முஸ்லிம் பெண்களின் கலாசார ஆடை குறித்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்

கிண்ணியா நகர சபை உறுப்பினர் மஹ்தி

0 562

நாட்டில் தற்­போது முஸ்லிம் பெண்கள் எதிர்­நோக்கி வரும் கலா­சார ஆடை குறித்த பிரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்­வினை அர­சாங்கம் பெற்றுத் தர வேண்டும் என கிண்­ணியா நகர சபை உறுப்­பினர் எம்.எம். மஹ்தி வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

கிண்­ணியா நக­ர­ச­பையின் 17 ஆவது அமர்வு நேற்று நடை­பெற்­ற­து. அதில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். தொடர்ந்து அவர் உரை­யாற்­று­கையில், பல்­லின சமூகம் வாழும் இந் நாட்டில் ஆடை சுதந்­திரம் என்­பது சட்­டத்தால் தெளி­வாக வரை­யறை செய்­யப்­பட்­டி­ருந்­தாலும் ஆங்­காங்கு சில கசப்­பான சம்­ப­வங்கள் அரங்­கேறிக் கொண்டே இருக்­கின்­றன.

சட்­ட­மா­னது சுற்­ற­றிக்கை, வர்த்­த­மானி அறி­வித்­தல்கள் ஊடாக காலத்­திற்கு காலம் தெளி­வு­ப­டுத்­தப்­பட்டும் அதனை அறிந்­தி­ராத அல்­லது தவ­றான புரி­தல்­களைக் கொண்ட சில அரச அதி­கா­ரி­க­ளினால் பாட­சா­லைகள், பரீட்சை மண்­ட­பங்கள், வைத்­தி­ய­சா­லைகள் போன்ற இடங்­களில் வேண்­டு­மென்றே ஏற்­ப­டுத்­து­கின்ற இன்­னல்­க­ளுக்கு முஸ்லிம் பெண்­களும் மாண­வி­களும் ஆளா­கின்­றனர்.

பரீட்­சை­களின் போது எங்­கேனும் ஓரி­டத்தில் மேற்­பார்­வை­யா­ளர்­க­ளினால் மாண­விகள் இவ்­வா­றான இன்­னல்­க­ளுக்கு முகங்­கொ­டுப்­பதால் பரீட்­சார்த்­திகள் மனோ­நி­லை­யாலும் பாதிக்கப் படு­கின்­றனர். அதே போன்று வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு சிகிச்­சைக்­காக வரும் நோயா­ளி­களும், தங்கி சிகிச்சை பெறு­ப­வர்­களும், பய­ணி­களும் இவ்­வா­றான பல அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு முகங்­கொ­டுப்­பதும் அவ்­வப்­போது ஆட்­சி­யா­ளர்கள் தற்­கா­லிக தீர்வு வழங்­கு­வதும் தொடர்ந்த வண்­ணமே உள்­ளன.

எனவே இனி­மேலும் இவ்­வா­றான பிரச்­ச­ினைகள் ஏற்­ப­டா­த­வாறு சம்­பந்­தப்­பட்ட அனைத்து தரப்­பி­ன­ருக்கும் உரிய முறையில் அறி­விப்­பதன் மூலம் சட்­ட­திட்­டங்­க­ளுக்கு உட்பட்டு முஸ்லிம்கள் கலாசார ரீதியான ஆடை அணிவதில் இருக்கின்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினை பெற்றுத் தந்து அதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றார்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.