புதிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தை இயற்ற அங்கீகாரம்

0 1,265

ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­த­லை­ய­டுத்து அவ்­வா­றான தாக்­கு­தல்­களை எதிர்­கா­லத்தில் தவிர்க்கும் வகையில் புதிய பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­ட­மொன்­றினை இயற்­றிக்­கொள்­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

இது தொடர்­பாக அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்ட சட்ட மூலத்­துக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது.

வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­ப­னவின் தலை­மையில் நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள மற்றும் பெரும் நக­ரங்கள் மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க உள்­ள­டங்­கிய அமைச்­ச­ரவைக் குழு முன்­வைத்த பரிந்­து­ரை­களின் அடிப்­ப­டையில் இந்தப் புதிய சட்­ட­மூலம் வரைபு செய்­யப்­பட்­டுள்­ளது.

ஐ.எஸ்.அமைப்­புடன் தொடர்­பு­பட்ட பயங்­க­ர­வாதக் குழு­வொன்று கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்­கொண்ட தாக்­கு­த­லை­ய­டுத்து அவ்­வா­றான தாக்­கு­தல்­களைத் தவிர்க்கும் வகையில் இந்­தியா, பிரித்­தா­னியா ஆகிய நாடு­களில் அமுலில் உள்ள பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உதா­ர­ண­மாகக் கொண்டு இந்தச் சட்­ட­மூலம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் இலங்­கை­யர்கள் நாட்­டுக்கு வெளியில் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வதைத் தடுக்கும் வகையில் அமை­ய­வுள்­ளது என அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்தார். தற்­போது அமு­லி­லுள்ள பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தில் இலங்­கைக்கு வெளியில் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­ப­வர்கள் தொடர்பில் எதுவும் குறிப்­பி­டப்­பட்­டில்லை.

புதிய பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தில் இணை­யத்­த­ளங்கள் ஊடாக மேற்­கொள்­ளப்­படும் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களும் கவ­னத்தில் கொள்­ளப்­பட்­டுள்­ளது. தற்­போது அமு­லி­லுள்ள பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்கி அதற்குப் பதி­லாக புதிய பயங்­க­ர­வாத சட்­ட­மொன்­றுக்­கான சட்­ட­மூலம் சில மாதங்களுக்கு முன்பு பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டிருந்தாலும் சில தரப்புகள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்ட மையினால், அது இதுவரை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.