ரணில் யுத்­த­மாகும்.

ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்­கோரும் சந்­தர்ப்­பத்­தி­லேயே இப்­ப­றித்­தெ­டுப்பு நிகழ்ந்­துள்­ளமை நிலை­மையை மேலும் மோச­மாக்­கி­யுள்­ளது. ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் 68 ஆவது சம்­மே­ளன பிர­சா­ரத்­திற்­காக எத்­த­கைய பீதியோ வெட்­கமோ இன்றி ரூப­வா­ஹினி கூட்­டுத்­தா­பனம் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதன்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ரம சிங்­க­வுக்­கெ­தி­ராக கடும் தாக்­குதல் ஒன்று தொடுக்­கப்­பட்­டது.

கடந்த 10 ஆம் திகதி மாலை வேளையில் ஊடக இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­தன பல­வந்­த­மாக அரச நிரு­வா­கத்­தி­லுள்ள ரூப­வா­ஹினி தொலைக்­காட்­சியைக் கைப்­பற்­று­வ­தற்­காக தனது அடி­யாட்­களை அனுப்­பி­யுள்ளார். ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பிடி­யி­லுள்ள ஐ.ரீ.என். தலை­வரின் கட்­டுப்­பாட்­டுக்குள் ரூப­வா­ஹி­னி­யையும் கொண்டு வரு­வ­தற்கே மேற்­படி முயற்சி கையா­ளப்­பட்­டுள்­ளது. இரா­ஜங்க அமைச்­சரின் கையாட்­­களின் பிர­வே­சத்தால் ரூப­வா­ஹினி நிறு­வ­னத்­திற்­குள்ளே மோதல் நிலை­யொன்று உரு­வா­னது.

ஐ.ரீ.என். தொலைக்­காட்­சியின் நிரந்­தர வைப்­பி­லி­ருந்த பல மில்­லியன் ரூபா கணக்­கான பணத்தை உறிஞ்சிக் குடித்­த­வாறு தற்­போது அது இயங்கிக் கொண்­டி­ருக்­கி­றது. ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட ஊழி­யர்கள் அங்கு கட­மையில் உள்­ளார்கள். ஐ.தே.கட்­சியின் ஊது­கு­ழ­லாக செயற்­படும் ஐ.ரீ.என். தொலைக்­காட்சி சேவையின் தலை­வரை ரூப­வா­ஹினி கூட்­டுத்­தா­ப­னத்தின் தலை­வ­ராக நிய­மிக்க முயன்ற இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­தன அதனை இலா­ப­மீட்டும் ஒரு நிறு­வ­ன­மாக மாற்­று­வ­தற்கே அவ்­வாறு செய்­த­தாகக் கூறு­வது பொய்­யான வாத­மாகும். ரூப­வா­ஹினி சிறி­சே­ன­வுக்கும்– சஜித்­திற்கும் சார்­பான பிர­சா­ரத்­தினை முன்­னெ­டுத்து வரு­வ­தாலே அதனை தனது உற­வுக்­கா­ர­ரான விஜே­வர்­த­ன­விடம் கைய­ளிக்­கவே எத்­த­னித்­துள்­ள­தென்­பதே உண்­மை­யாகும்.

சிறி­சே­னவோ, ரணிலோ அல்­லது ராஜபக் ஷவோ ஊட­கங்­களை தமது அர­சியல் பிர­சார கரு­வி­யாக பயன்­ப­டுத்­து­வ­தையே இலக்­காகக் கொண்­டுள்­ளனர். அத்­துடன் தம் கையாட்­க­ளுக்கு தொழில் வழங்கும் ஒரு சாத­ன­மா­க­வுமே அதனைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர். விஜே­வர்­தன அதனைக் கைப்­பற்ற முனைந்­ததும், நள்­ளி­ரவு வர்த்­த­மானி அறி­வித்தல் மூல­மாக அதனை ஜனா­தி­பதி தனது அமைச்சின் கீழ் கொண்டு வரவும் அதுவே கார­ண­மாகும்.

அரச ஊட­கங்கள் சுயா­தீன ஆணைக்­கு­ழுவின் கீழ் இருந்­தி­ருக்­கு­மானால், இவர்கள் இரு­வ­ராலும் இவ்வாறு நாடகம் ஆட முடி­யாது.

அரச ஊட­கங்­களை சுயா­தீன ஆணைக்­கு­ழு­வொன்றின் கீழ் கொண்டு வரு­வ­தற்­கான ஒரு வாய்ப்பு ஜே.வீ.பி.க்கு 2002 ஆம் ஆண்டு இருந்­தது. அவ்­வாண்டில் கூட்­ட­ர­சாங்­கத்­திற்கு அவர்­க­ளது கட்சி கைகொ­டுத்த போது இக்­கோ­ரிக்­கை­யையும் முன்­வைத்­தி­ருக்­கலாம். ஆனால் அவ்­வாறு செய்­ய­வில்லை. அதே­போன்று யாப்பின் 19 ஆவது திருத்­தத்­திற்கு ஆத­ரவு வழங்­கும்­போதும் இந்­நி­பந்­த­னை­யையும் முன்­வைக்க ஜே.வீ.பி.க்கு மட்­டு­மல்ல, தமிழர் கூட்­ட­மைப்­புக்கும், நல்­லாட்­சி­யி­லுள்ள சிவில் சமூகக் குழுக்­க­ளுக்கும் வாய்ப்­பி­ருந்­தது. இவர்கள் எவரும் அவ்­வாறு அரச ஊட­கங்­களை ஜன­நா­யக மயப்­ப­டுத்தத் தவ­றி­விட்­டனர்.

கம்­யூ­னிஸ நாடு­களான சீனா, கியூபா, வியட்நாம் போன்ற நாடு­களில் ஊட­கங்கள் அரசின் கட்­டுப்­பாட்டில் இருப்­ப­து­போன்று இங்கும் இருக்கும் என்று ஜே.வீ.பி. எண்­ணி­யி­ருக்கக் கூடும். சம்­பி­ர­தாய கம்­யூ­னிஸ சிந்­த­னைக்குள் இருந்தே அவர்கள் அவ்­வாறு எடை போடு­கி­றார்கள். அரச ஊட­கங்கள் குறித்து ஜே.வீ.பி.க்கு தூர நோக்­கொன்றும் இல்லை.

நல்­லாட்­சி­யி­லுள்ள சிவில் சமூகக் குழுக்­களோ, அரச ஊட­கங்கள் ஐ.தே.க.வின் கீழ் இருக்கத் தக்­க­வாறே தம் பிர­சா­ரப்­ப­ணி­களை முன்­னெ­டுத்துச் செல்­லலாம் என்ற நிலைப்­பாட்டில் உள்­ளன. அதனால் அவை ஜன­நா­யக மயப்­ப­டுத்­து­வதில் கரி­சனை காட்­டா­துள்­ளன. அதனால் அவை இன்னும் ஐ.தே.கட்­சியின் பின்னால் சென்று கரு ஜய­சூ­ரி­யவை மேடை­யேற்ற பாவாடை விரித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன.

தமிழர் கூட்­டணி தனிப்­பட்ட அர­சியல் கட்சி என்ற வகையில், ஊடக விட­யத்தில் கவனம் செலுத்­து­வ­தில்லை. அவர்­க­ளது குறிக்கோள் எல்லாம் அதி­காரப் பகிர்­வொன்­றி­லேயே உள்­ளன. அரச ஊடகம் மட்­டு­மன்றி பொது ஊட­கங்­க­ளதும் சீர­மைப்புக் குறித்து அவர்கள் அக்­கறை காட்­டு­வ­தில்லை.

சிறி­சே­னவும் – ரணிலும் தம் குடும்பச் சொத்­துப்­போன்று அரச ஊட­கத்தைப் பற்றி பிடித்துக் கொண்­டி­ருக்க மேற்­படி கவ­ன­யீ­னமே கார­ண­மா­க­வுள்­ளது. சிறி­சே­னவின் ஒக்­டோபர் சதியின் பின்னர், அப்­போது ஊடக அமைச்­ச­ராக விருந்த மங்­கள சம­ர­வீர, அரச ஊட­கங்­களை மக்கள் சேவை ஊட­கங்­க­ளாக மாற்­று­வ­தற்­கென குழு­வொன்றை நிய­மித்தார். இன்று வரையும் அக்­குழு செய்­த­தொன்­று­மில்லை. மாற்றம் ஒன்­றுக்­காக அவர்கள் பல்­வேறு சமூகக் குழுக்­க­ளுடன் நடத்­திய கலந்­து­ரை­யா­டல்கள் கூட அறைக்கு வெளியே வரவும் இல்லை.

சிறி­சேன நள்­ளி­ரவு வெளி­யிட்ட வர்த்­த­மானி அறி­வித்தல் போன்றே, ரூப­வா­ஹினி கூட்­டுத்­தா­ப­னத்­திற்குள் தம் அடி­யாட்­களை அனுப்பி அதன் தலை­மையைக் கைப்­பற்ற எத்­த­னித்த ரணிலின் நட­வ­டிக்­கை­யையும் வன்­மை­யாகக் கண்­டிக்க வேண்டும். மேற்­படி மோதல் தொடர்­பாக, ஜன­நா­ய­கத்­திற்கு மதிப்­ப­ளிக்கும் மக்கள் என்ற வகையில், எம்­மீதும் பொறுப்­பொன்­றுள்­ளது. அது, அரச ஊட­கங்கள் சுயா­தீன மக்கள் சேவை­யாக மாற்றம் காண வேண்­டு­மென்­ப­தே­யன்றி எந்தத் தரப்­பி­ன­ரதும் கைத்­த­டி­யாக மாறு­வ­தற்­கல்ல.

ஜன­நா­யக சமூ­க­மொன்றின், ஊட­கங்­களின் அடிப்­படைக் கோட்­பா­டாக அமை­வது, நாட்டின் பிர­ஜை­களைத் தெளி­வூட்டும் பணி­யாகும். அத்­துடன் சமூ­கத்தைப் பாதிக்கும் முக்­கிய கார­ணிகள் தொடர்­பாக வாதப்­பி­ரதி வாதங்­க­ளுக்கு களம் அமைத்துக் கொடுப்­ப­து­மாகும்.

ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பொறுப்­புக்கள் இவ்­வா­றி­ருக்க ஒரு சில ஊட­க­வி­ய­லா­ளர்­களோ இன்னும் மட­மை­யு­கத்­திலே இருந்து கொண்­டி­ருக்­கி­றார்கள்.
முன்னாள் ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் சர்வ சக்­தியால் தீராத வியா­தி­களைக் குணப்­ப­டுத்தித் தரு­வ­தாக பகி­ரங்க அழைப்பு விடுத்­தி­ருந்தார். இதனை அறிந்த மக்கள் சுமார் 20 ஆயிரம் பேர் அளவில் குறிப்­பிட்ட ஹொர­வப்­பொத்­தான திடலில் ஒன்று திரண்­டனர். கொளுத்தும் வெயிலில் ஜனத்­திரள் மத்­தியில் இருந்த நோயாளி மூவர் அவ்­வி­டத்­திலே உயிர்த்­து­றந்­துள்­ளனர். சிறி­சே­னவால், ரூப­வா­ஹினி பறித்­தெ­டுக்­கப்­பட்­ட­தற்கு விடுக்­கப்­பட்ட எதிர்ப்பில் நூறில் ஒரு பங்­க­ள­வா­வது மேற்­படி மூடச் செயலால் பலி­யான மூன்று உயிர்கள் குறித்தும் எதிர்ப்­ப­லைகள் மேலெ­ழ­வில்லை. அது மாத்­தி­ர­மல்ல, இது விட­யத்தை ஊட­கங்கள் கூட முக்­கி­யத்­துவம் கொடுக்­காது மௌன­மாக நடந்­து­கொண்­டன. இது ஏன் என்று சிந்­தித்துப் பாருங்கள். இத்­த­கையை கைங்­க­ரி­யத்­திற்கு பெரும்­பாலும் ஊட­கங்­க­ளால்தான் அதிக பங்­க­ளிப்பு வழங்­கப்­ப­டு­கின்­றன. மாய, மந்­திர, தந்­தி­ரங்­க­ளுக்கு ஊட­கங்­கள்தான் கவர்ச்­சி­யான விளம்­ப­ரங்­களை வெளி­யிட்டு வரு­கின்­றன. அத­னால்தான் மேற்­படி பாதிப்பு அவற்றால் மூடி மறைக்­கப்­ப­டு­கின்­றன. இன்று ஒரு­சில வாராந்த இதழ்கள் மேற்­படி குருட்டு நம்­பிக்­கை­யூட்­டும் பொய்க் கதை­களை வைத்தே பிழைப்பு நடத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றன.

சில காலங்­க­ளுக்கு முன்னர் நிக­வெ­ரட்­டியில் அரச மர­மொன்றில் புத்­த­பிரான் தரிசனம் பெற்­றுள்ளார் என்ற மோச­டி­யான தகவல் ஊட­கங்­க­ளாலே பரப்­பப்­பட்­டன. இதனால் பல ஆயி­ரக்­க­ணக்­கான மக்­களை அங்கு திரளச் செய்­தனர். அதன்­பின்னர், குரு­நாகல் விகா­ரை­யொன்றில் தண்ணீர் பரு­கு­வ­த­னூ­டாக நோய் சுக­மாக்­கப்­ப­டு­வ­தான ஊடக செய்­தி­யூ­டாக அங்கும் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் திரண்­டனர். இப்­போது சர்வ சக்­தியால் நோய் குணப்­ப­டுத்தும் தக­வலால் மக்கள் திர­ளு­கின்­றனர்.

மறு­பு­றத்தில் எமது நாட்டு அர­சியல் தலை­வர்கள் இந்­தி­யா­வுக்குச் சென்று தெரி­யாத தெய்­வத்­திடம் அச்­சத்­துடன் கடும் வழி­பாடு நடத்தி வரு­கி­றார்கள். இப்­ப­டிப்­பட்டோர் வாழும் நாட்­டி­லுள்ள மக்­க­ளுக்கு இந்­தியா போய் அவ்­வாறு ஈடு­பட முடி­யாத நிலையில் ஹொர­வப்­பொத்­தா­னைக்­கு போயா­வது எண்ணத்தை நிறை­வேற்­றாது வேறு என்­னதான் செய்ய முடியும்? சர்வ சக்தி மூல­மா­வது தம் நோயைக் குணப்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­காக ஆயி­ரக்­க­ணக்கில் மக்கள் செல்­கி­றார்கள் என்றால் எமது நாட்டு மக்கள் எந்­த­ளவு தூரம் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள் என்­பது நன்கு தெளி­வா­கி­றது. இம்­மக்­களை மூட நம்­பிக்­கையின் பால் திசை திருப்­பிக்­கொள்ள முடி­வ­து­போல, இவர்­களை அர­சியல் வாதி­க­ளாலும் தம் பக்கம் வளைத்­துக்­கொள்­ளவும் இல­கு­வாக முடி­யு­மா­கி­றது.
ஹொர­வப்­பொத்­தா­னையில் கடந்த வாரம் மற்­றொரு சம்­ப­வமும் நடந்­தே­றி­யுள்­ளது. தெய்­வ­சக்­தியால் பொய் சுகப்­ப­டுத்தல் செய்த அதே பன்­ச­ல­யி­லுள்ள சிறுவர் பிக்­குகள் இருவர் சொக்லேட் திரு­டிய குற்­றச்­சாட்டில் கடையின் நப­ரொ­ரு­வரால் கடு­மை­யாக அடித்து உதைக்­கப்­பட்ட சம்­ப­வமே அது­வாகும்.

இந்தச் சம்­ப­வத்­தி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­வது சிறு­வர்­களை இளம் வயதில் பிக்­கு­க­ளாக ஈடு­ப­டுத்­து­வது எவ்­வ­ள­வு­தூரம் அவர்­களை துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குள்­ளாக்­கு­கி­றது என்பதாகும். இதனை ஒருபுறம் தள்ளிவிட்டு தாக்கிய நபருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பதில் நாமும் உடன்படுகின்றோம். இது இவ்வாறிருக்க களுத்துறை போதியைப் பார்வையிடச் சென்ற போரா முஸ்லிம் குழுவொன்றை சிங்கள பௌத்தர் ஒருவர் தூஷித்து விரட்டிய சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. போரா குழுவில் இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குகின்றனர். குறித்த சிங்கள பௌத்தர் போரா முஸ்லிம் குழுவைப் பார்த்து ஆங்கில மொழியில் தூற்றியவாறு துரத்தும் காட்சி சமூக வலைத்தளத்தில் நன்கு பதிவாகியுள்ளது. அவரால் பிரயோகிக்கப்பட்ட வார்த்தையில், ‘‘இது எங்கள் நாடு; எதற்காக இங்கு வந்தீர்கள்? இது இந்தியாவைப்போன்று முஸ்லிம் நாடல்ல; போங்கள்…’’ என்று ஆங்கில மொழியில் கூறியவாறு, பின்னர் சிங்களத்தில் ‘‘இவனுகளை இங்கே கொண்டுவராதே…’’ என்றும் கூறியுள்ளார்.

அப்போது போரா குழுவிலிருந்த ஒரு பெண் அமைதியான முகச் சுபாவத்தோடு, ‘‘எங்களை மன்னித்து விடுங்கள்’’ என்று விடைபெற்றுள்ளார்.
இந்த இடத்தில் உண்மையான பௌத்தர் யார்?

சிங்­க­ளத்தில்: சுனந்த தேசப்­பி­ரிய
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்

நன்றி: ராவய வார இதழ்

Leave A Reply

Your email address will not be published.