சஜித்தை வேட்­பா­ள­ராக்க பங்­காளி கட்­சிகள் பேச்சு

0 633

ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­சவை ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றக்க மறுக்கும் நிலையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பரந்த கூட்­ட­ணி­யொன்றை அமைத்து கூட்­ட­ணியின் வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­சவை கள­மி­றக்க பங்­கா­ளிக்­கட்­சிகள் தீர்­மானம் எடுத்­துள்­ள­துடன், அதனை நிறை­வேற்றும் வகையில் அவ­சர கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் முன்­னெ­டுக்க முனைந்­துள்­ளனர். 

ஜனா­தி­பதித் தேர்தல் திகதி அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் விட­யத்தில் கட்­சிக்குள் தொடர்ந்தும் நெருக்­க­டிகள் நிலவி வரு­கின்­றன. இந்­நி­லையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் கூட்­டணிக் கட்­சிகள் தனித்­த­னியே சந்­திப்­புக்­களை மேற்­கொண்டு தீர்­மா­னங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன.

நேற்று முன்­தினம் இரவு சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவை சந்­தித்த அமைசர் சம்­பிக்க ரண­வக்க ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து கலந்­து­ரை­யாடல் ஒன்­றினை முன்­னெ­டுத்­துள்ளார். ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் விட­யத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு கூட்­டத்தில் தீர்­மானம் எடுப்­பதில் எந்த அர்த்­தமும் இல்லை, ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்­டத்தில் இந்த விட­யத்தை கலந்­து­ரை­யாடி அதில் பெரும்­பான்மை ஆத­ரவை பெறும் நபர்கள் யார் என்­ப­தையும், மக்­களின் செல்­வாக்கை பெற்­ற­வரும் பிர­பல்­ய­மான நப­ராக கட்­சியில் இருப்­ப­வ­ரையே கள­மி­றக்க வேண்டும். அவ்­வாறு கள­மி­றக்­கினால் மட்­டுமே கூட்­ட­ணி­யாக எம்மால் வெற்­றி­பெற முடியும். இந்த விட­யத்தில் இர­க­சி­ய­மாகப் பேச்­சு­வார்த்தை நடத்தி இர­க­சி­ய­மாக வேட்­பா­ளரை கள­மி­றக்கி எந்தப் பயனும் இல்லை. ஆகவே இது­கு­றித்து நீங்­களும் கவனம் செலுத்த வேண்டும்.

தனித்து தீர்­மானம் எடுத்தால் கட்­சி­யாக இணைந்து பய­ணிக்­கவும் எவரும் முன்­வ­ரப்­போ­வ­தில்லை, கட்சி இரண்­டாக பிள­வு­படும். ஆகவே உங்­களின் நிலைப்­பாட்டை பிர­த­ம­ரிடம் எடுத்­துக்­கூறி ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்­டத்தில் ஒரு தீர்­மானம் எடுக்க வலி­யு­றுத்த வேண்டும் என்ற கார­ணி­களை அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இந்­நி­லையில் நேற்று பாரா­ளு­மன்ற கட்­டி­டத்­தொ­கு­தி­யிலும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். இதன்­போதும் பரந்த கூட்­டணி அமைத்து தேர்­தலை கையாள்­வது குறித்தே பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளனர். இந்த சந்­திப்பில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பெரும்­பா­லான உறுப்­பி­னர்கள் கலந்­து­கொண்­டுள்­ளனர். ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவை கள­மி­றக்க எதிர்ப்பு தெரி­வித்தால் அந்த முயற்­சியை கைவிட்டு ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சிகள் அனைத்­தையும் மற்றும் தம்­முடன் இணைந்து பய­ணிக்­கக்­கூ­டிய தமிழ், முஸ்லிம் கட்­சிகள் அனைத்­தையும் இணைத்­துக்­கொண்டு பரந்த கூட்­டணி ஒன்­றினை உரு­வாக்கி அதன் வேட்­பா­ள­ராக அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவை நிய­மிப்போம் என்ற யோச­னையை முன்­வைத்­துள்­ளனர். இதனை அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ச­வி­டமும் கூறியுள்ளதுடன் இந்த வேலைத்திட்டம் குறித்த துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளனர். இதில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளான தமிழ், முஸ்லிம் கட்சிகளும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர் என கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.